Saturday, June 17, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் - 7

மதங்களால் மனிதன் அடைந்த இன்னல்கள், அடைந்து வரும் இன்னல்கள் எத்தனை எத்தனை?.

பெண்ணடிமைத்தனத்தை ஆரம்பித்து வைத்ததே மதங்கள் தானே இந்த உலகில்? ஹிந்து மதத்தில் இருபது வருடம் முன் வரை விதவைகள் மறுமணம் என்பது ஒரு புரட்சியாகத்தானே கருதப்பட்டது ராஜராம் மோகன் ராய் இல்லையெனில் சதி என்ற பெயரில் பெண்களை படு கொலை செய்யும் பழக்கம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தொடர்திருக்குமோ? கிறிஸ்துவ மதம் சூனியக்காரிகள் எரிப்பு என்ற பெயரில் பெண்களை எரித்தது பெண்களை தொட்டாலே பாவம் செலிபஸி(celibacy) புனிதம் என்று பெண்களை மட்டம் என்றே சொல்வது போன்ற பழக்கம் உடையதுதானே?இஸ்லாமும் இந்த விசயத்தில் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை. பெண்களின் முகங்களை வெளியில் காண்பிக்க கூடாது என்று பெண்களை சிறுமை படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

மதங்கள் பெண்ணடிமைத்தனத்துடன் நின்று விடவில்லை. மாற்று மனிதனை சிறுமைபடுத்தி ஆனந்தப் படுத்துவதிலும் மதமே முதன்மையில் நிற்கிறது. ஹிந்து மதம் இதில் கரை கண்டது என்றால் மிகையாகாது. ஹிந்து மதம் இதில் கரை கண்டது என்றால் மிகையாகாது. 2000 வருடங்கள் மனிதனை சிறுமைபடுத்தி ஆனந்தம் கொண்ட மதம் அல்லவா பெருமைக்குறிய ஹிந்து மதம்.கிறுஸ்துவ மதம் மனிதனை சிறுமைபடுத்துவதில் மிக பின்தங்கி இல்லை. நிறம் கறுப்பாக இருந்தால் கீழானவர்கள் என்று அடிமைபடுத்திய மதம் அல்லவா இது. GOD is white என்று என்னென்ன கொடுமைகள் நடந்தது என்பது வேதனைக்குறிய சரித்திரம் அல்லவா.இன்று ஒரு கோயிலுக்கோ, தேவாலதிற்க்கோ மாற்று மதங்களைச் சார்ந்தவர்கள் செல்ல இயலும் ஒரு மசூதியில் அது போல செல்ல இயலுமா? இஸ்லாமியர்களும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்களே.

மதங்களில் பெயரால் கலவரங்கள் எத்தனை போர்கள் எத்தனை? பாட புத்தகத்தில் படிக்கிறோமே உலகில் நடந்த மிக அதிக காலம் நடந்தப் போர் சிலுவைப் போர்கள் என்று, நாம் இதனை பற்றி சிந்திக்க வேண்டாமா நாம்? பாபர் மசூதி இடிப்பு என்று ஹிந்து மதக்காரர்கள் தொடங்கி வைத்துள்ள ரத்த வேட்கையை பற்றி சிந்திக்க வேண்டாமா நாம்? புனிதப் போர் என்ற பெயரில் நடக்கும் குண்டு வெடிப்புகள் நம் காதில் விழுகிறதா இல்லையா?

தார்மீக பொறுப்பு என்ற ஒரு சொல் உண்டு அதாவது எந்த ஒரு விசயமாக இருந்தாலும் நாம் அதற்கு முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாக அமையும். நீங்கள் கிறிஸ்துவராக, ஹிந்துவாக அல்லது முசஸ்மானாக இருந்து ஒரு கேள்வியை உங்களுக்கும் எழுப்பிக் கொள்ளுங்கள் என் மதத்திற்கு நான் தார்மீக பொறுப்பு எடுத்துக் கொள்கிறேனா இல்லையா என்று?

அப்படி பொறுப்பு உண்டெனில் உங்கள் மதங்களில் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு நீங்களும் துணை நிற்கிறீர்கள் என்றே பொருள். நான் ஹிந்து, கிறிஸ்துவன், முசல்மான் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அந்தந்த மதங்களின் பெயரில் நடக்கும் கலவரங்களில் மடிகிறார்களே பச்சிளம் பாலகர்கள் அவர்களுக்கும் அவர்களே பொறுப்பு.

2 comments:

')) said...

புனித புத்தன் பெயரில் இலங்கைவன்முறைகளை விட்டுவிட்டீர்கள் அதையும் சேர்த்திருக்கலாம்.உங்கள் முந்தையபதிவுகள் வாசிக்கவில்லை,அதில் இருக்குமெனநினைக்கிறேன்.

')) said...

சித்தன் அவர்களுக்கு நன்றி...புனித புத்தன் என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள் பற்றி எனக்கு முழுமையாக தகவல்கள் இல்லை. அதனை தனி பதிவாக இடவும் மக்களுக்கு மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காண்பியுங்கள்.