Tuesday, May 02, 2006

இவர்கள் இந்தியர்களா என்ற பதிவிற்கு பின்னூட்டம்

http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_22.html

நாம் இன்று இது போல பதிவுகளை எழுத முடிகிறது, வெடி குண்டு புகை நம்மை நடுவே நாம் வாழ்க்கையை கழிக்காமல் இருக்கிறோம், நாம் இன்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இன்று நம்முடைய நாட்களை கழிக்கிறோம் என்றால் அது நம்முடைய எல்லையில் தன் வீடு மறந்து சொந்தம் துறந்து இல் வாழ்வு துறந்து நம்மை காத்துக் கொண்டிருக்கும் எல்லைக் காவல் வீரர்களால் மட்டும்தான்.

ஆகவே இங்கு நாம் அவர்களைப் பற்றி எழுதும் முன் சிறிது யோசனை செய்த பின்னரே எழுத வேண்டும், முதல் அமைச்சர் முதல், பிரதமர் வரை யாரைப் பற்றி வேண்டுமெனிலும் நாம் எழுதலாம், கேவலமாக திட்டலாம், அதற்கு நமக்கு உரிமை உண்டு ஆனால் இந்த விசயத்தில் அவசரப்பட்டு வார்த்தைகளை விடுவது தவறாகும்.

அதற்காக இந்த விசயத்தை இப்படியே விட சொல்லவும் இல்லை. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற பரம்பரையில் வந்தவர்கள் அல்லவா நாம்?

பொதுவாக சைன் ஆப் கமாண்ட் என்பது ஆர்மியில் உயிரைவிட உயர்வாக கருதப்படும் ஒன்று ஏனெனில் சைன் ஆப் கமாண்டை ஒருவர் கடைபிடிக்கவில்லை என்றால் போகப் போவது இன்னொருவர் உயிர் அல்ல அந்த முழு குழுவில் உள்ள அனைவரின் உயிருமே ஆகவே சைன் ஆப் கமாண்ட் என்பதுதான் ஆர்மியில் மிகவும் முக்கியமாக கடைபிடிக்கப்பட வேண்டிய விசயம். ஆகவே ஒரு குழு தலைவர் சொல்லாமல் இந்த மாதிரி தவறுகள் நிகழ்வது மிகவும் கடினம்.

அதற்காக குழுத் தலைவரே இது போல கட்டளை இட்டார் என்றும் கூறவில்லை. வட கிழக்கு விவாகாரங்களில் நம்முடைய பாலிசி மேக்கர்ஸ் நடந்து கொள்ளும் விதமே இவ்வாறு தவறு நடக்க காரணம். மாற்றாந்தாய் பிள்ளைகளை பார்ப்பது போல வட கிழக்கு விவகாரங்களில் நம்முடைய அரசு நடப்பதால்தான் இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன். நம்முடைய ராணுவம் காஷ்மீரில் இருந்து ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற பல மா நிலங்களிலும் உள்ளதே இது போன்ற தவறுகள் அங்கெல்லாம் நடக்காமல் இங்கு நடக்க காரணம் அரசின் அலட்சிய போக்கே.

ஆஸ்பத்திரியில் கற்பழிப்புகள் நடக்கவில்லையா, போலீஸ் நிலையங்களில் நடக்கவில்லையா? டெல்லியில் நடக்கும் பாலியல் கொடுமைகள் போல எங்குமே நடப்பதில்லை ஆகவே ஒட்டு மொத்த பாரதத்தயே கீழ்தரமாக சித்தரிக்கும் வகையில் அந்த ஜெய் ஹிந்த் என்ற எழுதப் பட்டிருப்பது வேதனையை உண்டாக்குகிறது.

இந்தப் பதிவும் நம் பாரதத்திலா இப்படி என்ற வேதனையில் எழுதப் பட்டிருப்பதாகவே கருதுகிறேன் இருப்பினும் மனதில் ஒரு வேதனை அந்த ஜெய் ஹிந்த் என்ற சொற்களை கண்டு.

3 comments:

')) said...

ஒரு வார்த்தைக்கு எமேஷன் ஆகும் நீங்கள் அந்த மக்களையும் பாருங்கன்றாரு..அவ்ளோதான்..எல்லா கொடுமையையும் ஒரு வார்த்தை மறக்கடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்?

மத்தபடி அந்த வார்த்தையை மிஸ்யூஸ் பண்றதுதான் என் வருத்தம்..

')) said...

நண்பரே ஒரு வார்த்தை என்று சுலபமாக சொல்லாதீர்கள் நமக்கு விடுதலை வாங்கித் தந்த வார்த்தை என்பதை மறக்காதீர்கள்.

வட கிழக்கு மாநில மக்களின் வாழ்க்கை மிக மிகத் துயரமானது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

அதற்கு காரணம் நம்முடைய அரசியல்வாதிகளே. மிக சிறிய அளவு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதால் ஒதுக்கி விடும் அரசியல்வாதிகளை குற்றம் சொல்லுங்கள்.

நான் எமொஷனல் ஆவது தவறாகக் கூட இருக்கலாம் ஆனால் எமொஷனல் ஆகினேன் ஆகவே பதிவு

')) said...

//நாம் இன்று இது போல பதிவுகளை எழுத முடிகிறது, வெடி குண்டு புகை நம்மை நடுவே நாம் வாழ்க்கையை கழிக்காமல் இருக்கிறோம், நாம் இன்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இன்று நம்முடைய நாட்களை கழிக்கிறோம் என்றால் அது நம்முடைய எல்லையில் தன் வீடு மறந்து சொந்தம் துறந்து இல் வாழ்வு துறந்து நம்மை காத்துக் கொண்டிருக்கும் எல்லைக் காவல் வீரர்களால் மட்டும்தான்.
//
அதற்காக இராணுவத்தினர் என்பதற்காக எதுவேண்டுமானாலும் செய்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று கத்திவிட்டால் போதுமா? இதோ இத்தனை பின்னூட்டங்கள் நான் ஜெய்ஹிந்த் என்று எழுதியதை கண்டித்ததில் எத்தனை பின்னூட்டங்கள் இந்த இராணுவம் செய்தது தவறு என்று கூறியவர்கள்?

இந்த பின்னூட்டம் என்பதிவிலும்...