தமிழ் மணத்தில எந்தக் குறளை வேணும்னாலும் எப்போ வேண்டுமானாலும் எடுத்துப் போடலாம் ஏனென்றால் கண்டிப்பாக யாராவது ஒருவருக்குத் தேவைப்படும்.
எனோ இதையெல்லாம் இன்னைக்கு போடணும்ன்னு தோணுச்சு.
யாரும் படிக்கப் போறதில்லை படிச்சாலும் இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாதுன்னு விட்டு விடத் தான் போறாங்க இருந்தாலும் குறள் இருக்குன்னு சொல்றது தப்பில்லையே.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
மற்றவர் பின் சென்று அவரைப் பற்றித் தவறாகப் பேசுவது தான் நீங்கள் இந்த உலகில் செய்யும் மிகப் பெரிய பாவச் செயல்.
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
நாம் எதிரியாக கருதுபவருக்குக் கூட தீங்கு செய்யாமல் இருப்பதே ஒருவருக்கு இருக்கும் பண்புகளில் தலையான பண்பாக கருதப் படும்.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
பிறரைக் குற்றம் சொல்பவர்களே மற்றவர் குற்றங்களை பார்க்கும் முன் உங்கள் குற்றங்களை அறிந்து கொண்டால் இந்த உலகின் எந்த கெடுதலும் உங்களை தீண்டாது.
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பலர் வெறுப்படையும் வகையில் வார்த்தைகளைச் சொல்லுபவன் எல்லோராலும் வெறுக்கப் படுவான்.
குறள் விளக்கம் எதோ எனக்கு தெரிஞ்சதை போட்டிருக்கேன் எல்லாம் context சரியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.
தவறாக பொருள் சொல்லி இருந்தால் யாராவது சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
Wednesday, September 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல குரல்(ள்) தான்....
அது எல்லாருக்கும் உறைக்க வேண்டுமே குமரன் ?
அடுத்தவரை தூற்றினால் அவர் ஒன்றும் செய்ய மாட்டார் என்று நினைத்துக்கொண்டு தூற்றுபவரை கண்டிக்காவிட்டால்..
யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தூற்றலாம் என்று அனுமதி அளித்தமாதிரி ஆகாதா ?
தவறு செய்கிறோம் என்று உறைக்கவே இல்லை என்று வைத்துக்கொள்வோம் ( கடைசிவரை) - அதை செய்துகொண்டே இருப்பார்கள்..
சில அட்வாண்டேஜ் வைத்துக்கொண்டு, மற்றவரின் அனுதாபத்தை எளிதில் பெற்றுவிடலாம் என்று தனக்கு தானே கருதிக்கொண்டு, அடுத்தவதை தூற்றுவது எப்படி முறையாகும் ?
இன்று ஒருவரை தூற்றுவார்...நாளை மற்றொருவர்..பிறிதொருநாள் இன்னொருவர்.
கேட்பதற்க்கு ஆளே இருக்காது..
-^-
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
தமக்கு மிகப் பெரிய இன்னலை செய்தவருக்குக் இன்னா செய்யாமல் இருப்பவரே நல்லவர் என்று அறியப் படுவர்.
"ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டி விடு" - இயேசுநாதர்.
நாம மஹாத்மா இல்லை அதனால் இந்தக் குறள் சொல்றதையாவது செய்யலாம். கன்னத்தில் அடித்தவரை திரும்ப கை நீட்டி அடிக்காமல் இருக்கலாம் இல்லை பேசிப் புரிய வைக்கலாம்.
இன்னைக்கு சில பதிவில் வந்திருக்கும் சில பின்னூட்டங்களைப் படிச்சிட்டு நொந்துட்டேன்.
ஆனா நான் இதை எழுதினது அதனால் இல்லை இப்படி எழுதி எழுதி தான் குறள்களை ஞாபகப் படுத்திகிறது என் வழக்கம்.
அவரவருக்கு எது சரின்னு செய்யுதோ செய்யுங்க நான் எழுதுனது குறள் எனக்கு மறந்தறக் கூடாது என்பதற்காக.
நல்ல குரல்!
அழகிய விளக்கம்!
நன்றி!
மன்னார் உங்களை விசாரித்ததாகச் சொல்லச் சொன்னான்! :)
நன்றி SK அவர்களே நானும் மன்னாரைக் கேட்டதா சொல்லுங்க அவருடைய குறள் அறிவு அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது எதோ எனக்கு தெரிஞ்சது ஒண்ணு ரெண்டு அதையும் எப்போ எப்போ எல்லாம் எங்கேயாவது மனசுக்கு பிடிக்காததைப் பாக்கறேனோ அப்போ அப்போ திருக்குறளைப் பார்த்து ஞாபகப் படுத்திக்க வேண்டியதா இருக்கு.
நல்ல குறள்(ரல்) குமரன்..
பகிர்ந்தமைக்கு நன்றி!
நன்றீங்க கப்பி பய அவர்களே உங்க பேரை சொல்லி இப்படி எழுத வித்தியாசமா இருக்கு :-)))
Post a Comment