Wednesday, May 31, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் 6

இன்று உலகில் உள்ள எந்த மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தாலும் ஒன்றை மட்டும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். அந்தத்த மதங்கள் கோலோச்சியிருந்த சமயத்தில் அதனால் பல இன்னல்களை மக்கள் சந்திக்க நேர்ந்தது.

ஹிந்து மதம் மக்களை பாகுபடுத்தி ஜாதிகளை தோற்றுவித்தது, கிறிஸ்துவ மதம் உலகம் உருண்டை என்று அறிவியல் பூர்வமாக சொன்ன விஞ்ஞானியை கைது செய்ததோடு சூனியக்காரிகள் எரிப்பு என்று படு கொலைகளை செய்துள்ளது. இஸ்லாமிய மதத்தின் பெயரால் இன்று நடக்கும் பயங்கரவாதம் போன்றவைகளைக் கூறலாம்.

மதங்கள் தோற்றுவிக்கபட்ட பொழுது அதனுடைய நோக்கம் இறையை உணர்வதற்காகவே இருந்தது. ஆனால் மனிதன் இறைவனை உணர்வதற்காகவா மதங்களை துணை கொள்கிறான்? அனைது மதங்களும் இறைவனை சென்றடைய உள்ள பாதைகள் தாம் என்பதை உணராமல் இல்லையே என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்று அடித்து கொண்டள்ளவா இருக்கிறான்.

எந்த மனிதனும் நபிகள் நாயகமோ, புத்தரோ, கிறிஸ்துவோ, விவேகானந்தரோ கிடையாது. மனிதனும் மிருகத்தின் பரிமாண வளர்ச்சியில் வந்துள்ளதால் அவனுடைய மிருக குணங்கள் இன்னும் அவனுள் மிச்சம் உள்ளது. அப்படி மிருக குணம் மிச்சமுள்ள மனிதனிடம் மதத்தைக் கொடுத்ததால் அவன் மதம் வழியாக இறையைத் தேடாமல், மற்ற மனிதர்களை தன் வெறிக்கு இரையாக ஆக்கிவிடுகிறான்.

மனிதனுளுலுள்ள ஞான விளக்கை ஏற்ற வந்த மனித குலத்தை தீயிட்டு கொளுத்தப் போகும் தீப் பந்தமாக மாறிவிட்டது வேதனைக்குறியது.

இன்று நாம் நம் மத நம்பிக்கைகளைக் களைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் நம் மத நம்பிக்கைகளை தொடர்வதால் மதங்களில் பெயரால் நடக்கும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே வரும். மனித குலம் அத்தனையையும் அழிக்கும் வல்லமை இன்று நம்மிடம் உள்ளது. ஆகவே மத நம்பிக்கைகளை நாம் களையா விட்டால் அந்த வல்லமை மதத்தின் பெயரால் உபயோகப்படுத்தப்பட்டு விடும்.

4 comments:

')) said...

1.மனுஷன் செஞ்ச தப்புக்கு மதம் என்ன செய்யும்?
2.மனுஷன் மதத்தை தப்பா பயன்படுத்தினா அது மனுஷன் தப்பா,மதத்தின் தப்பா?
3.இந்த பிரச்சனை தீர மதத்தை சரியாக பின்பற்றுவதே ஒரே வழி..:-))))))

இப்படி ஒரு பின்னூட்டமாவது வருமான்னு காத்திருக்கேன்.:-))

என் கருத்து
மதத்தை அப்படியே முழுக்க நம்புதல் தப்பு.(அல்லது)
ஒழிச்சா ரொம்பவே நல்லது.

')) said...

அனைத்து மதங்களும் அன்பை போதிக்கின்றன..

முழுமையாக மத்த்தினை புரிந்துகொள்வதே வழி...

மதத்தினை புறக்கணிப்பது கொஞ்சம் ஓவர்டோஸ்..

')) said...

நன்றி செல்வன் நீங்க யாரவது கேக்க மாட்டாங்களா நினைத்த கேள்விகளுக்கு பதில் இங்கே...

1. மதத்தின் பெயரால் செய்யும் தவறுகள் புனிதப் போர் என்று நியாயப்படுகிறது. ஆக மதத்தின் பெயரால் தவறு செய்தால் சரி என்றால் அது மதத்தின் தவறில்லையா?

2. மனிதன் செய்யும் தவறுகள் மதத்தின் பெயரால் புனிதமான செயலாக கருதப்பட்டால் அது யாரின் தவறு.

3. மதத்தை சரியாக பின்பற்றினாலும் மனிதன் தன்னுடைய நம்பிக்கைகள் தான் சரி என்ற அகந்தையால் பிரச்சனைகளை உண்டு பண்ணதான் செய்வான். இந்தப் பிரச்சனைகள் ராமிற்கும், ரஹீமிற்கும் இடையில் இருக்கும் வரை சரி ஆனால் பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் வந்தால் பிரச்சனை.

')) said...

கருத்துக்கு நன்றி ரவி... மனிதனின் மதம் ஓவர் டோஸாகி விடுமோ என்ற கவலையில்தான் எழுதினேன்...