Saturday, July 29, 2006

ஆன்மீகம் அறிவியல் அகங்காரம் - 2

ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். அந்த நான்கு பேரில் நான் கண்டிப்பாக கிடையாது.ஆகவே இதனை நான் விளக்குவது சரி இருக்காது இருந்தாலும் சிறிது முயற்சி செய்கிறேன்.நீங்கள் ஒரு புகை வண்டியில் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் இரண்டு ஒளிக் கதிர்கள் புறப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செயது கொண்டு இருப்பதால் மேற்கில் இருந்து வரும் ஒளிக் கதிர் உங்களை முதலில் வந்து சேரும் பின்தான் கிழக்கில் இருந்து வந்த ஒளிக் கதிர் வந்தடையும் அல்லவா? அதனால் உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான் உருவானது என்று நினைப்பீர்கள் ஆனால் பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா?

அப்படியானால் நேரம் என்பது நிலையானது அல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது அல்லவா? இது சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாக தோன்றினாலும் இது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். அந்த சமயம் வரை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் நிலையான நேரம் என்ற ஒன்றையே நம்பி வந்தார்கள். இது அந்த நம்பிக்கைகள் அனைத்தையுமே தகர்த்து எறியும் வகையில் அமைந்தது.

ஆனால் ஐன்ஸ்டினின் இந்தக் கண்டுபிடிப்பு அவர் எதிர்பார்க்காத ஒரு விளைவையும் ஏற்படுத்தியது. அவரின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த ஒரு சக விஞ்ஞானி இந்த பிரபஞ்சமும் நிலையானது இல்லை அது வேகமாக பரந்து விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கி கொண்டிருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார். இது ஐன்ஸ்டினை மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தள்ளியது. மதத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்ட ஐன்ஸ்டின் இந்தக் கண்டுபிடிப்பு தன் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார். அந்த சமயத்தில் தான் இவருடைய மிக புகழ் பெற்ற "GOD DOESNT PLAY DICE WITH THIS UNIVERSE". அதாவது கடவுள் இந்த உலகில் தாயம் விளையாடவில்லை எல்லாமே எழுதி வைத்தது போலத்தான் நடக்கும் என்று கூறினார்.அதனால் தன்னுடைய கண்டுபிடிப்பில் சில மாற்றங்களைச் செய்து இந்த பிரபஞ்சம் நிலையானது என்று மாற்றி வெளியிட்டார்.

ஆனால் ஹீபில் 1928 தன்னுடைய தொலை நோக்கி மூலம் இந்த உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று நிருபித்தார்.

பிறகு ஐன்ஸ்டின் தான் தன்னுடைய கண்டுபிடிப்பில் மாற்றம் செயத்தது தன் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறினார்.

இந்த சமயத்தில் அறிவியலில் இருந்து ஆன்மீகத்திற்கு நாம் மாற வேண்டி இருக்கிறது. இங்கே நாம் யோசிக்க வேண்டியது இந்தக் கண்டுபிடிப்பு உலகில் உள்ள எல்லா மதங்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மிக புறம்பாக உள்ளது என்பதைக் காண வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் எல்லாமே எழுதி வைத்தபடிதான் நடக்கிறது போன்ற நம்பிக்கைகளை உடைத்து எறியும் விதமாக உள்ளது. அதாவது கடவுளை நம்முடைய மதங்கள் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறதோ அது அத்தனையும் உண்மை இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் வகையில் உள்ளது. ஐன்ஸ்டின் மிகப் பெரிய அறிவாளி அவர் தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டார். ஆனால் அகங்காரம் கொண்ட எத்தனை மனிதர்களால் இது போல ஒத்துக் கொண்டு மத துவேஷங்கள் கொள்ளமால் இருக்க முடியும்? எத்தனை பேர் ராமரும் இல்லை அல்லாவும் இல்லை கிறிஸ்துவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியும்? தெரியவில்லை.

அடுத்த பகுதியில் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதனால் என்ன என்ன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன அது மேலும் நம்முடைய ஆன்மீக சிந்தனைகளை மாற்றி அமைக்கும் விதமாக இருக்கிறது. மனிதனின் அகங்காரம் எப்படி அப்படியே இருக்கிறது என்று எழுத முற்படுகிறேன்.

6 comments:

')) said...

பிரபஞ்சம் ஒடுக்கம் விரிவு இரண்டு நிகழ்வுகளும் கால இடைவெளியில் மாறி மாறி நடக்கிறது என்று விவேகாநந்தர் ஞான யோக்கத்தில் அழகாக விளக்கியுள்ளார். முடிந்தால் தேடிப் பிடித்து படிக்கவும்.

')) said...

குமரன்,

நல்ல பதிவு, அப்படியே முடிந்தால் சமகால ப்ரபஞ்சங்களை (Parallel Universe) பற்றியும் எழுதுங்கள்.

மேலும் ஒரு சிறிய குழப்பம் எனக்கு என்று நினைக்கிறேன், இந்த வரிகளில்...

//பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா? //

பூமியின் மேற்பரப்பில் (you mean out of space) நின்று ஒரு கவனிப்பாளராக பார்த்தால், இரண்டு ஒளிக் கற்றையுமே சமகாலத்தில் புறப்பட்டதாக அறிவோம், அப்படித்தானே...???

')) said...

ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். //

அது முந்தைய நிலை.இப்போது பல பல்கலைகழகங்களில் பல பட்ட வகுப்புகளில் இது கற்பிக்கப்படுகிறது.சார்பு நிலைத் தத்துவத்தை அறிந்த பல்லாயிரம் பேர் இப்போது இருக்கிறார்கள் என்பது தான் சரி.

(முன்பு இத்தத்துவத்தை அறிந்த நால்வரில் ஒருவர் ராமன் சந்திரசேகர் எனும் இந்திய விஞ்ஞானி என்பது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது)

')) said...

/ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். அந்த நான்கு பேரில் நான் கண்டிப்பாக கிடையாது.ஆகவே இதனை நான் விளக்குவது சரி இருக்காது இருந்தாலும் சிறிது முயற்சி செய்கிறேன்.நீங்கள் ஒரு புகை வண்டியில் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் இரண்டு ஒளிக் கதிர்கள் புறப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செயது கொண்டு இருப்பதால் மேற்கில் இருந்து வரும் ஒளிக் கதிர் உங்களை முதலில் வந்து சேரும் பின்தான் கிழக்கில் இருந்து வந்த ஒளிக் கதிர் வந்தடையும் அல்லவா? அதனால் உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான் உருவானது என்று நினைப்பீர்கள் ஆனால் பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா? //

அழகாய் துவங்கி இடையில் குழப்பி விட்டீர்கள்... திரும்பவும் எழுதுங்கள்.

நேரத்தை ஒளியின் வேகத்தோடு ஒப்பிட்டுச் சொல்வதுதான் சார்புநிலை தத்துவமா?

இதைப் புரிந்துகொள்வதில் ஆர்வமாய் இருக்கிறேன்

')) said...

அடிக்கடி மாறுவது கொள்கை மட்டும் தானா ? டெம்ப்ளேட்டும் மாறுகிறதே !
:))

')) said...

கோவி. தேடி பார்க்கிறேன். கிடைத்தால் படிக்கிறேன்.

நன்றி தெக்கத்திக்காட்டான். Big Bang போன்றவற்றை எழுத எண்ணியிருக்கிறேன். Paralell Universe பற்றியும் எழுத முயற்சி செய்கிறேன்.

செல்வன் அது நகைச்சுவையாக எழுதப்பட்டது. உங்களுடைய பதிலில் இருந்து அது ஒரு மட்டமான முயற்சி என்று அறிய முடிகிறது.

சிறில் அலெக்ஸ் அடுத்த பதிவில் இன்னொரு நல்ல உதாரணத்துடன் எழுத முயற்சி செய்கிறேன்.

கோவி. நானும் மனிதன் தானே மாறுதல் என்பது எனக்கும் இயல்புதானே? ஆனால் முடிந்தவரை கொள்கைகளை அடிக்கடி மாறாமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்கிறேன்.