Wednesday, May 17, 2006

ஜாதி இல்லையடி என் அனுபவம்

ஜாதி பற்றி பல சண்டைகள் சச்சரவுகளை தமிழ் மணம் சந்தித்திருக்கிறது. டோண்டு போலி டோண்டுவின் சண்டை குமுதம் வரை எட்டி விட்டது.

இதை எல்லாம் காணும் பொழுது நாம் இன்னும் ஜாதி பிணக்குகளால் பிரிந்திரிக்கிறோமா என்று ஒரு கவலை உண்டாகுகிறது. அதை மெய்பிப்பது போல் ஜாதிகள் பற்றி ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தமிழ் மணத்தில் காண முடிகிறது.

உண்மையில் நாம் இன்னும் ஜாதிகளால் பிரிந்திருக்கும் கற்காலத்தில் உள்ளோமா ஜாதிகள் அழியவே அழியாதா என்ற கவலை உள்ளவர்களுக்கு என் சொந்த அனுபவம் சிறிது நம்பிக்கை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த அனுபவம் மண்டல பொறியியல் கல்லூரி திருச்சி அனுபவம் இது.

மண்டலப் பொறியியல் கல்லூரியில் தமிழகத்திற்க்கு இருபத்தி நான்கு சீட்டுகளும், மற்ற மா நிலங்களுக்கு இருபத்தி நான்கு சீட்டுகளும் உள்ளது.

அங்கு ஜாதி மதங்களால் மட்டும் அல்ல பொதுவாக மொழி, மதங்களால் கூட அவ்வளவு வேறுபாடுகள் இல்லை.வேற்று மொழி, மதம், ஜாதி சேர்ந்தவர்கள் அங்கு மிகச் சிறந்த நண்பர்களாகவே இருந்தோம். வேற்று மொழி, மதம், ஜாதி காதல் ஜோடிகளும் இருந்தனர்.

நான் அங்கு படித்த வரை யார் யார் எந்த ஜாதி என்பது எவருக்கும் தெரியாது. நாங்கள் ஜாதிகளால் பிரிந்ததும் இல்லை. மேல் ஜாதியினரை திட்டி தீர்த்ததும் இல்லை. கீழ் ஜாதி என்று யாரையும் பிரித்ததும் இல்லை. பிராமிணர்கள் தங்களை உயர்வாக கருதியதும் இல்லை. அவர்களை யாரும் ஆரிய வந்தேறிகள் என்று திட்டியதும் இல்லை.

மொத்தத்தில் ஜாதி என்ற பேச்சே எங்களிடையே இல்லை.

இன்று படித்த இளைஞர்கள் ஜாதி என்பதை பற்றி அதிகம் யோசிப்பது இல்லை என்றே கூறலாம்.

வயதான கிழங்கள்தான் தான் உயர்ந்தவன் என்று கிறுக்கி கொண்டு திரிகின்றன. மன நிலை சரி இல்லாதவர்கள்தான் அதைக் கண்டு பொங்கி எழுந்து எல்லொருடைய குடும்பங்களையும் திட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

ஒரு வேளை நான் படித்த சமயத்தில் யாரேனும் பிராமிணர் என் ஜாதி உயர்ந்தது என்று கூறியிருந்தால் ( என்னுடன் படித்தவர்களோ அல்லது பொதுவாக படித்த இளைஞர்களோ அப்படி கூறுவார்கள் என்று நான் நம்பவில்லை ) அதனைக் கண்டு சிரித்து சென்றிருப்போம். அவ்வளவே எங்களுக்கு செய்ய வேறு வேலைகள் உள்ளது உளறுபவர்கள் உளறிக் கொண்டே இருக்கட்டும் என்று நடை கட்டியிருப்போம்.

வரும் படித்து யோசிக்கும் தலை முறையில் ஜாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

பல நூற்றாண்டுகளாக உள்ள நடை முறை என்பதால் சிறிது காலம் பிடிக்கிறது.

நான் இந்தப் பதிவை எழுதும் நோக்கம் ஜாதி பெரிது என்று எழுதினால் அதற்க்கு சிலர் ஒத்து ஊதுவதால் அவர்கள் சரி என்பதில்லை. சிரித்து ஒதுங்கி விடலாம், குடும்பத்தை வம்புக்கிழுப்பதால் ஒரு உபயோகமும் இல்லை என்று சொல்வதற்காக.

இது பற்றி அறிந்து பலர் அப்படி ஒதுங்கிதான் உள்ளார்கள், ஒதுக்கியும் உள்ளார்கள் என்று தெரியும். நான் புரிந்து வைத்திருப்பதை விட பலர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள் என்றும் தெரியும் இருப்பினும் பல நாள் கை அரித்ததால் இந்த பதிவு.

5 comments:

')) said...

உங்கள் கல்லூரியில் மட்டுமல்ல நண்பரே எல்லா கல்லூரிகளிலும் ஏன் அலுவலகங்களிலும் ஜாதிப் பெயரைக் கேட்டு நண்பர்கள் ஆவதில்லை...இந்த தலைமுறைப் போய் அடுத்த தலைமுறை வரும்போது கண்டிப்பாக ஜாதிக்கு சமாதி கட்டப்பட்டிருக்கும்

')) said...

நன்றி பிரியன், இது உயர்ந்த ஜாதி என்றும், ஜாதி வெறி ஒழிப்போம் என்பவர்களுக்கும் புரியட்டும். ஜாதி என்று ஒன்று சில காலங்களில் ஒழியப் போகிறது ஆகவே உயர்ந்த ஜாதி என்பது மூடத்தனம், ஜாதி ஒழிப்பு தேவை இல்லை( அதுவும் ஆபாசமான அருவெறுக்கத்தக்க முறையில் தேவையில்லை) என்றும் புரியட்டும்.

said...

ஆனால்,

திருமணத்தின் போது இன்னும் படித்த மக்கள் கூட ஜாதி பார்த்துதானே திருமணம் செய்து கொள்கிறார்கள். இன்னும் அனேக ஆண்டுகள் தேவை ஜாதி ஒழிய.

விஜய்

')) said...

நன்றி காசி, விஜய் கல்யாணம் செய்வது தெரிந்த பெண்ணாக வேண்டுமே என்றுதான் அதுவும் போன தலைமுறையினர் இன்னும் இருப்பதால்தான். இன்று ஜாதி பாராமல் நண்பர்களுக்குள் சம்பந்தம் பேசுவது, ஜாதி விட்டு காதல் கல்யாணங்கள் பெருகி விட்டன. நான் படிக்கும் சமயத்திலேயே உன் பையன் எனக்கு உன் பெண் எனக்கு என்று ஒரே வகுப்பில் உள்ள காதல் ஜோடிகள் பேசிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

நமக்கு தெரிந்த நம்பகமான பெண் என்றே ஒரே ஜாதியில் திருமணம் நடக்கிறது. இந்த பழககமும் வெகு விரைவில் ஒழியும் என்றே நம்புவோம்.

')) said...

//திருமணத்தின் போது இன்னும் படித்த மக்கள் கூட ஜாதி பார்த்துதானே திருமணம் செய்து கொள்கிறார்கள்//
இருக்கலாம். ஆனால், அது ஒரு பாதுகாப்புக்குக்காக (எந்த பிரச்சினையுமே இல்லாமல் இருக்க) மட்டுமே கூட இருக்கலாம் அல்லவா?