என் 50 பதிவுகள்( என்னடா எல்லாரும் ஆயிரத்தை நோக்கி போயிட்டு இருக்காங்க நீ என்ன 50 50ன்னு குதிக்கறன்னு கேக்காதீங்க) முடிந்து விட்ட நிலையில் என்னுடைய சுயமதிப்பீடு பதிவு இது. என்னுடைய நிலைப்பாடுகள் சிலவற்றை கீழே கொடுக்கிறேன். "டோண்டுவிடம் சில கேள்விகள்" என்று அவரோட சண்டை, பின்னாடி சந்தோஷ் பக்கங்களில் டோண்டுவோட அவர் சண்டை போட்டுகிட்டு இருந்தப்ப சந்தோஷ் கிட்ட தப்புன்னு தோணிணதுனால "இது விவாதப் பதிவா தனி மனித தாக்குதல் பதிவான்னு?" கேள்வி. நேசக்குமார், வஜ்ரா ஷங்கர்கிட்ட முஸ்லீம் மதத்தை எதிர்க்காதீங்கன்னு விவாதம். சந்திப்பு கிட்ட ஹிந்துத்துவா ஹிட்லர்ன்னு எல்லாம் சொல்லாதீங்கன்னு வேற அறிவுரை. இங்க உஷா அவர்களின் பதிவுல விடாது கருப்பு வஜ்ரா ஷங்கர் போன்றவர்களை தடை செய்யணும்ன்னு கருத்து. பின்னாடி அதே அவர்களுடைய பதிவில கோபப்படாதீங்க அறிவுரை. அதே சமயம் விடாது கருப்பு பதிவுல போய் பிராமிணர்களை எதிர்க்கறது தவறுன்னு கருத்து. அப்புறம் முத்து தமிழினி பதிவில் போய் உ.வே சாமிநாத ஐய்யர் மேல தப்பு சொல்லாதீங்கன்னு கருத்து. நம்ம செந்தழல் ரவி அவர்களோட பதிவுல அன்னை தெரசா பத்தி ஜயராமனின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கணும்ன்னு ரவிகிட்ட கருத்து. அப்புறம் ம்யூஸ், வஜ்ரா சங்கரோட சர்ச்சை. இங்க ராபின் ஹுட் கிட்ட நீங்க பாட்டுக்கு ஒருத்தரை போட்டுத் தாக்கறீங்களே ஆதாரம் இருக்கான்னு கேள்வி. இங்க டாவின்ஸி கோட் கருத்து சுதந்திரத்துக்கு தடை அதை தடை தடை செய்த்தது தவறுன்னு கருத்து. அதிலயே பயர் படத்துக்கு ஹிந்துக்கள் அதிக அளவில் இருப்பதால் அவங்க அளவுக்கு பிரச்சனை செய்தாங்க, கிறிஸ்துவர்கள் அவங்க அளவுக்கு பிரச்சனை செய்கிறார்கள். ஆகவே இந்த மதம் இருந்தாலே பிரச்சனைன்னு ராகவன், ஜோசப் இவர்களுடன் விவாதம்.
அப்புறம் பல பேரோட பதிவுகளுக்கு போய் கோபப்படாதீங்கன்னு அறிவுரை( குப்புசாமி சார், குழலி இன்னும் பல பேர் ). இதெல்லாம் டக்கு ஞாபகம் வந்தது இன்னும் பல இடங்களில் பல கருத்துகள்.
இவ்வளவு நேரம் நான் என்ன பண்ணினேன்னு சொன்னேன். இதுக்கு கிடைத்த மரியாதைகள் பலன்களைப் பத்தி சொல்ல வேண்டாம். புனித பிம்பங்கள்(நன்றி முத்து தமிழினி), நடுநிலைவாந்திகள்(நன்றி மாயவரத்தான்), திம்மி(நன்றி வஜ்ரா ஷங்கர்), அச்சிடப்பட முடியாத வார்த்தைகள்(நன்றி போலி). அதாவது இந்த திட்டுக்கள் எல்லாம் என்னைத் நோக்கித்தான் சொல்லப்பட்டதுன்னு சொல்லலை(போலியின் திட்டுக்களை தவிர) ஆனால் என்னைப் போன்றவர்களைத்தான் குறிக்கிறது. இதுல அங்கங்க பதிவின் நோக்கை திசை திருப்பிகிறேன் என்னை நானே யோக்கியனா காட்டிக்கிறதுக்காக பின்னூட்டமிடறேன்னு எல்லாம் திட்டு.
நான் தமிழ் மணத்தில் சேரும் போது இதை பத்தி எல்லாம் தெரியாம சேர்ந்தேன், இப்போ பெரிய கருத்து கந்தசாமியாயிட்டேன். சத்தியமாச் சொல்லுறேன் கருத்து சொல்லணும் என்றெல்லாம் நான் தமிழ் மணத்துக்கு வரலை. தமிழ்ல எழுதணும் என்ற ஒரே ஆர்வம் தாம் காரணம்.
நான் இப்படி எல்லாம் கருத்து சொல்லி என்ன ஆச்சு எதாவது பலன் இருக்கா( நான் திட்டு வாங்குனதைத் தவிர ) ஒண்ணும் கிடையாது. இதில என்னமோ இப்பல்லாம் தார்மீக கோபத்தை ரசிக்கணும் என்றெல்லாம் வேற எனக்கு அறிவுரை.
நான் எழுதறது எல்லாமே எனக்கு தோன்றது மட்டும்தான். இது பலருக்கு பிரச்சனை தருவதால் கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லி இனிமே புனித பிம்பமாவோ, இல்லை நடுநிலைவாந்தியாவோ, இல்லை திம்மியாகவோ இல்லை தார்மீக கோபத்துக்கு குறுக்கே நிற்பவனாகவோ செயல் படுவதில்லை என்று முடிவெடுத்துக்கிறேன்.
மனிதன் மட்டும் தான் உணவுக்காகவோ அல்லாமல் தன் கொள்கைகளுக்காக, தன் நம்பிக்கைகளுக்காக தன் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் ஒரே பிராணி. மனிதன் தோன்றியதிலிருந்தே இது உண்டு என்றாலும். அப்போ எல்லாம் போர் என்று வந்தால் சாவது கொஞ்ச பேர் மட்டுமே. ஆனால் இன்னைக்கு போர் என்று வந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற நிலை உள்ளது. ஆகவே முன் எப்பொழுதும் இருந்ததை விட மனிதன் இன்று அமைதியையும், அன்பையும் வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளான்.
இன்னைக்கு உள்ள சூழ்நிலையில் மாற்றங்களைக் கொண்டு வர கோபம் கொள்வது சண்டை போடுறது மூலமாக செய்வதைவிட அமைதி வழியில், அன்பு வழியில் செய்வாதுதான் சரியானதாகும் என்பது என் கருத்து.
இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று சொல்பவர்கள். விவேகானந்தர், வெள்ளையனை வெளியேறு என்று சொன்ன காந்தி, I have a dream என்று ஒரு புரட்சியையே உண்டாக்கிய மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், இயேசுநாதர்( எதாவது ஒருவரை சொன்னால் அவரை ஜல்லியடித்து விடுவார்கள் என்று தான் பலரை சொல்லியிருக்கிறேன் இவர்கள் அனைவரையும் உங்களால் ஜல்லி அடிக்க முடிந்தாலும் உங்களுக்கு பிடித்த யாரவது ஒருவர் அன்பு வழியில் கண்டிப்பாக சாதித்திருப்பார் அவரை எடுத்துக் கொள்ளுங்கள்)ஆகியோரைப் பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இனி கடைசியாக இங்குள்ள பிரிவினைவாதிகள் ஒவ்வொருவருக்கும் கடைசியாக சொல்லிக் கொள்வது என்னவென்றால்
திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந்திருக்கலாம் அதில் உங்களுக்கு பெருமையாகக் கூட இருக்கலாம் ஆனால் இன்று இதை வைத்து பிரிவினை செய்வது மற்றவர்கள் மேல் சேற்றை வாரி இறைப்பதற்காக பயன் படுத்துவது சரியல்ல.
விடாது கருப்பு மற்றும் பிராமிண எதிர்ப்பாளர் அனைவருக்கும் - காந்தி பிராமிணர்தான் உடனே அவர் அப்படிப் பண்ணிணார் இப்படி பண்ணிணார் என்றெல்லாம் சொல்ல வேண்டாம் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை என்றால் உங்களுக்கு தெரிந்த பிராமிணர் யாராவது நல்லவராக இருப்பார் அவரை உதாரணமாக எடுத்துக் கொண்டு பிராமிணர் அனைவருமே கெட்டவர் இல்லை என்பதை உணருங்கள். யூதர்களை ஹிட்லர் கையாண்ட விதம் சரியா என்று யோசியுங்கள்.
ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவ நண்பர்களுக்கு - இந்த பிரபஞ்சத்தை ராமர் ஒரு இடத்தில் இருந்து ஆட்சி செய்கிறார், கிறிஸ்து ஒரு இடத்தில் இருந்து ஆட்சி செய்கிறார், அல்லா ஒரு இடத்தில் இருந்து ஆட்சி செய்கிறார் நாம் எந்த மதத்தை பின்பற்றுகிறோமோ அந்த மத ஆட்சி செய்யும் இடத்துக்கு நாம் சென்றடைவோம் என்றெல்லாம் எண்ணுபவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். எல்லாமே ஒரே இறைதான் என்று எண்ணுபவர்கள் யோசிக்க வேண்டியது மற்றவரின் நம்பிக்கைகளை புண்படுத்துவது மத துவேசங்களைப் பரப்புவது போன்றவை செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் இறைவனைதான் நிந்திக்கிறீர்கள். கோயிலை இடித்து மசூதி கட்டினாலும், மசூதி இடித்து கோயில் கட்டினாலும் நாம் உணர்வது ஒரு இறையையே என்று உணருங்கள்.மத துவேஷங்கள் பரப்புவதாலோ, இல்லை மத மாற்றங்கள் நிகழ்வதோ ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை. மதம் மாறினாலும் ஒரே இறைவன் தான், மத துவேஷங்கள் பரப்பப் படும் சமயம் அவரவர் மதத்தின் அன்பு சார்ந்த சிந்தனைகளை பற்றி சிந்தித்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக கோபம் கொள்பவர்களுக்கு மேலே சொன்னது போலத்தான் காந்தி கோபம் கொண்டு வெள்ளையனே வெளியேறு என்று சொல்லி இருந்தால் அவர் அமைதியாக சொன்னவுடன் உண்டான புரட்சி உண்டாகி இருக்காது. மார்டின் லூதர் கிங் கோபம் கொண்டு பேசி இருந்தால் புரட்சி உண்டாகி இருக்காது. விவேகானந்தர் கோபம் கொண்டிருந்தால் அவருடைய கருத்துக்கள் மக்களை சென்றடைந்திருக்காது. ஆகவே அமைதியாக பலருக்கு சென்று அடையும் வகையில் உங்கள் கருத்துக்க்ளை சொல்லுங்கள்.
நான் எதோ எனக்கு தோணினதை கடைசி முறையா இந்த தமிழ் மணத்தில சொல்லிட்டேன். இனிமே நான் யாரோட எந்த விவாதத்திலயும் வந்து யாரைப் பத்தியும் எதுவும் சொல்லப் போறதில்லை பதிவும் இடப் போறதில்லை.
நான் பதிவிட்டா கோவி. கண்ணன் வந்து நக்கலா ஒரு கமெண்ட் அடிப்பார் அந்த கமெண்ட் அந்த கமெண்ட் வந்தா அது இல்லையா என்னோட தமிழ் ஆர்வத்தை வைச்சுக்கிட்டு நான் இனிமே தமிழ் மணத்துல காலத்தை ஓட்டிடறேன். மத்தது எதுவுமே தேவை இல்லை எனக்கு.
இந்தப் பதிவு ஒரு desperationல மனசு கேக்காம எழுதினது இதனால ஒரு மாற்றமும் ஏற்படப் போறதில்லைன்னு இதை யாரும் முழுசாக் கூட படிக்கப் போறதில்லைன்னு நீங்க நினைச்சீங்கன்ன என்னோட எண்ணத்தை பகிர்ந்துக்கிறீங்கன்னு நினைச்சுக்கோங்க.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
தமிழ்மணத்திற்க்கு வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
'இதுக்கு காரணம்தான் யாரு ?... படைச்ச சாமியைப் போயி கேளு... இதுக்கு போயி அலட்டிக்கலாமா ?' :)))
குமரன் ....பதிவு எழுத ஆரம்பிக்குமுன் ... குறைந்தது ஆறு மாதம் வலையுலகில் நோட்டமிட வேண்டும்... அப்பொழுது தான் நம் எண்ண வோட்டத்துடன் ஒத்துவரும் பதிவாளர்களை அடையாளம் காணமுடியும். பின்னூட்ட எண்ணிக்கையைப் பார்த்து 'இவர்' அறிவாளியாக இருப்பாரோ... என்ற ஆர்வகோளரினால் எல்லோருடைய பதிவுகளிலும் பின்னூட்டமிட்டதும் ... பின்னால் தான் அந்த பதிவாளர்களின் சார்பு நிலையே தெரியவரும். ஒரு வேளை நாம் அவர்களுக்கு ஒத்து ஊதியிருந்தால் .. நம் சொந்த எண்ணங்களை குழி தோண்டிப் புதைத்துவிடுவோம்... அல்லது மறந்துவிடுவோம். நம் வேலையே ... அவர்களுக்கு முட்டு கொடுப்பது என்று ஆகிவிடும்... இப்படித்தான் குழுக்களாக உருவாகிறார்கள். அதில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களின் சரக்குகள் ... வெறும் கேள்விக் குறிகளாக மாறி மூளையும் மழுங்கி ... விதண்டாவாதமாக பதிவுகளை எழுத ஆரம்பித்துவிடுவார்கள். இதையெல்லாம் பார்த்து விவாதப் பதிவுகள் பக்கம் நான் தலைகாட்டுவதில்லை.
நல்லவேளை ... நீங்கள் விழித்துக் கொண்டதாக நினைக்கிறேன்.
வரலாறு கொஞ்சம் படிங்க
http://govikannan.blogspot.com/2006/05/1.html
குமரன் ஐயா,
தங்கள் புது டெம்ப்லேட் template கண்ணை ராவுகிறது. ஒன்னுமே படிக்க முடியலை.
முடிந்தால் மாற்றி 'பளிச்' என்று ஒரு டெம்ப்லேட் டிசைனை உபயோகிக்க வேண்டுகிறேன்.
நன்றி
//காந்தி பிராமிணர்தான் //
வணிகர்/வைசியர் குலம் என்று ஞாபகம்.
//திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந்திருக்கலாம் அதில் உங்களுக்கு பெருமையாகக் கூட இருக்கலாம் ஆனால் இன்று இதை வைத்து பிரிவினை செய்வது மற்றவர்கள் மேல் சேற்றை வாரி இறைப்பதற்காக பயன் படுத்துவது சரியல்ல. //
குமரன்,
பிரிவினைவாதிகள் என்ற உங்கள் கருத்தை மறுக்கிறேன். திராவிடனாக இதை பதிவு செய்கிறேன். மேற்கொண்டு விவாதிக்க அல்ல
//திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந்திருக்கலாம் அதில் உங்களுக்கு பெருமையாகக் கூட இருக்கலாம் ஆனால் இன்று இதை வைத்து பிரிவினை செய்வது மற்றவர்கள் மேல் சேற்றை வாரி இறைப்பதற்காக பயன் படுத்துவது சரியல்ல. //
நானும் திராவிடன் என்ற முறையில் எதிர்க்கிறேன்.... இன்று யாராவது திராவிட நாடு கேட்கிறார்களா என்ன?
///குமரன் ஐயா,
தங்கள் புது டெம்ப்லேட் template கண்ணை ராவுகிறது. ஒன்னுமே படிக்க முடியலை.
முடிந்தால் மாற்றி 'பளிச்' என்று ஒரு டெம்ப்லேட் டிசைனை உபயோகிக்க வேண்டுகிறேன்.
நன்ற///
பாருங்க குமரன்...இங்க என்ன பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு என்று கொஞ்சமும் பாராமல் - ஏதோ கமென்ட் போடனுமே என்று கடனேன்னு கமென்ட் போட்டிருக்காரு...
அத்தெ விடுங்க...
நீங்க வழக்கம் போல எழுதுங்க...பின்னூட்டமிடுங்க...எதுக்காகவும் - யாருக்காகவும் நீங்க எழுதுறதை நிறுத்தாதீங்க..
உங்களுக்கு நேரம் இருந்தா - எழுதுங்க, பின்னூட்டம் போட்டுக்கிட்டே இருங்க...
//தமிழ்மணத்திற்க்கு வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.///
இப்போதான் உங்களை வரவேற்க்கிறாரா ? ஒன்னும் புரியலியே..
அதுக்குள்ள - காந்தி தாத்தா என்ன சாதி என்று ஒரு டிபேட் ஆரம்பிச்சாச்சு பாருங்க...
நீங்க நீங்களா இருங்க...அதுதான் நல்ல முடிவாக இருக்கும்...
ரவி,
மெட்டர முழுசா படிச்சீங்களா!!!
குமரன் இப்படி ஒன்னு சொல்லி இருக்காரு
//என்னோட தமிழ் ஆர்வத்தை வைச்சுக்கிட்டு நான் இனிமே தமிழ் மணத்துல காலத்தை ஓட்டிடறேன். மத்தது எதுவுமே தேவை இல்லை எனக்கு.//
இதுக்கு தான் அந்த வரவேற்ப்பு.
சிண்டு முடிச்சிடுவீங்க போல இருக்கே!!!;-)
எங்களுக்கும் என்ன நடக்குதுனு தெரியும், நாங்களும் தெளிவா தான் இருக்கோம்னு தெளிவா சொல்லனம்னு எதிர் பாக்கரீங்களே (சிரிப்பான் அட்டெச்டு) :-)
//அதுக்குள்ள - காந்தி தாத்தா என்ன சாதி என்று ஒரு டிபேட் ஆரம்பிச்சாச்சு பாருங்க...//
ஏதோ நம்மால முடிஞ்சது :-)))
//நீங்க நீங்களா இருங்க...அதுதான் நல்ல முடிவாக இருக்கும்...//
அப்படியே ஆகுக :-))
என்னையும் ஞாபகத்துல வைத்து எழுதியிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு 'அணுகுண்டு' தயாராகிக் கொண்டுள்ளது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அப்பொழுதும் வெடித்த இடத்தை வந்து பார்வையிட அழைக்கிறேன்.
ஆமாம் நாம் அனைவரும் திராவிடர்
குமரன்,
50வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள். இந்த பதிவு குறித்து ..
என்னைப்பொறுத்த வரையில் எந்த ஒரு விவாதத்திலும் அனைத்து வலைப்பதிவாளர்களின் கருத்து ஒன்றாக இருக்கமுடியாது. அவ்வாறு இருந்தால் பின்னர் வலைப்பதிவுகளும் சுவாரசியம் இழந்து விடும். அவ்வாறு ஆக்கபூர்வமான விவாதத்துக்கு அடிகோலும் பதிவுகளை படித்துவிட்டு பதிலும் செய்திருக்கிறேன். அதேவேளையில் தனி நபர் தாக்குதலின் மூலமோ இல்லை பரபரப்பான பதிவிட்டு தன்னை நிலை நிறுத்தும் முயற்சிகளையுடைய பதிவுகளை கண்டால் அதில் காணப்படும் சுவாரசியமான பின்னூட்ட சண்டைகளை கண்டு ரசித்திவிட்டு ஓடிவிடுவதுண்டு. மற்ற படி என்னுடைய வலைப்பதிவில் எனக்கு திருப்தி அளிக்கும் பதிவுகளை பதிவு செய்து விடுவதோடு நிறுத்திகொள்கிறேன். நீங்க கடைசில என்னுடைய நிலைப்பாட்டிற்கு வந்துட்டீங்கனு நினைக்கிறேன். தொடர்ந்து பதிவிடுங்கள் ..
உங்களளவில் உங்கள் முடிவு சரியே!
கருத்துகளும் சரியே!
என்ன ஆச்சு நம்ம செந்தில் குமரனுக்கு என யாரும் இங்கு கவலைப் படப் போவதில்லை!
உண்மை உறவுகளைத் தவிர!
இதை புரிந்து கொண்ட உங்களுக்கு...
வாழ்த்துகள்!
.... மன அமைதி கிட்ட!
குமரன், ஏன் இப்படி.
ஆரம்பத்தில் இப்படி தாங்க, அப்புறம் பாருங்க, அது போல பதிவுகளை எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வரும். நீங்களும் போய் படிச்சுட்டு சிரிச்சுட்டு வாங்க. அத விட்டு இப்படி வருத்துப்படலாமா. இதை எல்லாம் பாக்கும் போது நாங்க வவாச வில் அடிக்கும் கூத்து தேவலாம். நீங்க அங்க வாங்க, நமக்குள்ளேயே கலாய்த்து கொண்டு மகிழவாக இருக்கலாம். கண்ணன் அண்ணன், குமரனை அங்கன இட்டுகிட்டு வாங்க.
50வது பதிவு - நீங்க போட்ட பதிவுகளைப் பத்தி..
51ஆவது பதிவு - உங்க பின்னூட்டங்களைப் பத்தி.. நல்ல தொகுப்பா இருந்தது..
நீங்க ரசித்த நாவலான பொன்னியின் செல்வனில் ஒரு பகுதியில் கல்கி சொல்லி இருப்பார்: "எல்லாக் காலத்திலும் சண்டையை ரசிக்காதவங்க யாரும் இருக்க முடியாது" என்று. அதிலும் மற்றவர்களை அழிக்கவேண்டும் என்பது போல் எல்லாம் இல்லாமல் கருத்துக்களச் சண்டைகள் ரொம்பவே ஆர்வமூட்டுபவை. இங்கே நிறைய பேர் விக்னேஷ் போல சண்டையை வெளியிலிருந்து ரசிப்பார்கள். சிலர் பங்கெடுப்பார்கள். சிலர் நடுவில் புகுந்து காமெடி பண்ணுவார்கள்.. அவ்வளவு தான்.. இதைச் சும்மா ரசித்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.. குறள் எல்லாம் எடுத்துச் சொல்லி யாரும் மாறியதாக இணைய வரலாற்றில் இல்லை..
சில இடங்களில் நீங்க சொன்ன கருத்துகள் எனக்கும் பிடிச்சிருந்தது.. சில இடங்களில் பிடிக்கவில்லை தான்.. உதாரணத்துக்கு இந்தக் குப்புசாமியின் பதிவில் கோபம் வேண்டாம்னு சொன்னது எனக்குப் பிடிக்கலை.. அதே சந்தோஷ் டோண்டு பதிவில் எனக்குச் சொன்ன அறிவுரை, ராபினின் தனிமனிதத் தாக்குதல் இதெல்லாம் எனக்குச் சரி என்று தான் தோன்றியது.. நீங்க சொன்ன பிறகு தான் விவாதத்தை வளர்ப்பதில்லைன்னு முடிவெடுத்தேன். ஆக, மொத்தமா வெளியாட்கள் பதிவில் பின்னூட்டம் இட மாட்டேன் என்னும் எண்ணத்தை மாத்திக்குங்க..
மத்தபடி, இந்த குழலி பதிவுல ஏதோ அட்வைஸ்னு போட்டிருந்தீங்களே, நான் அதை மட்டும் மிஸ் பண்ணிட்டேன்.. சுட்டி கொடுத்தா படிச்சி மகிழ வசதியா இருக்கும் ;-)
நன்மனம் நன்றி. கோவி படிச்சுட்டு பதில் சொல்லுறேன் உங்களுக்கு. ஜயராமன் சார் நிறைய டெம்பிளேட் முயற்சிக்கு நடுவே போட்ட பதிவு மாத்தீடுறேன். கல்வெட்டு தகவலுக்கு நன்றி அவர் பிராமிணருக்கு மிக அருகாமையில் இருக்கும் ஒரு குலத்தைச் சார்ந்தவராம். முத்துக் குமரன் நான் விவாதிக்கவே போறதில்லை என்றுதான் படிவிட்டேன், அதனால் உங்களுக்கு இதை பற்றி என்னால் கருத்து சொல்ல இயலாது. லக்கி லூக் உங்களுக்கும் அதே. நன்றி ரவி. வந்து பாக்கறேன். நன்றி என்னார் ஐயா. காலம்தான் பதில் சொல்லனும் விக்னேஷ். நன்றி SK சார். நாகை சிவா அடுத்த அட்லாஸ் வாலிபர் நீங்கதான்னு நினைக்கிறேன். அடிச்சு தூள் கிளப்பீட்டு இருக்கீங்க. வ வா சா வை மிகவும் ரசிக்கும் ஆட்களில் நானும் ஒருவன் ஆனா நான் அதை வெளியில் இருந்து பார்த்தால் தான் சரியாக இருக்கும். பொன்ஸ் நன்றி. URL கீழே
http://kathalregai.blogspot.com/2006/05/blog-post.html
குமரன், உங்களிடம் விவாதிப்பதற்காக அந்த பின்னூட்டத்தை இடவில்லை. என்னுடைய கருத்தை தெரிவித்தேன். உங்கள் விருப்பத்தை மதிக்க வேண்டுமென்பதற்காகத்தான் மேற்கொண்டு விவாதிக்க அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
நன்றி
Post a Comment