Wednesday, September 20, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம் - II

மீசை அரும்பிய நாளில் அருகியது
மனதில் தணிக்க இயலாத தாகமொன்று

பகலவன் ஈர்ப்பால் பூமி சுற்றுகிறது
கன்னியர் பால் கொண்ட ஈர்ப்பு
தாகம் தணிப்பதாய் மனதை சுற்றிவிட்டு
தாகத்துக்கு நீருட்டி தாகம் வளர்த்தது

மேகம் காணாத விளைப் பயிர்
கன்னி தலை சாய்க்காத தோள்
இவை இரண்டும் இருந்துதான் பயனென்ன

பயனில்லா தோளும் அடங்கா தாகமும்
கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் சுழன்ற
சமயத்தில் தான் கண்டேன் கன்னியை

மழை வாசத்தில் தோகை விரித்தாடும்
மயிலின் பரவசம் விவரிக்க வார்த்தையேது
மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட
மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது

பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஒட்டப்
பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே

இதயம் ஓய்வில்லாமல் துடித்து அன்றுவரை
பழுதில்லாமல் இயங்கியதும் அவளைக் காணவே

கண்டேன் அவளை கண்டேன் அவளை
களிப்பில் காலம் உறைந்த சமயமது
அப்பொழுது அறியேன் காலம் உறைந்தால்
அதனை சமப்படுத்த விரைந்து ஓடுமென்று
ஓடியது வாழ்க்கை சக்கரத்தில் சுழற்றி

மனிதனின் கண்களுக்கு தெரியும் நீலவானம்
ஒளிச் சிதறல்களால் ஏற்படும் மாயை
அறிந்தும் உணர்ந்து இருக்கிறான் மனிதன்
இருப்பினும் இன்னும் இருக்கிறது ஆகாயம்
இருக்கும் மனிதன் உள்ளவரை மாயையாய்

அவள் உயிரணு பந்தயத்தில் வெல்ல
உந்து சகதி நானல்ல என்றறிந்தேன்
தாகம் தணிக்காத கானல்நீர் என்றுணர்ந்தேன்
இருந்தாலும் இன்னும் இருக்கிறாள் மனதுக்குள்
இருப்பாள் வாழும்வரை ஒருதலை ராகமாய்


முதல்ல ஒரு படைப்பை அனுப்பிச்சேன் அது ரொம்ப நெகடிவா குற்றம் குறைகளை மட்டும் சொல்றா மாதிரி தெரிஞ்சதால இதை எழுதி அனுப்பிச்சேன். நன்றி தமிழ் சங்கம் நான் தமிழில் எழுத வாய்பளித்ததற்கும், நான் அனுப்பியதை திட்டி திரும்ப அனுப்பாமல் இருந்ததற்கும் :-))).

3 comments:

')) said...

//இன்னும் இருக்கிறாள் மனதுக்குள்
இருப்பாள் வாழும்வரை ஒருதலை ராகமாய்//

என்னங்க குமரன் இது ஒங்க எண்ணம் மட்டும்தானா இல்ல அனுபவமா?....ஹிஹிஹி

')) said...

அருமையான கவிதை நல்ல கவித்துவம்

')) said...

மௌல்ஸ் உங்களுக்கு என்னோட பதில் ஹிஹிஹி