Thursday, April 27, 2006

உதட்டோரப் சிரிப்பழகு

நம் உடல்கள் பிரிந்திருக்கும் வேளையிலே
உன் உதட்டோரச் சிரிப்பினழகை தேடுகிறேன்

உன் அழகைக் கண்டு
தன் அழகை எண்ணி வெட்கி
மேகக் கூட்டங்களில் இடையே ஒளிந்திருக்கும்
நிலவில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

என் கோபத்திற்கு பயந்து
பல கோடி ஒளியாண்டு தள்ளி
நின்று உன்னைப் பார்த்து கண்ணடிக்கும்
நடசத்திரங்களில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

காலையில் உன்னைக் காண
தினமும் கிழக்கில் உதிக்கும் சூரியன்
மாலையில் மறையும் நேரம் பூக்கும்
அந்திமந்தாரையில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

மேகத்தில் பயணம் செய்து
மழையாகி உன்னைத் தொட முயற்சி
செய்ய சூரியனின் கோபப் பார்வையிலுண்டான
வானவிலில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

உன் கழுத்தில் வந்தடைய
புற்றில் தவமிருக்கும் முனிவர் போல்
சிப்பிக்குள் சென்று தவமிருந்து உருமாறும்
முத்தில் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

உன் கூந்தல் அடையவே
காலையில் பூத்து மாலையில் உன்னை
அடையாதாதால் வாடி விடும் எந்தப்
பூவிலும் இல்லையடி உன்னுதட்டோர சிரிப்பழகு

இப்படி விண்ணிலும் மண்ணிலும் ஆழ்கடலிலும்
தேடிய உன் உதட்டொர சிரிப்பழகை
உன் உதட்டொர சிரிப்பின் அருகில்
உள்ள கன்னக் குழியில் மறந்து போகிறேனடி!!!

2 comments:

')) said...

லொக்கேஷன கரெக்டா பாய்ன்ட் பண்னிட்டீங்க பாஸ்...

// நான் தமிழில் மட்டுமே எழுதுவேன் //

')) said...

உதட்டோரச் சிரிப்பிற்கு இத்தனை உவமையா?.. ஆண்களின் எழுதுவதை பார்த்தால் பொறாமையாக இருக்கு..