Thursday, July 06, 2006

மரணம் - தேன் கூடு போட்டி

பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கலந்துக்கற போட்டி நான் எதோ எனக்கு தோன்றதை கிறுக்கீட்டு இருப்பவன். இருந்தாலும் ஆசை யாரை விட்டுது கிறுக்கியதை போட்டிருக்கேன். இதோட இன்னொரு கதையும் மனசில ஓடீட்டு இருக்கு. பார்ப்போம்.


மரணம் பற்றி சிந்திக்கும் சமயமெல்லாம்

மரணம் நிரந்தரப் பிரிவென்று வருந்துபவரே
நிரந்தரமில்லா உலகை பிரிவதெப்படி நிரந்தரமாகும்?


என்று கேட்கத் தோன்றுகிறது

மரணம் என்பது
சோகமா? நம்மவர்களைப் பிரிப்பதால் வருத்தமா? இல்லை புரியாததைப் பற்றிய பயமா?

இல்லை அப்பா மரணம்

ஆராய்ந்து உணர்ந்தறிய முடியாத ஞானம்
ஞானமனைத்தும் விளக்க இயலாத கேள்வி
அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் விளங்காத புதிர்
பயத்தால் உயிர் வழிநடத்தும் கர்மா

கர்மாவென்று சொல்வது சரியா?

உயிர்கள் இயங்குவது கூட்டை காக்கத்தானே
உயிரைப் பேணத்தானே உலகின் தொழிலெல்லாம்
மரணம்தானே அதிகபட்ச தண்டனை இவ்வுலகில்
ஆக இயக்கமனைத்திற்கும் அடிப்படை மரணமே!!!

ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ம்ம் ஹா மாட்டிக் கொண்டீர்.. தோற்றுவித்தலுக்கு மரணம் எப்படி காரணியாக்குவீர்?

கேளப்பா

தன்னெச்சம் இவ்வுலகில் மிச்சம் வைக்கவே
தோற்றுவிக்கிறான் இதிலடக்கம் கலையும் குழந்தையும்
அவரவரெச்சமே மிச்சமிருப்பின் தோற்றுவித்தல் எதற்காக
உயிருக்கு மரணமில்லையெனில் பிறப்பு எதற்காக

தோற்றுவிக்கிறது, வழி நடத்துகிறது மரணம் கடவுளா?

மரணமே முதல் பயம் மண்ணுயிர்கெல்லாம்
இறையை உணர்ந்தது அப்பயத்தை ஆராய்ந்துதான்
இறை நானேயென்றிருப்பானே மரணம் நீக்கினால்
இறையைத் தேடியிருப்பானா மரணத்தை மனிதனறிந்தால்?

என்னுள்ளோர் ஐயமுண்டு இவன் மடையனாயென்று
இன்றுதான் தெரிந்தது இவன் கிறுக்கனென்று

11 comments:

')) said...

உங்கள் படைப்பு நன்றாக இருக்கிறது குமரன்.

//மரணமே முதல் பயம் மண்ணுயிர்கெல்லாம்
இறையை உணர்ந்தது அப்பயத்தை ஆராய்ந்துதான்
இறை நானேயென்றிருப்பானே மரணம் நீக்கினால்
இறையைத் தேடியிருப்பானா மரணத்தை மனிதனறிந்தால்?
//
இந்த பயம் இருந்திராவிட்டால் வெங்கடரமணன் என்பவர் பகவான் ரமண மகரிஷி ஆகியிருக்க மாட்டார். உண்மையான வார்த்தைகள்.

')) said...

//மரணம் நிரந்தரப் பிரிவென்று வருந்துபவரே
நிரந்தரமில்லா உலகை பிரிவதெப்படி நிரந்தரமாகும்? //
ஆன்மிகம் கலந்த நல்ல சிந்தனை .. வாழ்த்துக்கள்

')) said...

குமரன் ரொம்ப நல்ல இருக்கு.அருமையாக மேற்கோள்களை கையாண்டுள்ளீர்கள்.

')) said...

குமரன்,

// ஆசை யாரை விட்டுது கிறுக்கியதை போட்டிருக்கேன் // இதுக்குப் பேரு கிறுக்கலா?! :)

எனக்குப்பிடித்தது...

"மரணம் நீக்கினால்
இறையைத் தேடியிருப்பானா"

')) said...

மிகவும் நன்றி கைப்புள்ள,கோவி கண்ணன்,ராம்.

நீங்கள் சொல்லும் வரை ரமணர் மனதுக்கு வரவில்லை. பெரிய ஆன்மீகவாதியா இருக்கீங்க எதையோ பார்த்து எங்கயோ யோசிக்கிறீங்க?

கோவி. கண்ணனிடமிருந்து சீரியஸா ஒரு கமெண்ட் என்ன நடக்கிறது இங்கே.

ராம் அது எல்லாம் மேற்கோள்கள் இல்லை என்னோட சொந்தக் கருத்து :-(((((.நான் கடைசியா எல்லாத்துக்கும் நன்றீன்னு(ஒரு பின்னூட்டமாவது வருமுன்னு ஒரு நம்பிக்கைல) போடலாமுன்னு இருந்தேன் நீங்க மேற்கோள்ன்னு என்னை இப்பவே போட வைச்சுட்டீங்க..

')) said...

//கோவி. கண்ணனிடமிருந்து சீரியஸா ஒரு கமெண்ட் என்ன நடக்கிறது இங்கே. //
... ஹி ஹி சாமி கண்ணை குத்திடும் ... எல்லாம் மரண பயம் தான் :)
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_03.html

')) said...

நண்பர் குமரன் ரெம்ப ஆழமா சிந்திக்கிறீங்கண்ணு நினைக்கிறேன். நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

')) said...

குமரன் இன்றுதான் படித்தேன். நன்றாக உள்ளது.
//
தன்னெச்சம் இவ்வுலகில் மிச்சம் வைக்கவே
தோற்றுவிக்கிறான் இதிலடக்கம் கலையும் குழந்தையும்
அவரவரெச்சமே மிச்சமிருப்பின் தோற்றுவித்தல் எதற்காக
உயிருக்கு மரணமில்லையெனில் பிறப்பு எதற்காக
//
இது எனக்கு பிடித்த பகுதி

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

பதிவிற்கு சம்பந்தமில்லாதது
வலைப்பதிவில் நடக்கும் ஆறு சங்கிலிபதிவில் உங்களையும் இணைத்துள்ளேன். இங்கே பார்க்கவும்.

')) said...

வித்தியாசமான பார்வை குமரன். போட்டிக்கான வாழ்த்துக்கள். அட நம்ம ஊர்க்காரரா நீங்கள்?

')) said...

நன்றி இளவஞ்சி அவர்களே...

நன்றி கலை அரசன் நான் ஆழமா சிந்திக்கிறேனான்னு தெரியல நீங்க சொல்றதுனால நம்பீடுறேன்...

சோழநாடான் மிக்க நன்றி ஆறு விளையாட்டுக்கு அழைத்ததற்கும் பின்னூட்டத்திற்கும்...

')) said...

நன்றி இளா நீங்களும் ஈரோடா?