Thursday, April 27, 2006

உதட்டோரப் சிரிப்பழகு

நம் உடல்கள் பிரிந்திருக்கும் வேளையிலே
உன் உதட்டோரச் சிரிப்பினழகை தேடுகிறேன்

உன் அழகைக் கண்டு
தன் அழகை எண்ணி வெட்கி
மேகக் கூட்டங்களில் இடையே ஒளிந்திருக்கும்
நிலவில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

என் கோபத்திற்கு பயந்து
பல கோடி ஒளியாண்டு தள்ளி
நின்று உன்னைப் பார்த்து கண்ணடிக்கும்
நடசத்திரங்களில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

காலையில் உன்னைக் காண
தினமும் கிழக்கில் உதிக்கும் சூரியன்
மாலையில் மறையும் நேரம் பூக்கும்
அந்திமந்தாரையில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

மேகத்தில் பயணம் செய்து
மழையாகி உன்னைத் தொட முயற்சி
செய்ய சூரியனின் கோபப் பார்வையிலுண்டான
வானவிலில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

உன் கழுத்தில் வந்தடைய
புற்றில் தவமிருக்கும் முனிவர் போல்
சிப்பிக்குள் சென்று தவமிருந்து உருமாறும்
முத்தில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

உன் கூந்தல் அடையவே
காலையில் பூத்து மாலையில் உன்னை
அடையாதாதால் வாடி விடும் எந்தப்
பூவிலும் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

இப்படி விண்ணிலும் மண்ணிலும் ஆழ்கடலிலும்
தேடிய உன் உதட்டொர சிரிப்பழகை
உன் உதட்டொர சிரிப்பின் அருகில்
உள்ள கன்னக் குழியில் மறந்து போகிறேனடி!!!

Tuesday, April 18, 2006

டோண்டுவிற்கு ஒரு வேண்டுகோள்

"ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்"

வலைப் பதிவாளர் சிவக்குமாருக்கு இந்த கருத்தை வழியுறுத்த முயன்றதற்காக என்னுடய வாழ்த்துக்கள்.

டோண்டு அவர்களின் அறுபதாம் ஆண்டு பதிவில் வாழ்த்து தெரிவதற்காக என்னுடய பதிவில் போலி டோண்டு ஆபாசமான வார்தைகளை பயன்படுத்தி பின்னூட்டம் இட்டு இருந்தார். அவ்வாறு ஆபாசமான வார்த்தைகளை பயன் படுத்தாமல் ஆரோக்கியமான பதிவாக வெளியிட்டுள்ளதர்காகவும் என்னுடய வாழ்த்துக்கள்.

என்னை இதை எழுத தூண்டியது டோண்டு அவர்கள் தங்களுக்கு அளித்த பின்னூட்டம்தான்.

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

இதோடு நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை மேலும்

"இவ்வாறு கூறியது நடப்பதை வைத்துத்தான்"

என்று கூறி இருப்பது

திரு டோண்டு அவர்களின் நான் தான் உயர்ந்தவன் என் ஜாதிதான் உயர்ந்தது என்ற மனோபாவத்தைதான் காட்டுகிறது.

என்னை உண்மையாக புண் படுத்தியது என்னவெனில் இது போன்ற கருத்துக்கள் தமிழ்மணம் போன்ற ஒரு நல்ல முயற்சி நடந்து கொண்டிருக்கும் இடத்தில் கூறப் பட்டு இருப்பதுதான்.

இது போன்ற கருத்துக்கள் இந்த நல்ல முயற்சியை தவறான விசயங்களில் திசை திருப்பி விட்டு விடுகிறது.

பாருங்களேன் விவாதிக்க எவ்வளவோ தலைப்புகள் உள்ள நிலையில் நாம் இன்னும் ஜாதியைப் பற்றி விவாதித்து வருகிறோம்.

டோண்டு அவர்களே "பார்பன எதிர்ப்பு" என்று சொல்கிறீர்களே ஏன் பல ஜாதிகள் உள்ள நிலையிலும் "பார்பன எதிர்ப்பு" மட்டும் தோன்றியது என்று எண்ணுகிறீர்கள் உங்கள் வார்த்தைகளை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

இது போன்ற ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களின் ஆணவம்தான் தீண்டாமை, கோயிலுக்குள் அனுமதி மறுத்தல் போன்ற பல கொடுமையான விசயங்களுக்கு மூல காரணம் .

"பார்ப்பன எதிர்ப்பு" ஏனெனில் இது போன்ற கொடுமைகளுக்கு 90 சதவீதம் அவர்களே காரணமாக இருந்துதான்.

மேலும் அடக்கி ஒடுக்க பட்ட காரணங்களினால் மட்டுமேதான் சில காலம் முன் வரை சில கூறிப்பட்ட பிரிவினரே எல்லா இடங்களிலும் மேலே வர காரணமாக இருந்ததே ஒழிய வேறு காரணங்கள் இல்லை.

உதாரணமாக IIT எடுத்துக் கொள்ளுங்கள் நான் படிக்கும் காலங்களில் IITயில் சேர்வது எப்படி என்பது என்பது எனக்கு தெரியாது ஆனால் சில பிரிவை சேர்ந்தவர்களுக்கு இது போன்ற விசயங்கள் தெளிவாக தெரிந்து
இருந்ததால் அவர்களால் அதில் சுலபமாக நுழைய முடிந்தது.

ஆனால் இன்று மாறி வரும் காலம் விழிப்புணர்வு முன்பு இருந்ததை விட பல மடங்கு உள்ளது, இன்றைய நிலையில்

"என்னதான் தலை கீழாக நின்றாலும் பார்பான்கள் முன்னேறுவதை தடுக்க முடியாது, போடா ஜாட்டான் என்று அவர்கள் போய் கொண்டே இருப்பார்கள்"

பார்பான்களாய் பிறந்தாலேயே அவர்கள் முன்னேறி விடுவார்கள் போன்ற ஆணவமான கருத்துக்கள் ஜாதி மதம் இல்லை என்று எண்ணும் என்னைப் போன்ற பலருடைய மனதை புண்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் ஒரு அருமையான முயற்சியான தமிழ்மணம் போன்றதை ஆரோக்கியமான விசயங்களில் இருந்து திசை திருப்பி விடுகிறது.

ஆகையால் தயை கூர்ந்து இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.