Sunday, November 05, 2006

மதம், வாழ்க்கை நெறி புடலங்காய்

பலர் மதம் என்பது நாகரீகங்களைத் தோற்றுவித்தது. மதம் என்ற அமைப்பு புனிதமானது சிலரால் மட்டுமே மதம் என்ற அமைப்புக்கு கெட்ட பெயர் வருகிறது என்பது போலவும் கருதுகிறார்கள். மறுபடியும் சரித்திரத்தை புரட்டிப் பார்க்கிறேன்.

ஹிந்து மதம் என்பது 3500 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக தெரிகிறது. ஜுடாயிஸம்(வஜ்ராவால் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தப்பட்டிருக்கிறது) 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது.

ஹரப்பா நாகரீகம் 9000-10000 ஆண்டுகள் முன் கூட இருந்திருக்கிறது என்பதை இன்று கண்டறிந்திருக்கிறோம்.

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஹரப்பா மொகஞ்தாரோ ஆகியவற்றின் புகைப்படங்களைக் கீழே உள்ள சுட்டியில் பாருங்கள்.

http://www.mohenjodaro.net/index.html

கிண்றுகள், நெல் சேமிக்கும் கிடங்கு, குளியலறை, சுகாதார மையம் எல்லாம் பார்க்கலாம் ஆனால் இதில் எங்கேனும் மதம் சம்பந்தமான கோயில்லகளோ மசூதிகளோ இல்லை வேறு அடையாளங்களோ தென் படுகிறதா? நாகரீகத்தின் தோற்றத்திற்கும் மதங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை இதை விட தெளிவாக நாம் அறிய முடியுமா?

இந்த உலகில் நடந்த மிகக் கொடூரமான இனப் படு கொலைகளுக்கு மதமே காரணியாக இருந்திருக்கிறது. இனப் படு கொலை என்றதும் holocaust மட்டுமே நமக்கெல்லாம் ஞாபகம் வரும். யூதர்கள் பல வகையில் நமக்கு அதனை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் அது மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மதம் நுழைந்தவுடன் என்ன நடந்தது?

முதலில் ஆஸ்திரேலியா இங்கு நடந்த இனப் படுகொலை போல எங்குமே நடந்ததில்லை. பழங்குடியினரைக் கொன்றால் ஒரு கொலைக்கு ஒரு பவுண்ட் என்று நடத்த படுகொலைகள் நமக்கு ஞாபகம் இருக்காது. complete wipe out ஆனது ஒரு இனம் ஆஸ்திரேலியாவில். What is history but a fable agreed upon? இது எவ்வளவு உணமை என்று தான் தோன்றுகிறது.

அமெரிக்கா சிவப்பிந்தியர்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் இனப் படுகொலைகள் அதிகம் வெளியே வராது இன்று,

ஆப்பிரிக்காவின் நிற வெறி கொடுமை(apartheid) பற்றி சொல்வவே தேவையில்லை.

அப்புறமாக யூதர்கள். யூதர்கள் ஒரு சாராரை மதத்தால் அடிமைப் படுத்தினர். மோஸஸ் காலத்தில் இருந்து இது கிறிஸ்து என்ற யூதர் வரும் வரை தொடர்ந்தது. பின்னர் பல யூதர்களே கிறிஸ்துவர்களானார்கள். அதற்கு பிறகு பின்னர் கிறிஸ்துவர்கள் இப்பொழுது குறைவான அளவில் இருந்த யூதர்களைக் கொன்று குவிக்கின்றனர். எதற்காக கொல்கிறார்கள் என்றால் அவர்களும் யூதர்கள் என்பதால். இவர்கள் மூதாதையினர் பலர் யூதர் என்பதே தெரியாமல்.

இந்தியாவில் இந்து - முஸ்லீம் பிரச்சனையும் இதே போலத்தான். எந்த மன்னன் வந்தாலும் காலை முத்தமிட்டு தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் கூட்டம் முஸ்லீம் மன்னன் காலில் விழ அவர்கள் தலை துண்டிக்கப்பட்டது(இது ஒரு சாராரைக் குறிப்பது போல இருந்தாலும் இவை சரித்திர உண்மைகள்). அந்தக் காலத்தில் இருந்து தணியாத வெறி கொண்ட கூட்டம் முஸ்லீம்கள் மேல் வெறி கொண்டு அழைகிறது.

இன்று முஸ்லீம்களாய் இருப்பவர் பலர் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்திருக்கலாம். அது கூட புரியாத வெறி கொண்ட கூட்டம் இன்று ஒருவர் மேல் ஒருவர் வெறி கொண்டு சுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மதம் என்பது இதற்கு தான் பயன் படுகிறது.

மிருகத்தில் இருந்து மனிதனானான். இன்று மதம் கொண்டு தன்னுடைய irrational உணர்வுகளால் மிருகமாகிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கை நெறி வாழ்க்கை நெறி என்று சொல்பவர்கள் அனைவரிடமும் கேட்கிறேன். விதவைகள் கொலை செய்யும் சதி பழக்கம் வாழ்க்கை நெறியா? சின்ன பெண்களை பால்ய விவாகம் என்ற பெயரில் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் கணவர்கள் இறந்தவுடன் வாழ்க்கை முழுவதும் கொடுமைப் படுத்துவதுதான் வாழ்க்கை நெறியா? ஜாதி மூலம் அடிமைப் படுத்துவது வாழ்க்கை நெறியா?

வாழ்க்கை நெறியாம் வாழ்க்கை நெறி, புடலங்காய் வாழ்க்கை நெறி.

இவை தான் இந்து மதத்தின் வாழ்க்கை நெறிகளாக கடைபிடிக்கப் பட்டது, மிகச் சிறப்பான வாழ்க்கை நெறிகள் இல்லையா?

இன்று நரேந்திர மோடி போன்ற கொலையாளிகள் தான் இது போன்ற வாழ்க்கை நெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்னொரு பக்கம் இன்னும் அழகான வாழ்க்கை நெறி சொல்லப் படுகிறது. சானியா மிஸ்ராவின் fore handஐயும் back handஐயும் பார்க்காமல் அவர் தொடையை பார்த்து ரசித்த சிலர் அவர் தொடை தெரிகிறது என்று கத்தகிறார்கள். இவர்கள் மனது விகாரம் பிடித்திருப்பதால் அந்த பெண்மணியின் ஆடை அணியும் விதம் மாறவில்லை? உலகம் எங்கிலும் எல்லோரும் இதே போல ஆடை தான் அணிகிறார்கள். இவர் மட்டுமா அணிந்தார்?

யார் யாருடைய மனதின் விகாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். விகாரங்களின் உற்பத்தி நிலையமாக செயல் படுவதே மதம் என்னும் மாயை சூழ்ந்திருக்கும் மனங்கள்தான்.

mystic என்பதை விளக்குவதிலும் மதங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. எத்தனை காலத்திற்குதான் ஆறு நாள், ஏழு நாள், முட்டை, இல்லை யாருக்கும் புரியாத வகையில் ஒரு touch of mystery உடன் கூடிய பழம் கதைகளையே கேட்டுக் கொண்டிருப்பது? யாரேனும் புது மதம் ஆரம்பித்து Black Holes, Singularity என்று இன்று அவர்களுக்கு தெரிந்ததை எழுதி வைத்தால் பரவாயில்லை. அதுவும் கொஞ்ச நாளில் விளக்க வர outdate ஆகி விடும் என்பது வேறு விஷயம்.

அல் கொய்தா அமைப்பு அமெரிக்காவை எதிர்ப்பதாலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு இருக்கும் நட்பால், அல் கொய்தாவை உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் ஆதரித்தால் எப்படி முட்டாள் தனமாக இருக்குமோ அதே போலத் தான் மதமும்.

சானியா மிஸ்ரா விஷயத்தில் மன விகாரங்களை வெளிப்படுத்துகிறவர்கள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். நரேந்திர மோடி போன்ற பயங்கரவாதிகள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். படித்த பெண்களை சூனியக்காரிகள் என்று எரிக்க மதம் உதவுகிறது. எத்தனை காலம் தான் ஒரு பயங்கரவாத அமைப்பை நாம் ஆதரித்துக் கொண்டிருக்கப் போகிறோம்.

உங்கள் மனது சஞ்சலப் படும் பொழுது தேவை என்றால் நல்ல மியூசிக் கேளுங்கள். மதங்களை ஆதரித்து முட்டாள்தனம் செய்யாதீர்கள்.

மதம் நாகரீகத்தை வளர்க்க உதவுகிறது என்று யாரோ சொன்னார்கள். எனக்கு என்னவோ அது காட்டு மிராண்டித் தனத்தை வெளிக்காட்டவே உதவுவது போலத் தோன்றுகிறது.

இன்று மதத்தை பின்பற்ற விரும்புவர்கள் அனைவரும் அவர்கள் அமைப்பு தவறு செய்யும் பொழுது அதற்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு காட்டி அதனை மாற்ற முயலவில்லை என்றால் மதத்தின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம்.

14 comments:

')) said...

I salute you.

இதே கருத்தே எனக்கும். நானும் ஒன்று எழுத முயலவேண்டும்.

')) said...

நல்ல கருத்துக்கள்.

விழிப்பு

')) said...

//இன்று மதத்தை பின்பற்ற விரும்புவர்கள் அனைவரும் அவர்கள் அமைப்பு தவறு செய்யும் பொழுது அதற்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு காட்டி அதனை மாற்ற முயலவில்லை என்றால் மதத்தின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம்.//

வெரி குட் பஞ்ச் !

')) said...

நெத்தியடி!
மதம் என்ற கூட்டம் சேர்க்காமல் பக்தி இருக்கமுடியாதா?

')) said...

மிக நல்ல கருத்துகள். இறை நம்பிக்கையை விட மதம் என்று பெரிதாகப் படுகிறதோ...அன்றே பிரச்சனைகள் எழுந்து நடுநிலமை சீர்குலைந்து போகும். என்னைப் பொருத்த வரையும் இன்றைக்கு உலகில் உள்ள எந்த ஒரு மதமும் நடுநிலை மதமல்ல. ஆனால் எல்லாரும் அப்படித்தான் சொல்லிக்கொள்வார்கள். அத்தோடு அடுத்தவன் அப்படியில்லை என்றும் சொல்லிக்கொள்வார்கள்.

')) said...

//
ஜியோனிஸம் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது.
//

zionism என்பது மதம் அல்ல. Judaism என்பது மதம். Zionism என்பது ஒரு அரசியல் கொள்கை. 1800ல் தான் அதை முதலில் கடை பிடித்தனர். அதை ஆரம்பித்து வைத்தவர் Theodre Herzl.


//
மதம் சம்பந்தமான கோயில்லகளோ மசூதிகளோ இல்லை வேறு அடையாளங்களோ தென் படுகிறதா? நாகரீகத்தின் தோற்றத்திற்கும் மதங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை இதை விட தெளிவாக நாம் அறிய முடியுமா?
//

Is it a fable that you agree upon ? என்று இதற்கு என்னால் கேள்வி கேட்க முடியும். கண்டுபிடிக்கப் பட்ட அல்லது தோண்டி எடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கோவில்கள் இல்லை என்று எதை வைத்துச் சொல்ல முடிகிறது. அதில் ஹோம குண்டங்கள் இருந்ததாகப் படித்தேன். அப்போதிருந்த வாழ்க்கை முறை இப்போதும் உள்ளது என்றும் படித்தேன்.

http://www.geocities.com/ifihhome/articles/bbl002.html


//
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மதம் நுழைந்தவுடன் என்ன நடந்தது?
//

அதை ஏன் மதம் என்று பொதுமைப் படுத்துகிறீர்கள். கிருத்துவம் என்று சொல்லுங்கள். ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்னர் அங்கே மாயோ போன்ற வளர்ந்த நாகரீகங்கள் இருந்துள்ளன. அதில் அவர்கள் மதமும் இருந்துள்ளது.

அங்கே இன்னும் பழங்குடி மதங்கள் கடைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். மத்திய கிழக்கு மதங்கள் எங்கே நுளைகிறதோ அங்கே கலகம் தான் முதலில் ஏற்படும்.

Intolerance breeds contempt. And leads to conflict.

எந்த மதத்தில் intolerance இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Christianity survives because it has decimated civilizations of three continents. And the pope has plans to do the same to hinduism in India.


//
இவை தான் இந்து மதத்தின் வாழ்க்கை நெறிகளாக கடைபிடிக்கப் பட்டது, மிகச் சிறப்பான வாழ்க்கை நெறிகள் இல்லையா?
//

பால்ய விவாஹத்தை மஹா பாரதக் கதையிலோ, ராமாயணத்திலோ கேள்விப் பட்டிருக்கிறீர்களா. "சதி" நடப்பதை இந்த புராணத்தில் ஏன் பார்க்க முடிவதில்லை ? இந்து மதத்தில் வாழ்க்கை நெறிகளை இவைதான் கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சொல்லும் கதைகள்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் போது ஆரம்பிக்கப்பட்ட பழக்கங்கள் இவை. அதன் எச்சங்கள் சில தொடர்கின்றன. பால்ய விவாஹம் செய்வதை யூத மதமும் கடை பிடித்துவந்துள்ளது. இஸ்லாமைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அதில் 9 வயது சிறுமியை முகம்மது மணப்பதை நியாயப் படுத்த நிறையபேர் இருக்கிறார்கள். இன்றும் பாலஸ்தீனிய பெண்களைப் படிக்கவிடாமல் 10-13 வயதிற்குள் மணமுடிக்கின்றனர்.

(உங்கள் கர்பப்பைதான் உங்கள் ஆயுதம் என்று அராபத் சொல்வதை வீடியோவில் இன்றும் இவர்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். )

//
இன்று நரேந்திர மோடி போன்ற கொலையாளிகள் தான் இது போன்ற வாழ்க்கை நெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
//

அவர் போன்ற கொலைகாரர்கள் அவர் ஆழும் மானிலத்தை இந்தியாவிலேயே முதன்மை மானிலமாகவும் ஒரு டஜன் சிறிய ஆசிய மற்றிம் ஆப்பிரிக்க நாடுகளின் பட்ஜெட்டைவிட அதிகம் பட்ஜெட் கொண்ட இந்திய யூனியன் மானிலமாகவும் மாற்றிவிட்டார். அதே மதச்சார்பின்மை பாராட்டி வோட்டு வாங்கிய பீஹார் படு பாதாளத்தில்.30 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆண்டு வரும் மே. வ கேட்கவே வேண்டாம். இன்னும் கண்டுபிடிக்கப் படாத வியாதிகள் எத்தனையோ கல்கத்தாவில்...!


//
இன்று மதத்தை பின்பற்ற விரும்புவர்கள் அனைவரும் அவர்கள் அமைப்பு தவறு செய்யும் பொழுது அதற்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு காட்டி அதனை மாற்ற முயலவில்லை என்றால் மதத்தின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம்.
//

இது இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் பொருந்தும். கம்யூனிச அடிவருடிகளுக்கும் பொருந்தும்.

போல்போர்ட், ஸ்டாலின், மவோ பற்றி புகழ்ந்தே பேசுகின்றனர் கம்யூனிஸ்டுகள். ஏன் ?

அதோ போல், ஒசாமா, சதாம் பற்றி புகழ்ந்தே பேசுகின்றனர் இஸ்லாமியர். ஏன் ?

Comparing to this, ஒரு நரேந்திர மோடியை மேல் "ஜாதி ஆதிக்கவர்க்க" இந்தியப் பத்திரிக்கைகள் திட்டாத திட்டா ?

')) said...

///
zionism என்பது மதம் அல்ல. Judaism என்பது மதம். Zionism என்பது ஒரு அரசியல் கொள்கை. 1800ல் தான் அதை முதலில் கடை பிடித்தனர். அதை ஆரம்பித்து வைத்தவர் Theodre Herzl.
///
வஜ்ரா தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி திருத்தி கொள்ளப்பட்டது.

')) said...

செந்தில்.
அருமையான யோசிக்க வைக்கும் பதிவு. அதே நேரம் முழுதும் என்னால் உடன்பட முடியவில்லை.

மதங்களால் தவறுகள் நிகழ்த்துள்ளது உண்மை. மிகமிக வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது இது.
அதற்கு மதங்களை விட அதனை வேறியாக மற்ற மக்களிடம் தூண்டி விடும் கூட்டமே முதற்காரனம்.
மதங்களால் நன்மைகளும் பல பரவலாக அமைதியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மதநல்லினக்கமே இதற்கு இப்பொதைய தீர்வு.

')) said...

செந்தில் குமரன். இந்தப் பதிவை படிக்கத் தொடங்கியதிலிருந்து முடிக்கும் வரை என் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. எழுதியிருப்பதென்னவோ உள்ளதைத் தான் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதும் போதும் சீரியஸாகத் தான் எழுதியிருப்பீர்கள். ஆனால் எனக்கென்னவோ படிக்கப் படிக்க புன்னகை கூடிக் கொண்டே போனது. :-)

')) said...

//கிண்றுகள், நெல் சேமிக்கும் கிடங்கு, குளியலறை, சுகாதார மையம் எல்லாம் பார்க்கலாம் ஆனால் இதில் எங்கேனும் மதம் சம்பந்தமான கோயில்லகளோ மசூதிகளோ இல்லை வேறு அடையாளங்களோ தென் படுகிறதா? நாகரீகத்தின் தோற்றத்திற்கும் மதங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை இதை விட தெளிவாக நாம் அறிய முடியுமா?
//

சக்கரம் கண்டுபிடித்ததே மக்கள் இயக்கத்திற்கு வழி வகுத்தது என்கிறார்கள். ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு செல்ல மக்களுக்கு சக்கரத்தின் கண்டுபிடிப்பு மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் ஆதிகாலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்படும் முன் கற்கால மனிதன் சக்கரம் இல்லாததால் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தான். இயக்கத்திற்கு வழி வகுத்த சக்கரம் இல்லை என்பதால் அவனால் இயங்கியிருக்க முடியாது என்பதற்கு இதை விட தெளிவாக சொல்ல வேறு என்ன வேண்டும்?

இப்படி யாராவது சொல்லிப் படித்தால் உங்களின் முதல் எதிர்வினை என்னவாக இருக்கும்? சிரிப்பு. புன்சிரிப்பு. சரியா? அது தான் முதலில் உங்களின் தெளிவான அறிதலைப் பற்றிய சொற்றொடர்களைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது. ஆக உங்களின் முன் முடிவுகளின் படி மதம் என்றால் கோயில்களும் மசூதிகளும் இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால் அங்கே மதமே இல்லை; இருந்ததில்லை. அப்படித் தானே. ஐயா. நீங்கள எதனைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதை மட்டுமே உங்கள் கண்கள் பார்க்கின்றன என்று எண்ணுகிறேன். இதே சிந்துசமவெளியில் மத அடையாளங்கள் எத்தனை எத்தனை கிடைத்திருக்கின்றன என்பதனை கொஞ்சம் உங்கள் முன் முடிவுகளிலிருந்து வெளிப்பட்டு வந்து பாருங்கள். மத அடையாளங்கள் உங்களுக்குத் தெரியும்.

இல்லை அப்படித்தான் பார்ப்பேன் என்றால் இன்னொரு எடுத்துக்காட்டும் உங்களின் கண்ணோட்டத்திற்குத் தருகிறேன். என் 3 வயது மகள் பிறக்கும் போதே மின்னஞ்சலும் இணையமும் மிக வலுவடைந்துவிட்டன. அவள் வளர்ந்த பின் மின்னஞ்சலும் இணையமுமே இப்போது மக்கள் தொடர்பு சாதனங்களாக இருக்கின்றன; அவை இல்லாத காலம் இருந்ததாக என் தந்தை சொல்கிறார்; அப்படியென்றால் அவர் குழந்தையாக இருக்கும் போது மக்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பே கொள்ளவில்லை என்பது மிகத் தெளிவாக புரிகிறது; என்று சொன்னால் எவ்வளவு சி.பி.தனமாக இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் வாதம்.

')) said...

அதற்கப்புறம் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்த நகைச்சுவையும் இல்லை. பதிவு முழுக்க முழுக்க எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு எதிர்மறையாகச் சிந்திக்க எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும் என்றும் வியப்பாக இருந்தது. இதே போல் நேர்மறையாக மதத்தை செந்தில் குமரன் பார்த்தால் மிகச் சிறந்த ஆன்மிகவாதி ஆகிவிடுவார் என்றும் தோன்றியது. துரியோதனப்பார்வை, தருமரின் பார்வை என்று சொல்வார்களே. அதில் இந்தப் பதிவு துரியோதனப்பார்வை. தருமரின் பார்வையில் பார்ப்பதற்கு மதங்களில் எதுவுமே இல்லை என்பது ஒரு வெள்ளை வேட்டியில் இருக்கும் சில சிறு கறைகளைப் பார்த்துவிட்டு அது 'கறைவேட்டி' என்று தூர எறிவது போன்று உள்ளது. :-) இந்த உவமையையும் நினைத்ததால் புன்சிரிப்பு தொடர்ந்தது. :-)

')) said...

//I salute you.

இதே கருத்தே எனக்கும். நானும் ஒன்று எழுத முயலவேண்டும்.

//

பதிவை இப்படியே புன்சிரிப்புடன் தொடர்ந்து படித்து முடித்தவுடன் இந்தப் பின்னூட்டத்தைப் படித்தவுடன் இன்னும் புன்சிரிப்பு விரிந்தது. நம்ம ஊர் பெரியவர் தானும் வெள்ளை வேட்டியில இருக்கிற கறையை மட்டும் ஃபோகஸ் பண்றோம்ங்கறதை தெளிவாச் சொல்றாரேன்னு. :-)

')) said...

//இன்று மதத்தை பின்பற்ற விரும்புவர்கள் அனைவரும் அவர்கள் அமைப்பு தவறு செய்யும் பொழுது அதற்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு காட்டி அதனை மாற்ற முயலவில்லை என்றால் மதத்தின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம்.//

இந்த வரிகள் மட்டுமே இந்தப் பதிவில் என் மனதைக் கவர்ந்த வரிகள். உண்மை. மதத்தின் பங்காளிகளாய் இருப்பவர்கள் மதங்கள் செய்யும் நன்மைகளுக்கு உரிமைதாரர்களாக இருப்பதைப் போல் மதம் செய்யும் கெட்டவைகளுக்கும் உரிமைதாரர்களே. அதனை மறுக்க முடியாது. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு எல்லோரும் எப்படி பொறுப்பாக முடியும் என்று கேட்டால் அந்த ஒரு சிலர் உங்களைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் போது அந்த ஒரு சிலரை நீங்களும் உங்களைச் சேர்ந்தவர் என்று ஒப்புக்கொள்ளும் போது அவர்கள் செயல்களுக்கு நீங்களும் பங்காளிகள். நன்றாகச் சொன்னீர்கள்.

')) said...

மேலே தருமி ஐயாவைப் பற்றி சொல்லியிருக்கும் கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இப்போது தான் Catch 22 பதிவு படித்தேன்.