Friday, May 05, 2006

மதம்தனைப் புறக்கணியுங்கள் 3

ஹிந்து மதத்தின் வயது - 4000 ஆண்டுகள்
யூத மதத்தின் வயது - 3500 ஆண்டுகள்
பௌத்த மதத்தின் வயது - 2500 ஆண்டுகள்
கிறிஸ்துவ மதத்தின் வயது - 2000 ஆண்டுகள்
இஸ்லாமிய மதம் - 2000 ஆண்டுகள்

மனித பரிமாண வளர்ச்சியில் முதன் முதலாக மனித இயல்புகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் வயது - 4,000,0000 ஆண்டுகள்

முழு வளர்ச்சியுடன் குகைகளின் சித்திரம் தீட்டி தொடர்பு கொண்ட மனிதனின் வயது - 120,000 ஆண்டுகள்

4000 ஆண்டுகள் வயதுடைய சின்னப் பயலான மதம் 100,000 ஆண்டுகள் வயதுடைய மனித இனம் எது முக்கியம் என்ற கேள்வியை நாம் இன்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஒரு லட்சம் ஆண்டுகள் மனிதன் மதம் இல்லாமலே வாழ்ந்து வந்திருக்கிறான்.

மதங்கள் உருவான நோக்கம் மனிதம் தழைத்தோங்கவே...

மனித குழத்திற்கு அழிவை உண்டாக்கும் மதம்தனை புறக்கணிங்கள்.

இதனை படித்து நான் நாத்திகன் நம்பிக்கை இல்லாதவன் என்று முடிவு செய்து விடாதீர்கள்

என் இறைவனுக்கு பெயர் இல்லை, ராமர், அல்லாஹ், கிறிஸ்து என்று என் இறைக்கு நான் பெயர் சூட்டுவதில்லை. எனக்கு மார்கங்களை கீதை, குரான், பைபிள் கற்றுத் தருவதில்லை. எனக்கு இறையைச் சென்றடைய முகமது நபிகளோ, கிறிஸ்துவோ, கிருஷ்ணரோ போதனை செய்யவில்லை.

இதனைப் பின்பற்றுவதால் ராமர் கோயில் கட்டுவதற்கு நான் பாபர் மசூதி இடிப்பதில்லை, புனிதப் போர் என்று மற்ற நாடுகள் மேல் படை எடுப்பதில்லை, மதம் காக்க தீவிரவாதம் மேற்கொள்ளவில்லை.

இந்தக் கொடுமைகள் செய்வதற்கு நான் துணை போவதுமில்லை.

என் மதத்திலிருந்து மத மாற்றம் செய்கிறார்கள் என்று கோபம் கொள்வதில்லை.

மதம் பிடித்துள்ள வரை மனிதனின் மதம் அவனை மிருகமாக்கி வருகிறது.

எல்லா மதங்களும் ஒரே இறை நிலையையே சென்றடைகிறது. நான் மத அடையாளங்களை துறந்ததால் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும் உங்களுடைய கடவுளுக்கு பிடித்தமானவன் நானாகவே இருப்பேன்.

கிறிஸ்துவும், முகமது நபிகளும், கிருஷ்ண பரமாத்மாவும் இன்று இருந்திருந்தால் மனிதனை அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லும் மதம்தனைப் புறக்கணியுங்கள் என்றே சொல்லி இருப்பார்கள்.

ஹிந்து, முசல்மான், கிறிஸ்துவர் என்ற அடையாளம் துறந்து மனிதன் என்ற அடையாளம் பூணுங்கள் மனித நேயத்தை மதமாகக் கொள்ளுங்கள்.

1 comments:

')) said...

நன்றி விசிறி அவர்களே இன்று மனித குலம் மதத்தின் பெயரால் பிரிந்து அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மனிதன் மனித நேயத்தை மதத்தின் முன் வைக்க வேண்டும் என்பதே என் எண்ணம்