Wednesday, March 29, 2006

பிரம்மன் தன்னிடத்திலுள்ள அழகையெல்லாம் உன்னிடத்தில் கொடுத்துவிட்டு

தன்னுடைய படைப்புகளுக்கு உன்னிடம் கையேந்தி நிற்கிறானாமே?

பிரம்மன்
தென்றலை இதத்தை தோற்றுவிக்க உன் மூச்சுக் காற்றை பயன்படுத்தினானேமே?

உன் புருவ இமையின் வடிவே வானவில்லுக்கு வைத்தானாமே?

இசையை உலகில் எல்லா பொருளிலும் வைக்க உன் சிரிப்பொலிதான் காரணமாமே?

சந்திரனின் பள்ளத்தாக்குகள் உன் கன்னக் குழியைக் கண்டதானாலான முயற்சியாமே?

மயக்கும் மல்லிகையின் மணமும், இனிய கனகாம்பரத்தின் சுகந்தமும் உன்னுடையதாமே?

குழந்தைகளின் சிரிப்பை சிரமமே இல்லாமல் உன்னிடம் வாங்கி கொண்டானாமே?

Tuesday, March 28, 2006

அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி இன்று இன்னுலகை விட்டு பிரிந்தார்

பிறருக்கு மனதாலும் துன்பம் நினையாதே என்று போதித்த மகரிஷி நாம் வணக்கம் கூறுவது போல உள்ளன்போடு " வாழ்க வையகம், வாழ்க வளமுடன் " என்று கூறும் பழக்கம் கொள்ள வேண்டும் என்று போதனை செய்துள்ளார்.

அவருடைய சில கருத்துக்களை இங்கு பிரசரித்துள்ளேன் படிப்பதோடு அவற்றை வாழ்க்கையிலும் கடை பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.

இன்பத்தை முறையோடு அளவுடன் அனுபவிக்க துன்பமே பெரும்பாலும் தோன்றாது ஆராய்ந்துணர்வீர்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

துன்பம் போக்கும் தூயநெறியே அன்பாம். அறமாம் அறிவின் உயர்வாகும்.

ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள், உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.

எதிர்பார்த்தல் எனும் நோயை மாற்றி மனநலம் காண எது உளதோ அதை ஏற்று உதவி செய்தே வாழ்ந்திடுவோம்.

குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.

http://vethathiri.org/tamil/swami/quotations/document_view

Sunday, March 26, 2006

எழுதப்படாத கடிதம்

உயிரே,

உடல் எழுதும் மடல். பொதுவாக மடல்களில் நலம் விசாரித்து ஆரம்பிப்பதுதான் வழக்கம். நாம் நலம் விசாரித்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். உடல் உயிரிடம் நலம் விசாரிப்பதா? பின் மடல் வரைவது மட்டும் எதற்கு? உயிர் உறங்கும் நேரம் உடல் இயங்குகிறது அந்த நேரத்தில் உணர்வால் இணைந்து இருந்தாலும், ஏதோ பிரிந்துள்ளது போல போன்றுகிறதே அது போலதான் நாம் வாழ்கிறோம். உண்மையில் உடலும் உயிரும் என்றுமே பிரிந்து செயல் படுவது இல்லை நாமும் அதை போலத்தான் உணர்வுகளாலும், உணர்ச்சிகளாலும், காதலினாலும் இணைந்துள்ளோம்.

நாம் கடிதங்களில் என்ன பரிமாறிக் கொள்ளப் போகிறோம். உன் மகிழ்ச்சியில் நான் புன்னகைக்கிறேன் என் கவலைகளில் நீ கண்ணீர் வடிக்கிறாய். இப்படி உன் உணர்வுகளில் காலம் கடத்தும் நான், நீ இங்கே நலம் நான் அங்கு நலமா என்று விசாரிக்க கடிதம் எழுதவில்லை.

பின் எதற்கு கடிதம்?

குழந்தையின் புன்னகை, இசை தரும் அமைதி, கவிதைகளில் உவமை, எழுத்தின் கற்பனை, பனி நடுவே உதிக்கும் சூரியன், தோழமையுடன் உரையாடல், மழைச் சாரல், நெகிழ்ச்சியான தருணங்கள், எதிர்பார்த்து கிடைக்கும் பரிசு, எதிர்பாராமல் நிகழும் சந்திப்பு, மாலை நேர தென்றல், மலர்களின் சுகந்தம், சில நேரம் கொள்ளும் ஏகாந்த உணர்வு, போன்றவற்றை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வெளிப்படுத்துவது எதற்காக? இப்படி வெளிப்படுத்துவதும் ஒரு வகை மகிழ்ச்சி. அப்படி ஓரு முயற்சியே இந்தக் கடிதம்.

நான் உன்னை முதன் முதலில் பார்த்தது எப்பொழுது என்று நினைவில்லை, முதல் பல் முளைத்து, அது விழும் முன்னம் இருந்தே ஒருவரை ஒருவர் அறிவோம். முதன் முதலில் உன் மீது காதல் வயப்பட்டது எப்போழுது என்றும் எனக்கு நினைவில்லை, காதல் என்றால் என்னவென்றே அறியா பருவத்தில் இருந்து பேசி, பழகி, சண்டை போட்டு, விளையாடி இருக்கிறோம்.

உன்னை பற்றிய நினைவுகள், என் குழந்தைப் பருவ நினைவுகளை விட பழமையானதாக இருக்கின்றதால் நான் உன்னிடம் எப்பொழுது காதல் கொண்டேன் என்று நிச்சயமாக தெரியவில்லை எனக்கு.

ஆனால் முதன் முதலில் எப்பொழுது காதலை உணர்ந்தேன் என்று மட்டும் நினைவு உள்ளது எனக்கு.

பள்ளியில் விடலைப் பருவத்தில் விளையாட்டாக பெண்களை கிண்டல் செய்யும் நேரம் உன் பெயர் அடிபடும் சமயம் எல்லாம் கோபம் வந்ததே அந்த சமயத்தில்தான் சிந்திக்க ஆரம்பித்தேன் ஏன் கோபம் கொள்கிறேன் என்று.

சிந்தித்தும் உடனே உணரவில்லை காதலை. கோடை விடுமுறையில் நண்பர்களுடன் கூத்தடிக்கும் நேரம் போக வீட்டில் உள்ள நேரங்களில் உன்னை பற்றி நினைக்க ஆரம்பித்தேனே அப்பொழுதுதான் எனக்கு ஆரம்பித்து குழப்பம் எனக்கு.

குழப்பம் கொண்டேனே தவிர காதல்தான் கொண்டேன் என்று அறியவில்லை அப்பொழுதும். பின் கோடை விடுமுறை முடிந்து பல நாட்கள் குழப்பத்துடன் களித்த பின் ஒரு நாள் ஏதோ யாரோ பேசிக் கொண்டு இருக்கும் நேரம் நீ சிரிக்க தூரத்தில் இருந்த என் மனதில் உண்டான சலனம் சொல்லியது மடையா குழப்பம் கொள்ளாதே நீ காதலிக்க ஆரம்பித்து விட்டாய் என்று.

கடிதம் தொடரும்.