உலகின் எல்லா மூலைகளிலும் பொதுவுடமை
மலிவாய் சுலபமாய் எடுக்கப் படுகிறது
மனிதவுயிர் சகஜமுமாகி விட்டது இந்நிகழ்வுகள்
இலங்கை பாலஸ்தீனம் லெபனான் மும்பை
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
இறை தேடினான் மனிதன் அன்று
தெளிந்துணர்ந்த சிலரால் தானும் உணர்ந்தாய்
தனியார் மயமாக்கி இறையின் பெயரால்
இரை ஆகிறான் மனிதன் இன்று
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
இறக்கின்றனர் பாலகர் பசியால் விவசாயி
வறுமையால் ஒருவேளை உணவுண்டு வாழ்கிறது
பெரும்பான்மை கோடி குவிக்கிறார்கள் அரிதாரிகள்
அவர்களுக்கே உயிர் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள்
இன்னும் இருக்கிறது ஆகாயம்.
துவேஷங்களைப் பரப்பிகிறார் மனிதர்கள் பலர்
துவேஷங்களால் இறக்கிறார் பச்சிளம் பாலகர்
கண்டித்தால் அன்பைப் பாராட்டினால்(கோ.வி.) கோபம்
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்
இன்னுமா இருக்கிறது ஆகாயம்.
ஏ ஆகாயமே
மனிதனின் செயல்களால் கண்ணீர்தான் வடிப்பாயா?
விண்கல்லால் டைனோசர் இனமழித்தது போல்
என்றழிக்கப் போகிறாய் கேடுகெட்ட மனிதரை
தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு போட்டி நடத்தி தலைப்பு கொடுப்பவர்களுக்கு நன்றி.
இந்தப் பதிவின் தாக்கத்தில் எழுதியது
Tuesday, September 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//இறை தேடினான் மனிதன் அன்று
தெளிந்துணர்ந்த சிலரால் தானும் உணர்ந்தாய்
தனியார் மயமாக்கி இறையின் பெயரால்
இரை ஆகிறான் மனிதன் இன்று//
குமரன் ...!
'தெளிந்து உணர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் சிலரால்' என்று
இருந்தால் பொருள்பட இருக்கும் !
:)
//கண்டித்தால் அன்பைப் பாராட்டினால்(கோ.வி.) கோபம்//
இந்த கோ.வி நானில்லையே ?
:))
ஐயா அது நீங்கதான் உங்க பதிவோட தாக்கத்தில தான் எழுதி இருக்கேன்னு போட்டிருக்கேன் பாருங்க.
ஆம் குமரன், இன்னும் இருக்கிறது ஆகாயம்.....இன்னும் ஒங்க லிஸ்ட்டில் சேர்க்கலாம்.
உண்மைதான் மௌல்ஸ் இன்னும் நிறைய சேர்க்கலாம். ஆனா இதுவே ரொம்ப நெகடிவா இருக்குங்க மாதிரி நினைத்தேன்.
குமரன்,
சுட்டையை பார்க்கவில்லை. சுட்டிக் காட்டியதற்கு நன்றி...!
உங்களுக்கு
ஒரு ஷொட்டு !
(ஷொட்டு - முதுகில் செல்லமாக தட்டுதல் - பொருள் எஸ்கே)
:)
//இன்னுமா இருக்கிறது ஆகாயம்.//
இந்த வரியில்தான் கவிதையின் முழுவடிவம் தெரிகிறது. இடம் சேர்ந்த மலரைப்போல. போட்டிக்கான வாழ்த்துக்கள்
Post a Comment