Monday, January 04, 2010

எனது கிறுக்கல்கள்

கானல் நீரானது கனவுகள்
தேய் பிறையானது உணர்வுகள்

வாடும் எனது நெஞ்சம்
நிதமும் துளியாய் சாகும்
வாடைக் காற்றில் நித்தம்
தேடும் உந்தன் வாசம்
மோகம் சூழும் நேரம்
கண்ணீர் தானே தழும்பும்
கானச் சிறகு பறவை
காணக் கூட கவிதை
பேதை கொண்ட நெஞ்சம்
கண்டும் கேட்டும் விம்மும்

துன்பம் காலையில் பூபாளம்
இரவு நேரத்தில் தாலாட்டு
துயரத்தில் தோழமை தோள்?
துயரமே தோழமை தோள்

பாலை வனத்தின் பாலையாய்
காய்ந்து உலர்ந்த நெஞ்சத்தில்
துளிர்ந்து பசுமையின் எச்சமாக
மீந்தது உனது நினைவுகளே