Thursday, May 04, 2006

மதம்தனைப் புறக்கணியுங்கள் - 2

மனிதம் தழைக்க உருவான மதம் இன்று மனித குலத்தையே அழிவு பாதையில் இட்டு சென்று கொண்டிருக்கிறது.

வலை பதிவுகளே அதற்கு சாட்சியாக உள்ளது. இன்று வலைப் பதிவுகள் இடும் அனைவருமே நன்கு படித்தவர்கள் இன்றுள்ள உலக நடப்பை மற்ற மக்களைவிட நன்றாக உணர்ந்தவர்கள் ஆனாலும் இங்கு வரும் பதிவுகள் எப்படி உள்ளது?

கிறிஸ்துவர்கள் அனைவருமே கொடியவர்கள் என்று ஒருவர் எழுதுகிறார், இஸ்லாமிய மதங்களில் தீவிரவாதம் பற்றி ஒருவர் எழுதுகிறார், ஹிந்துக்களின் போக்கு பற்றி மற்றொருவர் எழுதுகிறார்.

இதன் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

உங்கள் வலைப் பதிவுகள் தீவிரவாதத்தையும், கசப்பான எண்ணங்களையுமே தூண்டி விடுகிறது.

மதத் தீவிரவாதிகளுக்கும் இது போன்ற பதிவுகளை எழுதுபவர்களுக்கும் ஒரே வித்தியாசம் இது போன்ற பதிவுகளை எழுதுபவர்களுக்கு தீவிரவாதம் செய்ய சந்தர்ப்பம் கிட்டவில்லை என்பதுதான்.

எனக்கு சில காலம் முன்பு வந்த மின்னஞ்சலில் பிடித்த மின்னஞ்சல்

ஒரு கருத்தை வெளி இடும் முன் அந்தக் கருத்தை மூன்று விதமாக வடி கட்டி விடுமாறு கூறி இருந்தது

1. இது உண்மைதான என்பது முதல் வடி கட்டி

2. இது தேவைதானா என்பது இரண்டாம் வடிகட்டி

3. இது மற்றவர் மனதை புண்படுத்துமா என்பது மூன்றாம் வடிகட்டி

பதிவுகள் இடும் முன்னரும் நாம் இந்த மூன்று வடிகட்டிகளை பயன் படுத்த வேண்டும்

மத துவேஷங்களை எந்த விதத்தில் தூண்டினாலும் அதுவும் மதத் தீவிரவாதமே.

பதிவுகளையாவது மதங்களை துறந்து எழுதுங்கள் எழுத எத்தனையோ அற்புதமான கருத்துக்கள் உள்ளன.

இந்தப் பதிவு மன வேதனையின் காரணமாக எழுதப்பட்டது.

14 comments:

')) said...

மனமிருப்பவன் மதத்தைப் பற்றி பேசமாட்டான்! 'மதம்' பிடித்தவன்தான் மதத்தைப் பிடித்து கொள்கிறான்! ஒரு முறை தேவையில்லாமல் ஒருவர் சீண்டிவிட வந்த புதுசில் (வலைக்குள் வந்த புதிதில்) அவருக்கு பதில் பதிவு போட்டேன்.

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post.html

அப்புறம்தான் ஞானம் வந்தது. நாம் பின்னூட்ட, பின்னூட்டத்தானே, இது வளர்கிறது? அதை அப்படியே விட்டுவிட்டால்? மதம் தானாக அடங்கும்!
அதை தெரிந்து தெளிந்த நிலையில் நானளித்த கவிதை:

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post_06.html

')) said...

நல்ல கருத்து செந்தில்

')) said...


கிறிஸ்துவர்கள் அனைவருமே கொடியவர்கள் என்று ஒருவர் எழுதுகிறார், இஸ்லாமிய மதங்களில் தீவிரவாதம் பற்றி ஒருவர் எழுதுகிறார், ஹிந்துக்களின் போக்கு பற்றி மற்றொருவர் எழுதுகிறார்.

குமரன் மிகச் சரியாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். நாம் படித்த மனிதர்களாக இருக்கிறோமே தவிர, சமூக அறிவுள்ள மனிதனாக மாறவில்லை என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இதற்கு காரணம் நமக்கு பள்ளி பருவத்தில் இருந்தே சமூக கல்வியை ஊட்டாததுதான். பாடத் திட்டத்தில் செக்சுக்கு கொடுக்க வேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வருகிறதோயொழிய சமூக கல்வியை அளித்திட வேண்டும் என்று முன்வருவதில்லை.
அடுத்து உங்களது 3 பாயிண்ட் கருத்து நிச்சயம் அனைவரும் பின்பற்றிட வேண்டிய ஒன்று. ஏன், சமீபத்தில் ஆப்படிக்கிறோம் என்று ஒரு பதிவு... இதை என்னால் சகித்துக் கொள்ள முடிகிறது. இருப்பினும் நெருடுகிறது.
நான் ரசித்த பாடல் வரிகளில் ஒன்றினையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரை மீனாட்சிக்கும், காஞ்சி காமாட்சிக்கும்
மாசம் ஒரு கல்யாணமாம், நம்ம
எதுத்த வீட்டு பொண்ணுக்கு வயசாகி
நாளாச்சி எப்பத்தான் கல்யாணமாம்.

மத நம்பிக்கையாளர்கள், கடவுள் பக்தர்களாக இருக்கிறார்களோ யொழிய, மனிதம் படைத்தவனாகவோ, மனித நேயம் கொண்டவர்காளாகவே இருப்பதில்லை. மதங்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அது ஆளும் வர்க்கத்தின் சொத்து, மடமையில் இருந்து மக்கள் மீள்வதை மதமும் - கடவுளும் அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு நம் இடைத்தரகர்களாக இருக்கும் பூஜாரிகளும் அனுமதிக்க மாட்டார்கள்.
இதுபோன்ற பதிவுகள் மூலம் - ஆழமான விவாதத்தை தூண்டுவதன் மூலம் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்திட விதைகளைத் தூவலாம். வாழ்த்துக்கள் குமரன்.

')) said...

நன்றி ஜெய. சந்திரசேகரன்

உங்களின் பதிவுகளை படித்து என் கருத்துக்களை கண்டிப்பாக வெளியிடுகிறேன்.

நன்றி என்னார் ஐயா

உங்களைப் போன்ற தமிழ் அறிஞரின் கருத்துக்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.

நன்றி சந்திப்பு அவர்களே

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட பின்பே என் பதிவின் பின்னூட்டங்கள் தமிழ் மணத்தில் தோன்ற துவங்கியுள்ளன அதற்காகவும் நன்றி.

இன்று மனிதன் சந்தித்து வரும் மிகப் பெரிய அபாயங்கள் மதத்தின் பெயராலேயே உள்ளன மனிதனுக்காக உண்டான மதங்கள் மனிதனின் அழிவுக்கு வழி வகுத்துவிடக் கூடாது என்பதனாலேயே இந்தப் பதிவு.

')) said...

குமரனின் வேதனையில் கண்டிப்பாக அர்த்தம் இருக்கிறது. மதம் மனிதனை மனிதனாக்கத்தான் என்பதை மனிதர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ?

')) said...

நன்றி நிலவு நண்பன்.

என்னுடைய வேதனைகளை புரிந்து கொண்டமைக்கு

மனிதன் நீங்கள் கூறுவதைப் போல புரிந்து கொண்டு மனித நேயத்தை மதத்தின் முன் வைக்க வேண்டும் இல்லையெனில் மதம்தனை புறக்கணிக்க வேண்டும், இல்லையெனில் மனித குலத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று கூற இயலாது

')) said...

அன்பு குமரன்,
என் வேண்டுகோள்.
http://njaanametti.blogspot.com/2006/02/blog-post_09.html
நன்றி

')) said...

பாராட்டுகள் செந்தில்,

ஆரோக்கியமான பதிவுகள் கொடுக்கிறீங்க. கட்டாயம் உங்கள் பதிவுகள் மனதில் மாற்றங்கள் உண்டாக்கும், மனித நேயம் வளரும்.

அன்று மிருகமாக இருந்தவனை
மனிதனாக்கியது
இன்று மனிதனை மிருகமாக்குவதும்
மதம் தான்.

')) said...

ஞானவெட்டியான் ஐயா நீங்கள் என்னை விட ஞானத்தில் சிறந்தவர் ஆகவே உங்களுக்கு இது முன்னமே தோன்றியதில் ஆச்சர்யம் எனக்கில்லை.

பரஞ்சோதி அவர்களே நீங்கள் கூறியது போல மனிதனின் மனதில் மாற்றங்கள் உண்டாவது ஒன்றினால் மட்டுமே மனித குலத்தின் அழிவை தடுக்க முடியும்

')) said...

இதுல கொடுமை என்ன தெரியுங்களா?

ஒரு வலை பதிவாளர் ஒரு மதம் சார்ந்த ஒரு கருத்தை (சரியோ/தவறோ) தெரியாம சொல்லீட்டாருன்னு வைங்க, அவர் நடுநிலையாளர்னு எல்லாரும் ஒத்துக்கனும்னா எல்லா மதத்தையும் தாக்கி எழுதனுமாம்.

இப்படியும் சிலர் பின்னூட்டத்துல கேக்கறாங்க.

என்ன நடுநிலையோ... என்ன பார்வையோ...

')) said...

அன்பு குமரன்,
இதற்கெனத் தனி ஞானம் வேண்டியது இல்லை. மனிதன் மனிதனாக வாழ்ந்தால் போதும். அவனுள்ளே இருக்கும், அல்லது திணிக்கப்பட்ட விலங்கின் குணத்தை ஒரு மணித்தியாலம் ஒதுக்கிவிட்டு சிந்தித்தால் போதும்.
எத்தனையோ வழிகாட்டிகள் (இறைத்தூதர்கள்) வந்து வழிகாட்டியும், கடை விரித்தும் கொள்வாரில்லை. எடுத்துக் கொள்ளும் அந்த நாளும் வந்திடாதோ?

')) said...

நன்றி கோபி அவர்களே குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் தங்களுடைய பதிவுகளில் மத துவேஷங்களைப் பரப்ப மாட்டேன் என்று உறுதிமொழி போல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

')) said...

வருகைக்கு நன்றி தமிழ் குழந்தை தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர நான் என்ன கருத்துக்களை கூறுகிறேன் என்று தெரியவில்லை எதோ எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.

')) said...

சிட்டுக் குருவி மனிதனின் பரிமாண வளர்ச்சியின் வயது மதத்தின் வயதைவிட பல மடங்கு அதிகம். நாலாயிரம் ஆண்டு வயதுடைய மதம் கோடிக்கணக்கான ஆண்டுகள் பரிமாண வளர்ச்சி கொண்ட மனித குலத்தை அழித்துவிடக் கூடாது