Tuesday, July 04, 2006

திருமணம் அவசியமா?

நீண்ட நாள் கழித்து நண்பர்கள் நிறைய பேருடன் சேர்ந்து கோவைக்கு ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் சமயம் பகல் நேர புகை வண்டியாக அமைந்ததாலும், 8 மணி நேரப் பயணமாக அமைந்ததாலும், 12 பேர் இரு வரிசையில் எதிரெதிரே உட்கார இடம் கிடைத்ததாலும் பல பேரின் கோபப் பார்வைகளுக்கு ஆளாக நேரிட்டாலும் பல விசயங்களைப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. எல்லோரும் கல்யாண வயதை எட்டிவிட்டதால் எப்போ கல்யாணம் வீட்டில் பார்க்க ஆரம்பித்து விட்டார்களா என்ற கேள்விகளும் எழுந்தன. வேறு பல சுவாரஸ்யமான பல விசயங்களையும் பேசினோம் அதனை பற்றி தனியாக ஒரு இடுகை இட வேண்டும்.

இதில் எங்கள் நண்பன் ஒருவன் இருக்கிறான். சேவை மனப்பான்மை கொண்ட அவனுக்கு சில குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனைகள் உண்டு. அதற்கு திருமணம் ஒரு தடையாக அமையாவிட்டாலும் திருமணத்தால் பொறுப்புகள் உண்டாவதால் அவனால் தன்னுடைய சமுதாய சேவைகளை தான் நினைக்கும் அளவுக்கு நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்று ஐயம் கொள்கிறான். அதனால் கல்யாணம் அவசியமா என்று எங்களைக் கேட்டான்.

எனக்குள் திருமணம் அவசியமா என்ற கேள்வி வேறு ஒரு காரணங்களுக்காக உண்டு. திருமணம் என்பது காதலை நாம் கொண்டாடுவதற்காக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு( Marriage should be to celebrate Love ). காதல் செய்யாமல் திருமணம் புரிவது சரியல்ல என்பது என் கருத்து. நம் நாட்டில் திருமணம் என்பது ஒரு சமுதாயக் கடமையாக மாறி விட்டது என்பது என் கருத்து( Marriage in our country has become more social than personal ). ஆகவே எனக்கும் என் நண்பனுக்கு திருமணம் அவசியமா என்று மனதுள் எழுந்த கேள்வியை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.

நீங்கள் கூறுவதை வைத்து நானோ என் நண்பனோ முடிவெடுக்கப் போவதில்லை இருப்பினும் எல்லோருக்கும் திருமணம் அவசியமா? நம் நாட்டுத் கல்யாணங்கள் நடக்கும் விதம் சரியானதுதானா அதாவது காதல் செய்யாமல் சமூகத்திற்காக திருமணம் புரிவது என்ற கேள்விகள் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் உங்கள் முன் இந்தக் கேள்விகளை வைக்கிறேன்.

9 comments:

')) said...

குமரன் சார்,

இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் முத்தினா நல்லா இருக்காது. கொஞ்ச நாள் சுகமா இருக்கும். இந்த காதல், கத்திரிக்கா எல்லாம் பலதுல உள்ள பூச்சி இருக்கும். வாங்கி கட் பண்ணின பிறகுதான் தெரிய வரும்.

அப்புறம் என்ன, சமூக சேவை செய்யறேன்னு உங்க பிரண்ட் நடையை கட்ட வேண்டியதுதான். ஏன்னா, எக்குதப்பா மாட்டிக்கிட்டீங்கன்னா, இருக்கிறத எல்லாம் உருவிக்கிட்டு விட்டுவிடுவாங்க.

அதுக்கு சேப்பா வீட்டுல சொல்லி ஒரு கத்திரிக்கா வாங்கிகிட்டீங்கன்னா ப்ராப்ளம் இருக்காது. அவங்க செக் பண்ணி சமயலுக்கு ஏத்த மாதிரி குடுப்பாங்க.

ஏன்னா, எந்த கத்திரிக்காயிலயும் சாம்பார் வைக்கலாம். இதுக்காக டென்ஷனாக வேண்டான்னு உங்க பிரண்டுகிட்ட சொல்லுங்க.

அவ்ளோதான் எனக்கு தோணினது.

நன்றி

')) said...

அதுக்கு சேப்பா வீட்டுல சொல்லி ஒரு கத்திரிக்கா வாங்கிகிட்டீங்கன்னா ப்ராப்ளம் இருக்காது. அவங்க செக் பண்ணி சமயலுக்கு ஏத்த மாதிரி குடுப்பாங்க.//

இந்த வரிகளைப் படிக்கும்போது இது உண்மையிலயே ஜயராமன் எழுதிய பின்னூட்டமா இல்ல போலியான்னு தெரியலை..

அவரே எழுதியிருந்தா..

அதென்ன ஜயராமன் சேப்பா ஒரு கத்தரிக்கா.. ஏன் கருப்பாருந்தா சரி வராதா..

சரி அது போட்டும்..

அதென்ன அவங்க செக் பண்ணி..?

எப்படி சார் செக் பண்ணுவாங்க..

அதுவும் போட்டும். அதென்ன சமையலுக்கு ஏத்தா மாதிரி..

நிறைய கேள்வி கேட்டுட்டேனோ?

விஷயத்துக்கு வருவோம்..

குமரன் கேட்ட கேள்வி ரொம்ப சீரியசானதுன்னு நினைக்கிறேன்..

திருமணம் தேவையான்னு கேட்டா தேவைதான்..

சமூக நிர்பந்தகளுக்கு மட்டுமே திருமணம் என்பது சரியல்ல..

வாழ்க்கையில் முழுமையும், அர்த்தமும் ஆண், பெண் இருவரும் சேர்ந்து வாழும்போதுதான் ஏற்படுகிறது.

அதற்காக ஆணும், பெண்ணும் ஒரே கருத்துடையவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை.. கருத்து வேறுபாடு ஏற்படும்போதுதான் நல்லது வெளிப்படுகிறது.

அபிப்பிராய பேதங்கள் இல்லாத வாழ்க்கையில் ஒரு த்ரில், அட்வென்ச்சர் இருக்காது..

ஊடலும், கூடலும்தான் திருமணத்தின் மகத்துவமே..

எந்த ஒரு இளைஞனும், இளைஞியும் திருமணத்தை ஏதோ ஒரு சுமையாய் நினைப்பதை தவிர்க்கவேண்டும்..

இல்லையென்றால் நம்முடைய தலைமுறை நம்முடனே அழிந்துபோய்விடும்..

இதுதான் என் கருத்து.. இது சரியா தவறா என்பது அவரவர் நோக்கத்தைப் பொறுத்தது..

')) said...

குமரன் சார்,

அவசரத்தில் லஞ்சுக்கு போகும் முன் கிருக்கியது. நான்தான்.

சேப்பா என்பது சிகப்பா என்று அல்ல. safe ஆ. என்று படியுங்கள்.

பெற்றோர்கள் நிச்சயம் செக் பண்ணுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு சமையலுக்கு (குடும்பத்துக்கு) என்ன வேண்டும் என்று தெரியும். முன்பின் தெரியாத உங்களுக்கு எப்படி தெரியும். ஒரு வீட்டை வாங்கவே நீங்கள் ஒரு இஞ்சினியரையோ, ஆர்கிடக்டையோ கேட்பதில்லையா? ஏன்? வசிப்பது நீங்கள்தான் என்றாலும் அவர்களுக்கு அனுபவம் இருக்கிறதல்லவா. அதுபோலத்தான். கல்யாணம் உங்களுக்கே இருந்தாலும், தங்கள் பெற்றோருக்கு தெரியுமல்லவா தங்கள் விருப்பு வெறுப்பு, எல்லாம்?

அதைத்தான் குறிப்பிட்டேன். மற்றபடி 'செக்' என்பதற்கு வேறு அர்த்தம் இல்லை.

நன்றி

')) said...

திருமணத்தில் இன்றைய இளைஞர்கள் / இளைஞிகள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பது உண்மை..அதுவும் அதிவிரைவான இயந்திர வாழ்க்கையில் கூடுதல் சுமையாகவே தெரிகிறது சிலருக்கு...கல்யாணமா...எனக்கா..ஹா ஹா ஹா என்று சிரிக்கும் அளவுக்கு வந்திட்டனர்.

நீங்கள் கூறியபடி சமுதாயத்துக்காகத்தான் திருமணம் செய்ய ஒத்துக்கொள்கின்றனர்...

பரஸ்பர அன்பு இல்லாமல் திருமணம் முடிந்துவிடுகிறது...

சிறிய விஷயத்துக்கு கூட விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அருகி வருகிறது....நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்..என்ற கேள்வியை தாங்களாகவே எழுப்பி அதில் தங்களுக்கு சாதகமான ஒரு முடிவையும் எடுத்துகொள்கின்றனர் பெரும்பாலானவர்கள்...

சலிப்பு மனப்பாங்கு, ஆழமான பிடிப்பு இல்லாத வாழ்க்கை முறை, எனக்கென்ன என்ற போக்கு பெருகி வருகிறது...

இந்த நிலை தொடரும் என்று தான் நினைக்கிறேன்...பரிணாம வளர்ச்சியின் அங்கமாகவே பார்க்கிறேன்...

I need my Space...என்ற எண்ணம் பரவி வருகிறது...

பிறருக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகின்றனர்..

பொருளாதார சுகந்திரம் இதற்க்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது...

என்னமோ போங்க...எதுல போய் முடியுமோ தெரியவில்லை...

')) said...

//I need my Space...என்ற எண்ணம் பரவி வருகிறது...//
I need my Space... and also want your space only for Rental என்ற எண்ணம் பரவி வருகிறது

')) said...

கருத்து சொன்னதுக்கு நன்றி ஜயராமன் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் பல நன்மைகள் இருந்தாலும் எனக்கென்னவோ கல்யாணம் என்பது காதலால் வர வேண்டும் என்று தோன்றுகிறது.

ஜோசப் சார் நீங்கள் சொன்ன கருத்துக்கள் பெரியோர் சொன்ன பெருமாள் சொன்ன மாதிரி என்ற வார்த்தைகளை ஞாபகப் படுத்துகிறது. வாழ்க்கை அனுபவம் உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது. இருப்பினும் தலைமுறை வளர வேண்டும் என்பதற்காக திருமணம் செய்ய வேண்டும் என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

ரவி உங்க ஸ்டைலை மாற்றி ரொம்ப சீரியஸா எழுதியிருக்கீங்க. திருமணமே வேண்டாம் என்று சொல்லவில்லை. சமூகத்திற்காக திருமணம் என்பது கூடாது என்பது என் கருத்து. ஒருவர் திருமணம் புரிந்தால் அது சரியான காரணங்களுக்காக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

நன்றி கோவி. கண்ணன்.

')) said...

குமரன் ரொம்ப யோசிக்காதிங்க ... சீக்கரமே கல்யாண சாப்பட்ட போடுங்க

')) said...

அதானே என்னடா ரவியும், கோவி கண்ணனும் வழக்கமா நக்கல் அடிப்பாங்களே இன்னைக்கு ரொம்ப சீரியஸா பேசறாங்களேன்னு நினைச்சேன் கோவி. கண்ணன் மறுபடியும் பார்ம்க்கு வந்துட்டார்.

')) said...

//
குமரன் எண்ணம் said...
அதானே என்னடா ரவியும், கோவி கண்ணனும் வழக்கமா நக்கல் அடிப்பாங்களே
//
எல்லாம் நல்ல எண்ணம் தான் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பெரியவர்கள் நன்றாக சொல்லியிருக்கிறார்களே :)