Wednesday, January 10, 2007

atheism-myth understood??!!

"பகுத்தறிவு என்பது மர்மங்களை அறிந்து கொண்டது. "

எங்கேயோ எப்போதோ படித்த வாசகம் இது. பல சமயங்களில் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன்.

சினிமா நடிகைகளின் இடுப்பு, அவர்கள் கட்டியிருக்கும் சேலை ஆகியவற்றுக்கு அடுத்து மனித குலத்தைக் ஆர்வத்தை சுண்டி இழுப்பதில் மர்மங்களுக்கு பெரிய பங்கு உண்டு.

பிரேமானந்தா போன்ற போலிச் சாமியார்களின் வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, கையில் விபூதி கொட்டச் செய்வது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு மனிதர்கள் ஏமாறுவது மனிதர்களுக்கு மர்மங்களில் உள்ள ஆர்வத்தாலும், ஈர்ப்பினாலும்தான்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை தவிர்த்தும் பல மர்மங்கள் இந்த உலகில் உண்டு.

ஆவிகள் என்பது இன்னும் மனிதர்கள் அறிந்து கொள்ள முடியாத மர்மம் தான். பெர்முடா முக்கோணம் என்பதும் இன்று மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவே இருக்கிறது. சில மனிதர்களுக்கு இருக்கும் சக்திகள் இல்லை சிலரால் செய்ய முடிகின்ற சில செயல்கள்(உதா யூரி கெல்லரின் ஸ்பூனை கண் பார்வையாலேயே வளைக்கும் திறன்) போன்றவை மர்மமாகவே இருக்கிறது. Ripley's beleive it or not போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படும் சில விஷயங்கள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இது போன்ற மர்மங்கள் அனைத்தையும் பகுத்தறிவு அறிந்து கொண்டேன் என்கிறது இந்த சொல்லாடல்.முதன் முதலில் இந்த வாசகத்தைப் படித்த சமயம், இவ்வளவு மர்மங்களையும் அறிந்தேன் என்று சொல்கிறதே என்ன ஒரு ஆணவமான சொல்லாடல் என்று தோன்றியது.

பின் யோசித்துப் பார்க்கும் சமயம் இன்றைய உலகில் மர்மங்கள் என்பது குறைந்து கொண்டே வருகிறதோ என்று தோன்றுகிறது.

Big bang என்பது தெரியும் முன்னால் எப்படி இந்த உலகம் உருவானது என்பதே ஒரு மிகப் பெரிய மர்மம்தான். இன்றும் அது மர்மம் இல்லை அதனை அறிந்து கொண்டேன் என்று சொல்ல இயலாது என்றாலும் அந்த மர்மத்தின் பல முடிச்சுகள் அவிழ்ந்து விட்டது என்பதை அறிவுள்ளோர் அனைவரும் ஒப்புக் கொள்வர்.

இதே போன்று பல மர்மங்களின் முடிச்சு அவிழ்ந்து கொண்டே தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஆவிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில ஒரு விதமான பிரமிப்பாக ஏற்படுகிறது. ஒரு ஆராய்ச்சியில் psychon என்ற பொருள் ஒன்று இருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் இந்த் பொருள்கள் உடலுக்குள் எல்லா இடங்களில் பரவி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பொருள் ம் உடலுக்குள் நம்முடைய உணர்வுகளை நரம்புகள் மூலம் எடுத்துச் செல்ல உதவுகின்றதாக கூறுகிறார்கள். மேலும் இந்த்ப் பொருள்கள் நாம் இறக்கும் சமயம் நம் உடலை விட்டு வெளியே வெளியேறி ஆவி போன்ற தோற்றம் அளிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சி மூலமாக நிறைவேறாத ஏக்கம், ஆசை உள்ளவர்கள் ஆவியாகுகிறார்கள் என்று இருக்கும் நம்பிக்கைகள் கூட விளக்க முடியும் என்கிறார்கள்.

உதாரணத்திற்கு கேபிள் இல்லாமல் ஆண்டனா மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் வீடுகளில் பக்கத்தில் கேபிள் ஒயர் சென்றால் சன் டீவி புள்ளி புள்ளியாக தெரிகிறது இல்லையா அது போலத்தான் இதுவும் என்கிறார்கள். நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கும் எண்ணங்கள் வெளியே கசிவதால் உண்டாகும் பிம்பங்களை பிரதிபலிப்பே ஆவி என்பது போல ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு ஏற்படும் உணர்வு அல்லது அவர்கள் யோசிப்பது சில சமயம் வாய் விட்டு சொல்லாமலே நமக்குப் புரிகிறது இல்லையா? அதுவும் இந்த வகையையே சார்ந்ததே.

இது ஒரு வகை ஆராய்ச்சியே வேறு விதமாகவும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களுக்கு இருக்கும் விஷேசமான சக்திகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

கண் தெரியாத ஒருவருக்கு ஏன் கேட்கும் திறன் அதிகமாக இருக்கிறது? அந்த சக்தியை அவர்கள் அதிகமாக நம்பி இருப்பதால் அந்த சக்தியை நமது மூளை அதிகமாக வளர்த்து விடுகிறது. இதே போல மோப்ப சக்தி மனிதர்களுக்கு ஏன் இல்லை ஏனெனில் மோப்ப சக்தியை நம்பி மனிதர்கள் வாழவில்லை. அவனுக்கு ஏதேனும் ஒரு காரணத்திற்காக அது அதிகமாக தேவைப்பட்டிருந்தால் அந்த சக்தி அவனுக்கு இருந்திருக்கும். இதே போல தான் விஷேசமான சக்திகளும் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டு வருகிறது.

ஒரு ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு ஏன் telepathy சக்தி இல்லை மனிதர்களுக்கு இது ஒரு அத்தியாவசியமான ஒரு தேவை இல்லை. அதனால் அந்த சக்தியை மூளை வளர்த்துக் கொள்வதில்லை என்று சொல்கிறார்கள். மேலும் அந்த ஆராய்ச்சியில் ஆபத்துக் காலங்களில் இல்லை நம்மையே அறியாமல் பல சமயம் நாம் டெலிபதி போன்ற சக்திகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். யாராவது நெருங்கிய உறவினருக்கு ஆபத்து ஏற்படும் சமயம் அவருக்கு நெருக்கமானவர்கள் அதனை உணர்வது போன்ற சம்பவங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதெல்லாம் நாம் நம்மை அறியாமலே telepathy உபயோகித்து செய்வதாக சொல்கிறார்கள்.

இந்த சக்திகளை மனிதர்களால் வளர்த்துக் கொள்ள முடியுமா என்றும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு பக்கத்து அறையில் மாட்டி இருக்கும் ஓவியம் என்ன என்பதை அறியும் ஆராய்ச்சிகள். இதன் மூலம் டெலிபதி உணர்வு மூளையின் எந்தப் பகுதியில் இருந்து செயல்படுகிறது என்பது போன்றவற்றை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

யூரி கெல்லர் spoonஐ வளைத்துக் காட்டியது போல இன்னும் பல விஷயங்கள் மனிதர்களால் செய்ய முடியும் ஆனால் spoonஐ வளைப்பதை விட வேறு முக்கியமான பல விஷயங்கள் இருப்பதால் அவர்கள் செய்வதில்லை என்றும் சொல்கிறது ஆராய்ச்சி.

இதே போலத்தான் பெர்மூடா முக்கோணம் குறித்த ஆராய்ச்சிகளும் காந்த சக்தி, மின் சக்தி போன்றவை இந்தப் பகுதிகளில் சீராக இல்லாத காரணங்களால் கப்பல்கள், விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் இல்லை வேறு விதமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஆகவே உலகில் உள்ள மர்மங்களை எல்லாம் அறிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவமானதாக ஆரம்பத்தில் தோன்றினாலும் அதனைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் சமயம் வேறு விதமாக தோன்றுகிறது.

அந்த சொல்லாடல் மர்மங்களை அறிந்து கொண்டேன் என்று சொல்வது மர்மங்களை முழுவதுமாக புரிந்து கொண்டேன் என்பது போல அர்தத்தில் இல்லை. ஆனால் அதன் அர்த்தம் எந்த விதமான மர்மமாக இருந்தாலும் அதனை புரிந்து கொள்ள தேவையான அறிவைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்வது போலத்தான் அமைந்திருக்கிறது.

நிற வெறி என்பது melanin பற்றிய மர்மத்தை அறிந்து கொள்ளாததால் உருவானது. ஜாதிகள் எல்லா மனிதர்களும் குரங்கில் இருந்து மனிதர்களாக வளர்ச்சி அடைந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாததால் உருவானது தான். இன்று ஏற்படும் மத சண்டைகள் பிரபஞ்சத் தோற்றத்தில் தொடங்கி எல்லா விஷயங்களிலும் பிற மதம் மட்டும் தப்பு தப்பாக போதிக்கவில்லை தன் மதமும் தப்பு தப்பாகத் தான் போதிக்கிறது என்பதை உணராததால் வருவது தான்.

மர்மங்களை புரிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவம் இல்லை அறியாமையில் இருந்து வெளியே வரும் ஒரு வாயில்.

மதனின் மனிதனும் மர்மங்களும் படித்த போது தோன்றிய சில சிந்தனைகள்.