Monday, July 31, 2006

புதையல்

கோவி கண்ணன் தன்னிடம் இருக்கும் புத்தகங்களைப் பற்றி சொல்லி இருந்தார் என்னையும் சொல்லச் சொல்லி கூப்பிட்டு இருந்தார். நிறைய புத்தகங்கள் இருக்கிறது நாலைந்து மூட்டை பரண் மேல் இருக்கிறது ஆகவே அனைத்தையும் பட்டியலிட முடியாது ஆகவே உடனே நினைவுக்கு வந்தது குறித்து பட்டியலிடுகிறேன் உடனே நினைவுக்கு வந்தது பிடித்த நாவலாகவும் இருக்கும் என்பதால் அதனைப் பற்றி சிறு குறிப்பும் கொடுத்திருக்கிறேன். தற்சமயம் நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாங்குவதால் ஆங்கிலப் புத்தகங்கள் பட்டியலில் அதிகமாக இருக்கும் ஆனால் நான் அதிகமாக தமிழ் புத்தகங்களையே படித்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு

இந்தப் புத்தகங்களின் சிறப்பைக் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை

இரும்புக் குதிரைகள், மெர்குரிப் பூக்கள், இனிது இனிது காதல் இனிது

பாலகுமாரனின் நாவல்கள் நிறைய என்னிடம் இருக்கிறது. ஒரு காலத்தில் பாலகுமாரன் எழுதிய அனைத்து நாவல்களையும் படிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் பின்னாளில் அவர் கருத்துக்களுடன் என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. இவரின் நாவல்களில் வரும் வாழ்வியல் குறித்த இவருடைய பார்வை மிகவும் பிடிக்கும். அவருடைய நாவல்களில் இவை மூன்றும் எனக்கு பிடித்தவை.

சங்கர்லால் கதைகள்

இது இரண்டு மூன்று நாவல்கள் இருக்கிறது இதுவும் மிகவும் பிடிக்கும் நம்ம ஜேம்ஸ்பாண்ட் martini shaken but not stirred என்று ஸ்டைலாக சொல்வது போல இவர் ஸ்டைலுக்கு தேநீர் குடிப்பது, கருப்புக் கண்ணாடி என்று இவரைப் பற்றி மனதில் ஒரு இமேஜே உண்டு.

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்களின் நாவல் ஒன்று

பெயர் ஞாபகம் இல்லை கதையும் ஒன்றும் அசாதாரணமான கதை கிடையாது ஆனால் அற்புதமான நடை கொண்ட நாவல்.

A Breif History of Time, 2 more novels about Stephen Hawkings

ஸ்டீபன் ஹாகிங்ஸுடைய நாவல் நம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய நாவல். சில இடங்கள் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும். வலைத் தளங்களில் தேடித் தேடி புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மீக சிந்தனைகளை பல வகையில் மாற்றி அமைத்த நாவல். ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள் நான் எழுதி வரும் ஆன்மீகம், அறிவியல், அகங்காரம் தொடரில் இதனை விளக்க முயற்சி செய்து வருகிறேன்.

ஹாரிப் பாட்டர் அனைத்து புத்தகங்களும்

இந்த புத்தகத்தை குழந்தைகள் புத்தகம் என்று ஒதுக்கி வைத்து விட்டு குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குபவர் பலரைப் பார்த்திருக்கிறேன். இதில் உள்ள புதிர்கள் முதல் நாவலில் ஏதேச்சையாக நாம் அறிந்து கொண்ட விஷயங்கள் 5ம் நாவலிலோ 6ம் நாவலிலோ நம்மை ஆச்சர்யப்பட வைக்க, 5ம் நாவலைப் படித்தவுடன் முதல் நாவலைப் படித்தால் அது வித்தியாசமாக தோன்ற வைப்பது என்று கிளாஸிக் நாவல் இது.

Eragon and Eldest

ஹாரிப் பாட்டர் போலவே வந்த இன்னும் ஒரு நாவல் இது. எரகான் நாவலை வெளியிட்ட பொழுது இந்த நாவலாசிரியரின் வயது 16. ஹாரிப் பாட்டர் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல். ஹாரிப் பாட்டரின் க்டைசி நாவல் போலவே இந்த புத்தகத்தின் கடைசி நாவலை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

டான் பிரவுனின் எல்லா நாவல்களும்

டாவின்ஸி கோட் மூலமாக பிரபலமானாலும் இவருடைய அனைத்து நாவல்களுமே அற்புதமாக இருக்கும். பல சரித்திர விஷயங்களை நமக்கு சொல்லி விறுவிறுப்பான நடையில் செல்லும் ஏஞ்சல்ஸ் அண்ட் டிமன்ஸ் எனக்கு இவருடைய நாவல்களிலேயே பிடித்த நாவல்.

Alchemist, Veronica decides to die, Eleven Minutes

Paulo Coelho அவருடைய நாவலகள் வித்தியாசமானவை Alchemist பலர் படித்திருப்பீர்கள் அவருடைய மற்ற நாவல்களும் நன்றாகவே இருக்கும் அனைவரும் படிக்க வேண்டியவை இவை.

எனக்கு பிடித்த நாவல்களை உடனே நினைவுக்கு வந்த நாவல்களை இங்கு கொடுத்திருக்கிறேன். இன்னும் Kane and Abel, பச்சை வயல் மனது, சில நேரங்களில் சில மனிதர்கள், லைப் ஆப் பை, Chronicles of narnia என்று சொல்லிக் கொண்டே போகலாம் நிறைய புத்தகங்கள் உள்ளன. எந்தெந்த புத்தகங்கள் உள்ளன என்பது கூட ஞாபகம் இல்லை.அனைத்தையும் என்றாவது எடுத்துப் பார்க்க வேண்டும்.

6 comments:

')) said...

குமரன்

தங்கள் புத்தக ரேஞ்ச் வியக்கவைக்கிறது. பலப்பல புத்தகங்கள் நான் படிக்காதவை. ஆனால் பிரபலமாக கேள்விப்பட்டிருக்கிறேன். சில (ஹாரிபாட்டர் போல...) படிக்க இஷ்டமில்லை. இந்த புத்தகங்களின் கருத்துச் சுருக்கங்களை வழங்கினால் என் போன்ற அறிவிலிகளுக்கு சுலபமாக இருக்குமே?

நன்றி

')) said...

புதையலை பார்த்தேன் இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு கடிக்க வருகிறேன் :)

')) said...

ஜயராமன் நன்றி இதில் உள்குத்து எதுவும் இல்லையே? ஹாரிப் பாட்டர் போன்ற புத்தகங்களுக்கு கருத்து சுருக்கம் எல்லாம் வழங்குவது கடினம் மற்ற நல்ல புத்தகங்களுக்கு வழங்கும் யோசனை இருக்கிறது பார்க்கலாம்.

')) said...

//பாலகுமாரனின் நாவல்கள் நிறைய என்னிடம் இருக்கிறது. ஒரு காலத்தில் பாலகுமாரன் எழுதிய அனைத்து நாவல்களையும் படிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் பின்னாளில் அவர் கருத்துக்களுடன் என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. //
நிறைய பேர் இதே கருத்துக்களை சொல்கிறார்கள்

//பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு

இந்தப் புத்தகங்களின் சிறப்பைக் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை///

சொல்லித்தான் தெரிந்து கொள்கிறேன்... ஏனோ சாண்டில்யனை சீண்டியதிலிருந்து மற்ற சரித்திர கதைகளில் கவனம் செல்லவே இல்லை :)

சுஜாதா படித்திருக்கிறேன் ... பாலகுமாரன் படித்ததும் இல்லை, இல்லை.

ஹரி பட்டர் ... சாரி ஹாரி பாட்டர் படமே தியேட்டரில் பார்த்துவிடுவதால் நாவல் நோ சாய்ஸ் :)

')) said...

செந்தில்குமரன்,
இன்னும் ஓய்வு முடிந்து திரும்பவில்லையா எழுதுவதற்கு?

')) said...

நான் அப்பால் போயிருந்ததைக் கூட கவனித்ததற்கு நன்றி. திரும்ப வந்து கொண்டே இருக்கிறேன்.