காஸ்மாலஜி என சொல்லப் படும் பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த அறிவியல் துறையில் சில ஆண்டுகளாக Big bang என்று சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இன்று காஸ்மாலஜியில் நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் எதோ ஒரு வகையில் அடிப்படையாக் இருப்பதும் Big Bang தான்.
ஜார்ஜஸ் லெம்யாட்ரி ( Georges Lemaître ) என்ற ரோமானிய கிறிஸ்துவப் பாதிரியார் தான் முதன் முதலில் 1927ம் ஆண்டு Big Bang மூலமாக இந்தப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று சொன்னவர். பின் ஹீயூபில் இது சாத்தியமே என்பதை பின் நிரூபித்தார். Big Bang தியரி என்ன சொல்கிறது என்பதை எப்படி இதனை நிருபணம் செய்தார் என்ற நோக்கில் பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும். இதற்கு நாம் ஒளியின் சில தன்மைகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது ஒளியின் அலைகளாக பயணம் செய்கிறது இதில் wavelength என்பது ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் உள்ள தூரம்( தூரம் என்றதும் எதோ கிலோமீட்டர் கணக்கில் நினைத்து விடாதீர்கள்(1/100000000000000000 மீட்டர்). இதில் blue shift, red shift என்று சொல்லுவார்கள் அதாவது ஒரு ஒளி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் blue shift ஆகும் உங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அது red shift ஆகும். இன்னும் எளிமை படுத்தி சொல்ல வேண்டுமெனில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வெளிச்சமே அதிக தொலைவுக்கு செல்லும் என்று கொள்ளுங்கள். ரயில்வே லெவல் கிராஸிங், போக்குவரத்து லைட் எல்லாமே சிகப்பு நிறத்தில் அமைந்துள்ளது இதனால் தான்.
ஹீபில் என்ன கண்டறிந்தார் என்றால் பூமியில் இருந்து பல ஒளி நூற்றாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியானது மெல்ல red shift ஆகிக் கொண்டிருக்கிறது என்று. இதன் மூலம் கண்டறிவது என்ன என்றால் மெல்ல அந்த நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் மெல்ல விரிவடைந்து கொண்டிருக்கிறது. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் இன்று இருந்ததை விட நேற்று அருகில் இருந்தது அதற்கு முன் தினம் இன்னும் அருகில் இருந்தது என்று வைத்துக் கொண்டால் நாம் பின்னோக்கிச் செல்ல செல்ல இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அருகருகே இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதாவது பிரபஞ்சம் என்பது ஒரு சிறிய புள்ளியான இடத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும்.
அந்த புள்ளி வடிவான நேரத்தில் இருந்து மிக விரைவாக அனைத்தும் வெடித்து சிதறியது போல bang என்று விரிவடைந்திருக்க வேண்டும் என்பது தான் big bang தியரி. ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விளக்குவது சுலபம். ஆனால் இப்படி நடக்கும் சமயம் அந்த சமயத்தில் என்னென்ன எப்படி எப்படி இருந்திருக்கும் என்று விவரிப்பது மிகக் கடினம். அதாவது அவன் அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னான் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால் அந்த சம்யத்தில் அவன் மன நிலை எப்படி இருந்தது அவன் இதயத் துடிப்பு எவ்வளவு அதை சொல்லும் சமயம் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள். அவளின் இதயத் துடிப்பு எவ்வளவாக் இருந்திருக்கும் உடனே என்ன நினைத்திருப்பாள். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்று சில சமயங்களில் ஒதுக்கி விடலாம். ஐ லவ் யூ என்று சொன்ன உடன் அவனுக்கு கன்னத்தில் பரிசாக கிடைத்தது முத்தமா? அடியா என்பதுதான் முக்கியமாக படும்.
ஆனால் காஸ்மாலஜியில் இதை எல்லாம் ஒதுக்கி விட முடியாது ஏனென்றால் இவை அனைத்துமே காஸ்மாலஜியில் மிக அவசியமாகிறது. இப்படி எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் இதனை விளக்க முயற்சி செய்யும் சமயம் தான் அவர்கள் singularityல் சிக்கிக் கொண்டார்கள்.
நம் பூமி சூரியனை ஏன் சுற்றுகிறது? சூரியன் பூமியை ஈர்க்கிறது அதே சமயம் சந்திரன் பூமியை சுற்றிவதற்கு காரணமும் ஈர்ப்பு விசையால்தான். இந்த ஈர்ப்பு விசை தூரத்தால் பாதிக்கப் படும். சந்திரன் சூரியனைச் சுற்றாமல் பூமியை சுற்றுவதற்கு காரணம் பூமிக்கு அருகில் இருப்பதால் தான். இப்படி எல்லாமே ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றியது என்று சொன்னால் அந்த சமயத்தில் ஈர்ப்பு விசை என்பது எப்படி இருந்திருக்கும். அந்த சமயத்தில் புள்ளியாக இருந்த பிரபஞ்சம் பில்லியன் பில்லியன் டிகிரிகளாக இருந்திருக்கும். அதே சமயம் density என்பது மிக மிக அதிகமாக இருந்திருக்கும். pressue மிக மிக அதிகமாக இருந்திருக்கும். இந்த ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு physics equationனும் விளக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் singularity.
All physics equations and laws we have will be broken down during singularity.
Big bang theoryயை முதன் முதலில் ஒரு ரோமானிய பாதிரியார் வெளியிட்டார் என்பது மிக ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. ஏனெனில் கலீலியோ காப்பர்நிக்கசின் தத்துவங்களை சப்போர்ட் செய்தார் என்று அவரை கைது செய்த வாடிகன் இது போன்ற ஒரு அறிவியல் விளக்கத்தை உலகம் ஏழு நாட்களில் தோற்றுவிக்கப் பட்டது என்ற பைபிளை அப்படியே நம்பிக் கொண்டிருந்த சர்ச் இதனை அனுமதித்தது ஆச்சர்யமான ஒரு விஷயமே. ஆனால் சர்ச் இதனை அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணம் big bang என்ற ஒன்று நடந்தது உண்மை ஆனால் அந்த big bang உருவாகுவதற்கு காரணம் இறைவனே என்று சொல்லலாம் என்றுதான். ஆனால் அதனை அனுமதிக்கக் கூடாது big bang என்ற ஒன்று அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞானிகள் அதனை physics and mathematical equations மூலமாக தமதாக்கிக் கொண்டார்கள். இருந்தாலும் இந்நாள் வரை singularity என்பதைப் பற்றி எந்த சயன்டிஸ்டும் விளக்க முடியாததால் வாடிகன் அந்த பாயிண்டை Genesis என்று இன்றும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது என்ன என்றால் நம்முடைய மதங்கள் நமக்கு இன்று வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் சில முரண்பாடுகள் உள்ளன என்பதுதான். ஹிந்து மதம் சொல்வது போல பிரம்மன் என்ற ஒருவர் இந்த உலகை படைக்கவில்லை. கிறிஸ்துவ மதம் சொல்வது போல ஏழு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப் படவில்லை. இஸ்லாம் சொல்வது போல ஆறு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப்படவில்லை. இன்று நாம் இருப்பது போல ஒரு பால்வெளி உருவாவதற்கு பல பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும். அதை எல்லாம் தாண்டி பூமியில் முதல் உயிர் உருவாவதற்கு இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்.
இந்த பூமி உருவானது ஒரு cosmic accident. இந்த பூமியில் நாம் உருவானது இன்னொரு cosmic accident. இதை ஏற்றுக் கொள்ள மனித ஈகோவுக்கு கஷ்டமாகக் கூட இருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் உணமை என்பதை மறுப்பதற்கில்லை என்று என்னுடைய pesimisstic mind சொல்கிறது.
optimistic mind இந்த cosmic accident நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன 1/1000000000000000000000000000000 அப்படி இருந்தும் இந்த cosmic accidents நடந்திருக்கிறதே அப்படியானால் இதனை விளக்க முடியுமா உன்னால் may be எங்கோ ஒரு டிவைன் Intervention நடந்ததால் தான் இது சாத்தியமாகி இருக்கும் என்றே நம்பு என்று கூறுகிறது.
இதில் எந்த மனம் சொல்வதை நம்புவது என்பது இன்னும் புரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மதத்தின் பெயரால் இன்று இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் சண்டைகள் அனைத்துமே மிகப் பெரிய முட்டாள்த்தனம் என்றுதான் தோன்றுகிறது. எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. எந்த மதத்தின் கொள்கைகளுமே நூறு சதம் சரியானது அல்ல என்பதை நாம் எப்படி உருவானோம் என்பதை எல்லா மதங்களும் விளக்கும் விதத்தில் இருந்தே கண்டு கொள்ள முடிகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் ஒரு பாயிண்டுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
என் மதம் தான் பெரியது, மதம் மாற்றம் சரி தவறு என்று சொல்வது, புனிதப் போர், கோயில் இடிப்பு எல்லாமே அர்த்தமில்லாதது என்றுதான் தோன்றுகிறது.
என் மதம் மூலம் தான் சரியான மார்க்கத்தில் செல்ல முடியும் என்பதெல்லாம் நகைப்புக்குறியதாகத் தான் தோன்றுகிறது.
மேலும் எனக்குத் தெரிந்த ஆன்மீகமும் அறிவியலும் தொடரும்.
Wednesday, September 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
குமரண்,
நீங்கள் குறிப்பிட விரும்புவது
"ஒலி" அலைகள் அல்ல "ஓளி" அலைகள் என்று நம்பிகிறேன்.
Big bang = பெருவெடிப்பு
பிரபஞ்சம் எங்கும் விரவியிருக்கும்
"பின்புல நுண்ணலை"[background microwave ] பெருவெடிப்பின் முக்கிய அடையாளமாகக் கொள்கின்றனர்.
Also considering before ..singularity everything breaks down ..its fair to assume that whatever happened/existed before bigbang would have had no influence on things happening after bigbang?
நன்றி நிர்மல். கார்ட்டூன் நன்றாக இருக்கிறது.
நன்றி கார்திக்வேலு சுட்டிக் காட்டியதற்கு. சில்லித்தனமான மிஸ்டேக். நன்றி மாற்றிக் விடுகிறேன்.
naan urupadiyana vishayam nu sonna..ulkuththaa nu ketka mateengalee ;)
Really boss!
நன்றி வா. மணிகண்டன்
"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."
அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக
அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.
அ மு க பாசறை
அல்சுர், பெங்களூர்
"அனானிகள் சார்பில் கோவியாருக்கு இங்கும் ஒரு கண்டனம்...."
அவர் பதிவில் எங்களுக்கு இடம் தரும்வரை, அவர் பின்னுட்ட்ங்களிடும் இடங்களில் நாங்க மேல சொன்ன கண்டன வாக்கியங்களை இடுவதாக
அ மு க பாசறை தீர்மானம்....பதிவர்கள் தாங்களாகவே தங்கள் பதிவுகளில் மேலெ கூறிய வாக்கியங்களை சேர்த்திட அ மு க அறிவுருத்துகிறது.
அ மு க பாசறை
அல்சுர், பெங்களூர்
குமரன்...!
பெருவெடிப்பு பற்றி செய்தி சமீபத்தில் தான் படித்தேன். இந்த அளவுக்கு விளக்கமாக இல்லை. இந்த கட்டுரை மிக விளக்கமாக உள்ளது.
பிரபஞ்சம் சுருங்கி, விரிவடைதல் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது என்று விவேகாநந்தரின் ஞானயோகத்திலும் சொல்லப்படுகிறது.
//
அவன் அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னான் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால் அந்த சம்யத்தில் அவன் மன நிலை எப்படி இருந்தது அவன் இதயத் துடிப்பு எவ்வளவு அதை சொல்லும் சமயம் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள்
//
மாறுபட்டு விளக்கியிருக்கிறீர்கள்...!
:)
நன்றீங்க கோவி. அனானிகள் சிலர் உங்களுக்கு பல இடங்களில் செய்திகளை விட்டுக் கொண்டிருக்காங்க போல?
குமரன் நல்ல பதிவு.
இந்தப் பெருவெடிப்பிற்கும் சைவ சித்தாந்தம் உலகத் தோற்றமாகக் குறிப்பிடும் நாத விந்துத் தத்துவத்திற்கும் எதுவும் தொடர்பு இருக்குமா என்று தெரியவில்லை. ரொம்பவும் எளிமையாகச் சொல்லப் போனால் ஓசையில்லாமையும் ஓசையும் இணைந்தது எழுந்தது ஓங்காரம். அதிலிருந்து கூறுகள் பிரிந்து பிரிந்து பிரிந்து உலகம் உண்டானது.
நன்றீங்க ராகவன். எனக்கு நாத விந்துத் தத்துவம் பற்றித் தெரியாது. நீங்க சொன்னதில் இருந்து ஓம் என்ற சொல்லில் இருந்துதான் எல்லாம் பிறந்தது அப்படிங்கறதுதான் நாத விந்துத் தத்துவம் சொல்றதுன்னு புரியுது. இதற்கும் Big bangற்கும் என்ன ஒற்றுமை என்றெல்லாம் தெரியல.
Post a Comment