Thursday, November 02, 2006

எது மிக தீங்கான மதம்?

இந்தப் பதிவு சரித்திர நிகழ்வுகளின் ஒரு நினைவூட்டல் மட்டுமே.

பொதுவாக ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் மீதும், கிறிஸ்துவம் மீதும் புழுதி வாரி போட்டுக் கொண்டு அவர்கள் மதம் எதோ புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிப்பார்கள். அதே போல இஸ்லாமியர்கள் ஹிந்து மதத்தின் மேல் புழுதி வாரிப் போட்டு தங்கள் மதம் எதோ ரொம்ப புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா மதங்களிலும் பொதுவானது.

மற்றவர் மேல் புழுதி வாரி அடித்து தன் தவறுகளை மூடி மறைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல். அவரவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டிக் காட்டலே இதன் நோக்கம்.

அது மட்டும் அல்லாமல் அரசியல் ரீதியாக சிலர் ஒரு மதத்தின் மேல் மட்டும் காட்டம் கொண்டவர்களாக இருப்பதால் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் இவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் செயல் படுவதுமாக இருக்கிறது.

இன்று நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் என்று கூறி கொள்ளும் பல அரசியல்வாதிகளே நம்முள் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே ஒரு உண்மையான பகுத்தறிவாளனின் பதிவு இது.

இன்றுள்ள சூழ்நிலையில் எல்லா மதங்களுமே தீங்கானவை என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ஆகவே இதில் ஒவ்வொரு மதத்தினரின் கடந்த கால சாதனைகள், சமீப கால சாதனைகள், நீண்ட கால சாதனைகள் எல்லாவற்றையும் பட்டியலிடலாம் என்று யோசித்து இந்தப் பதிவை இட்டிருக்கிறேன்.

ஹிந்து மதம்

கடந்த கால சாதனைகள்

ஒற்றுமை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. அடிக்க வேறு மதத்தினர் இல்லாமல் இருந்த சமயம் தன்னுள்ளேயே அரி, சிவன் என்று அடித்துக் கொண்டது. அடிப்படைக் கொள்கையான எல்லாமே இறைமயம் என்பதை கொஞ்சம் கூட பின்பற்றப் படாதது.

சமீபத்திய சாதனைகள்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா, இஸ்லாம் தீவிரவாதம் வளர ஊற்றுக் கண்ணாக திகழ்வது என்று கணக்கற்றவை.

நீண்ட கால சாதனை

ஜாதி என்ற விஷச் செடியை மக்கள் மனதிற்குள் விதைத்தது. பலவாயிரம் வருடங்கள் ஒரு சாராரை அடிமைப் படுத்தி வைத்தது.

இஸ்லாம்

கடந்த கால சாதனைகள்

அடிப்படையிலேயே தன் மதத்தினரைத் தவிர எல்லோரையும் காபிர் என்று ஒதுக்கி பிரிவினைகளை உண்டாக்கியது. இவரைக் கொல்லலாம் அவரைக் கொல்லலாம் என்று வன்முறையை சரி என்று சொல்லும் ஒரே மதம். இறை தூதராக கருதப்படும் முகமதுவே பல போர்களை தன்னுடைய வாழ்நாளில் மேற்கொண்டதுவே இதற்கு உதாரணம்.

சமீபத்திய சாதனைகள்

கணக்கற்ற தீவிரவாத செயல்கள், செப் 11, போப்பைக் கொல்ல பகிரங்கமாக அறிவித்தது. ஜிகாத் புனிதப் போர் என்ற பெயரில் அப்பாவிகளை கொலை செய்வது.

நீண்ட கால சாதனை

கணக்கிலடங்காத குண்டுவெடிப்புகள், பெண்களை அடிமையாக நடத்துவது.

கிறிஸ்துவம்

கடந்த கால சாதனைகள்

சிலுவை யுத்தம், சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை எரித்தது.

சமீபத்திய சாதனைகள்

ஜீஸஸ் வெள்ளையானவர் என்று நிற வெறி காலத்தில் கருப்பர்களை கொலை செய்தது.

நீண்ட கால சாதனை

மதத்தின் பெயரால் போர் என்பதை தொடங்கி வைத்தது. மதத்தின் பெயரால் இன்று உலகில் நடக்கும் பல பிரச்சனைகளை (பாலஸ்தீனப் பிரச்சனை உட்பட) தொடங்கி வைத்தது.

மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பதில் எல்லா மதங்களும் 100/100 மதிப்பெண் பெறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதில் ஒன்றோடு ஒன்று சளைத்தது அல்ல என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள மதங்கள் மட்டும் அல்ல ஜியோனிஸம், பௌத்தம் என்று எல்லா மதங்களுக்கும் இந்தப் பெருமை உண்டு.

15 comments:

')) said...

//
மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பதில் எல்லா மதங்களும் 100/100 மதிப்பெண் பெறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதில் ஒன்றோடு ஒன்று சளைத்தது அல்ல என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள மதங்கள் மட்டும் அல்ல ஜியோனிஸம், பௌத்தம் என்று எல்லா மதங்களுக்கும் இந்தப் பெருமை உண்டு.

//

செந்தில் குமரன் நன்றாக எழுதியிருக்கிங்க ! பாராட்டுக்கள் !

இதில் கொஞ்சம் தொடர்பான என்னுடைய பதிவின் சுட்டி

http://kaalangkal.blogspot.com/2006/09/blog-post_19.html

')) said...

மிகவும் ஆழமாக விவாதிக்க வேண்டிய யோசிக்கவேண்டிய விஷயம்.

மேல்மட்டமாக முழுதும் ஆராயாமல் எழுதப்பட்டதோ என்று தோன்றுகிறது.

சொல்லப்பட்ட விஷயங்கள் யோசிக்கவைப்பவை.

நன்றி

')) said...

நண்பரே...என்றைக்கு மதம் என்பது மனிதனை விடவும் இறைவனை விடவும் பெரியது என்று ஆகிவிட்டதோ...அப்பொழுதே பிரச்சனைகள் உண்டாகும். என்னுடைய கருத்தைக் கேட்டால்...எல்லாரும் கறைகையர்கள்தான். ஆனால் தாம் ஒழுக்கம் என்று சொல்லிக் கொள்வதில் அனைவருக்கும் பேரானந்தம். அதை விடப் பேரனாந்தம் அடுத்தவன் ஒழுங்கீனம் என்று சொல்லிக் கொள்வதில்.

')) said...

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான்.

ஆனால் தந்தம் மட்டுமே யானை இல்லை

மனிதருக்கு மதங்கள் செய்த தீங்கைவிட நன்மைகள் மிக மிக மிக அதிகம் என்று நான் கருதுகிறேன்.

')) said...

இன்னொரு பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தின் ஒரு பகுதி:

மதங்கள் இல்லாத அல்லது வலுவான அமைப்புள்ள மதங்கள் இல்லாத சமுதாயங்கள் முன்னேறி இருக்கிறதா?

உலகம் முழுதும் பழங்குடிகள் பழங்குடிகளாக இருப்பதற்கு மதமில்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?

ஒவ்வொரு சமைலறையிலும் இருக்கும் கத்திகள் அனைத்தும் கொலை செய்யக் கூடியவைதான்.

வெளிப்படையாக பல கத்திகள் கொலைகளை செய்து கொண்டிருக்கின்றன.

மௌனமாக பல கத்திகள் ஒவ்வொரு வீட்டிலும் சமையல் செய்து கொண்டிருக்கின்றன.

நான் கத்திகளைப் பார்த்து பயப் படுவதில்லை. கொலைகளைப் பார்த்து மட்டுமே.

said...

//இந்து மதம்

கடந்த கால சாதனைகள்

ஒற்றுமை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது.
//
ஒற்றுமை என்று வாக்குவங்கி உருவாக்கி, எல்லா இந்துக்களும் இந்து இந்து என்று வெறிபிடித்து அலைவதுதான் ஒற்றுமை என்று நீங்கள் சொல்கிறீர்களா?
அப்படிப்பட்ட ஒற்றுமை மற்ற மதங்களில் இருக்கிறது உண்மைதான். அப்படிப்பட்ட ஒற்றுமை இல்லாமல், பல்வேறு விதமான கருத்துக்களை பேசிக்கொண்டும், அப்படி பேசுபவர்களுக்கு இடம் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்களே இந்துக்கள். அதனை பாராட்டுங்கள்
//
அடிக்க வேறு மதத்தினர் இல்லாமல் இருந்த சமயம் தன்னுள்ளேயே அரி, சிவன் என்று அடித்துக் கொண்டது.
//
அரி சிவன் என்று அடித்துக்கொண்டார்கள் என்பதற்கு ஆதாரம் காட்டமுடியுமா? வைணவர்கள் சைவர்கள் மீது படையெடுத்து கொன்றதாகவோ, அல்லது வைணவர்கள் சைவர்கள் மீது படையெடுத்து கொன்றதாகவோ காட்ட முடியுமா? ஷியாக்காரர்கள் சுன்னி மசூதிகளில் குண்டு வைப்பது போலவோ, அல்லது சுன்னிகள் ஷியா மசூதிகளில் தொழுகைக்கு குழுமியிருப்பவர்கள் மீது குண்டு வைப்பது போலவே எந்த காலத்திலாவது இந்துக்கள் மற்ற இந்துக்கோவில்களில் குண்டு வைத்திருக்கிறார்களா? அல்லது கொன்றிருக்கிறார்களா?
//
அடிப்படைக் கொள்கையான எல்லாமே இறைமயம் என்பதை கொஞ்சம் கூட பின்பற்றப் படாதது.
//
எல்லாம் இறைமயம் என்பதை சாதாரண குடும்ப வாழ்க்கையில் உள்ள மனிதர்கள் பின்பற்ற முடியாது. மாமியார் மருமகள், சம்சார சாகரம் எல்லாம் காலியாகிவிடும். வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால் சாதாரண சம்சார சாகரத்தில் இருப்பவர்களை கடைத்தேற்றவும், அவர்களுக்கு நல்வழி காட்டவும் இருக்கும் ஆன்மீகத்தினர் இதனை புரிந்து வைத்துள்ளதால்தான் பாரபட்சமின்றி அவர்களுக்கு நல்வழி காட்டமுடிகிறது.

//
--

சமீபத்திய சாதனைகள்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா, இஸ்லாம் தீவிரவாதம் வளர ஊற்றுக் கண்ணாக திகழ்வது என்று கணக்கற்றவை.
//
இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு இந்து மதம் காரணமா? இந்து மதம் இருப்பதே இஸ்லாமியருக்கு பிரச்னை அதனால், இந்து மதம் இல்லையென்றால், பாகிஸ்தான் உருவாகியிருக்காது என்று சொல்கிறீர்களா? டைரக்ட் ஆக்ஸன் டே என்று முஸ்லீம் பெரும்பான்மை இடங்களில் பாகிஸ்தான் வேண்டும் என்று வெறியாட்டம் ஆடி இந்துக்களை கொன்றதற்கு இந்து மதம் காரணமா? பொய் சொல்வதற்கும் அளவிருக்கிறது.
பாபர் மசூதி இடிப்புக்கு இந்து மதம் காரணமா? அங்கே இந்து கோவில் இருந்ததால்தானே அங்கே பாபர் மசூதியை கட்டினார். இந்து கோவிலே இல்லாமல் இருந்திருந்தால், பிரச்னையே இல்லையே என்று கூறுகிறீர்களா?
கோத்ராவில் நடந்ததற்கு இந்து மதம் எப்படி காரணமாகும்? இந்து மதம் இல்லையென்றால் இந்து யாத்ரீகர்கள் இருந்திருக்க மாட்டார்கள், அதனால், அங்கே ரயில் பெட்டியை கொளுத்த வேண்டிய கட்டாயத்துக்கு முஸ்லீம்கள் வந்திருக்க மாட்டார்கள் என்று சொல்கிறீர்களா?
ஈராக்கிலும், தாய்லாந்திலும், லண்டனிலும், நியூயார்க்கிலும், பிரான்ஸிலும், ரஷ்யாவில் பெஸ்லானிலும், ஆப்கானிஸ்தானத்தில் தாலிபானாகவும் வெடிக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும் இந்து மதம் தான் காரணமா? இருக்கும் இருக்கும்.

//

நீண்ட கால சாதனை

ஜாதி என்ற விஷச் செடியை மக்கள் மனதிற்குள் விதைத்தது. பலவாயிரம் வருடங்கள் ஒரு சாராரை அடிமைப் படுத்தி வைத்தது.
//

சமீபத்தில் காலச்சுவடு என்ற பத்திரிக்கையில் ஜாதி உலகெங்கும் எப்படி இருக்கிறது என்பது பற்றி கட்டுரை வந்திருக்கிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், ஹவாய் இன்னும் பல நாடுகளில் ஜாதி இருக்கிறது. ஜப்பானில் புராக்கு மக்களுக்கு எதிராக கடுமையான தீண்டாமை இருக்கிறது. அது இன்னமும் தீர்க்கமுடியவில்லை. இதெற்கெல்லாம் இந்து மதம்தான் காரணமா?

ஜாதி காரணமாக ஒரு சாராரை அடக்கி வைப்பது கொடியது என்று குரல் கொடுத்தவர்கள் எல்லோரும் இந்து துறவிகளான ராமானுஜர், பஸவேஸ்வரர், நாராயண குரு ஆகியோரும் இந்து மதத்துக்கு எதிரானவர்களா?
***

எல்லா மதங்களிலும் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவற்றை ஆராய வேண்டும், அவற்றை மாற்ற வேண்டும் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். இதனை இந்துக்கள் ஒப்புக்கொள்வார்கள். முஸ்லீம்களும் கிரிஸ்துவர்களும் மத அடிப்படையிலேயே ஒப்புக்கொள்வார்களா?

நீங்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பொருந்தாதவை. வேறெதும் இந்து மதத்தை பற்றி எழுதுங்கள். அது சரியான குற்றச்சாட்டாக இருந்தால் ஒப்புக்கொள்வதில் பிரச்னை ஏதுமில்லை

நட்புடன்
நண்பன்

')) said...

நண்பன் சொன்னவற்றில் ஏறக்குறைய எல்லாவற்றையும் வழிமொழிகிறேன். ஓகை ஐயா சொன்னது போல் 'தந்தம் மட்டுமே யானை இல்லை' என்பதையும் 'நான் கத்திகளைப் பார்த்து பயப்படுவதில்லை. கொலைகளைப் பார்த்து மட்டுமே' என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நண்பன் சொன்னதில் 'சைவ வைணவ' பேதத்தில் கொலை நடக்கவில்லை என்பதனை மட்டும் மறுக்கிறேன். சைவ, வைணவர்களுக்குள்ளும் கொலை கொள்ளைகள் நடந்துள்ளன; சைவ வைணவர்களை பௌத்த சமணர்களும், பௌத்த சமணர்களை சைவ வைணவர்களும் கொன்றதும் கொள்ளை அடித்ததும் நடந்துள்ளன. அவை வரலாற்று உண்மைகளே. அப்படிச் செய்தவர்களை நாயன்மார்களுக்குள்ளும் ஆழ்வார்களுக்குள்ளும் வைத்தும் நாம் போற்றுகிறோம். நண்பன் சொன்னவற்றில் இது மட்டுமே நான் அறிந்தவரையில் தவறு என்று தோன்றுவதால் இந்த சேம் சைட் கோல். :-)

')) said...

மதங்களின் மேல் உள்ள உங்கள் வெறுப்பு, அதன் காரணியான ஒரு கடவுளற்ற மதம் தான் இது நாள் வரை உலகத்தார்க்குத் தெரிந்த மிகவும் தீங்கான "மதம்".

அதன் தத்துப் பிள்ளையாக இப்போது இருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதம்.

//
பொதுவாக ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் மீதும், கிறிஸ்துவம் மீதும் புழுதி வாரி போட்டுக் கொண்டு அவர்கள் மதம் எதோ புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிப்பார்கள்.
//

புளுதி வாரிப் போடத்தான் வேண்டுமென்றால் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளின் மீதும் கிலோ கணக்கில் புளுதிகள் வாரிப் போடலாம்...அவ்வளவு புளுதி இந்த உலகில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக Assertive hindu வாக இருப்பவர்கள் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளைத்தான் நீங்கள் அடுக்கியிருக்கிறீர்கள்.

நண்பன் என்பவர் அதற்கு தகுந்த பதில் சொல்லிவிட்டார்.
.....

இந்து மதத்தின் மீது வீசப்படும் புளுதிக்கு இந்து மகா சமுத்திரத்தின் அடியிலிருந்து அத்தனை புளுதியை எடுத்து பதிலுக்கு வீசினாலும் பத்தாது என்று ஒரு மாமேதை சொன்னார்.

அவர் சுவாமி விவேகானந்தர்.

said...

//இந்து மதத்தின் மீது வீசப்படும் புளுதிக்கு இந்து மகா சமுத்திரத்தின் அடியிலிருந்து அத்தனை புளுதியை எடுத்து பதிலுக்கு வீசினாலும் பத்தாது என்று ஒரு மாமேதை சொன்னார்.

அவர் சுவாமி விவேகானந்தர்.//

வஜ்ரா,

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்.ஆனால் எவ்வளவு சொன்னாலும் சில மரமண்டைகளுக்கு புரியாது!!!

said...

Matham oru KURANGU.

Khan

')) said...

செ.குமரன்,
நல்ல பதிவு தான் !

//நண்பரே...என்றைக்கு மதம் என்பது மனிதனை விடவும் இறைவனை விடவும் பெரியது என்று ஆகிவிட்டதோ...அப்பொழுதே பிரச்சனைகள் உண்டாகும். என்னுடைய கருத்தைக் கேட்டால்...எல்லாரும் கறைகையர்கள்தான். ஆனால் தாம் ஒழுக்கம் என்று சொல்லிக் கொள்வதில் அனைவருக்கும் பேரானந்தம். அதை விடப் பேரனாந்தம் அடுத்தவன் ஒழுங்கீனம் என்று சொல்லிக் கொள்வதில்.
//
ஜிரா சொல்றதை முழுதும் ஆமோதிக்கறேன் !!!
எ.அ.பாலா

')) said...

மேம்போக்காக இருந்தாலும் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்ட பதிவு. நன்றி செந்தில் குமரன் அவர்களே.

நண்பன் சொன்னதுடன் முற்றிலும் உடன் படுகிறேன். ஒரு மதம் உண்மையிலேயே வன்முறையைத் தூண்டுகிறது என்று சொன்னால், அதை ஆராயாமல், எல்லா மதமுமே இப்படித்தாங்க என்று ஜல்லியடிப்பது சரியான சிந்தனை அல்லவே? வெற்று வாதம் இது.

// நண்பன் சொன்னதில் 'சைவ வைணவ' பேதத்தில் கொலை நடக்கவில்லை என்பதனை மட்டும் மறுக்கிறேன். சைவ, வைணவர்களுக்குள்ளும் கொலை கொள்ளைகள் நடந்துள்ளன; //

குமரன் அவர்களே. சும்மா இப்படி சொல்லிவிட்டுப் போனால் எப்படி? வாத, விவாதங்கள் நடந்துள்ளன.. கொலை, கொள்ளைகள்??? ஆதாரங்கள் கொடுங்கள் ஐயா!

எனக்குத் தெரிந்து வரலாற்று அளவில் பார்த்தால், ராமானுஜரை சைவ சோழ அரசன் கண்ணைப் பறிக்கச்சொன்ன விவரமும், அவரைக் காப்பாற்றுவதற்காக கூரத்தாழ்வான் தன் கண்களைத் தந்ததும், இதன் காரணமாக ராமானுஜர் தமிழகத்தை விட்டு வெளியேறி வைணவ ஹொய்சல அரசர்கள் ஆண்ட கர்நாடகப் பகுதிக்கு (மேல்கோட்டை) பெயர்ந்ததும் வைணவ நூல்களில் பதிவு செய்யப் பட்டுள்ளன.. இது உண்மையாகவே இருக்க வேண்டும். .. ஆனால் இது ஒரு விதிவிலக்கான சம்பவமே. இதற்கு எதிராக கலவரங்கள் எல்லாம் நடந்ததாகக் கூட குறிப்புக்கள் இல்லை. கொள்ளை, கொலை என்பதெல்லாம் பெரிய அளவில் நடந்திருந்தால் அது கண்டிப்பாகப் பதிவு செய்யப் பட்டிருக்குமே! இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் மத்தியகால இந்தி மற்றும் பல வட இந்திய இலக்கியங்களிலும் தெளிவாகப் பதிவுசெய்யப் பட்டுள்ளது போல.

வன்முறையை விடுங்கள். கருத்தளவில் கூட சைவ-வைணவ சமயங்கள் தங்களுக்குள் வெறுப்பு பாராட்டியதில்லை.
சைவ நூல் ஒன்றில்கூட திருமாலை இழிவுபடுத்திக் கூறவில்லை…வைணவத்திலும் அது போலத்தான். திருமாலை வணங்குபவர்கள் பாவிகள் போன்ற கருத்துக்கள் எங்கே இருக்கின்றன? திருமாலும் சிவனுள் அடக்கம் என்று சைவமும், சிவனும், திருமாலுக்குள் அடக்கம் என்று தான் வைணவமும் போதித்தன..அதனால், அடுத்த சமயத்தவனைக் கொல்வதற்கு உந்துதலே இல்லையே?

நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண்..
அரியிலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே
- அப்பர் தேவாரம்

முனியே நான்முகனே முக்கண்ணப்பா கனிவாய்ச் செங்கரு மாணிக்கமே..
சீராச் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்..
- திருவாய்மொழி

தமிழகத்திற்கு வெளியில் என்று பார்த்தால், ஒரு சில சமயங்களில் கும்ப மேளாவில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் சிறு சிறு ஆயுதப் போர்கள் நடந்ததற்கான குறிப்புக்கள் உள்ளன.. இவைகளும் விதிவிலக்குகளே.. சிவனையும், ராமனையும் துளசிதாசர் அதியற்புதமாகத் தனது ராமாயண்த்தில் இணைத்துவிட்டதால், கருத்தளவில் கூட இந்தச் சண்டைகள் வடபாரதத்தில் நின்று விட்டன.

----------

சமணர், பௌத்தர் பற்றி இழிவான, வெறுப்பு நிறைந்த குறிப்புக்கள் திருமுறைகள், திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளன.. இதற்கும் அதிகமாகவே இந்து சமயத்தின் மீதான வெறுப்பும் பௌத்த மற்றும் சமண நூல்களில் உள்ளது.. So, it was only mutual !

வன்முறையைத் தூண்டும் விதமாக சில பாடல்கள் உள்ளன.. அடிக்கடி சுட்டப் படும் தொண்டரடிப் பொடியாரின் பாடல் -
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில்
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய்
அரங்கமா நகரு ளானே

இத்தகைய பாடல்கள் இருப்பதாலேயே கொலைகள் நடந்தன என்று சொல்ல முடியாது... இன்றைக்கு செய்தித்தாள்களில் வரும் டம்மி மிரட்டல்கள் போன்று கூட இவை இருந்திருக்கலாம்.. ஆதாரங்கள் எங்கே???

சை-வைணவ, பௌத்த-சமண என்று பொதுமைப் படுத்துவதே உள்நோக்கம் கொண்டது. பௌத்த-சமண அடிதடிகள் பற்றி சீதா ராம் கோயல் எழுதியிருப்பதை இங்கே விலாவாரியாகப் படிக்கலாம்,
http://voi.org/books/htemples2/app4.htm

')) said...

செந்தில்,

உங்களைப்போல்தான் நானும் மதங்கள் வேண்டாம் என்றேன். ஆனால் திருந்துகின்றனவா இந்த இழிபிறவிகள்? பாருங்கள் பூணூல் பார்ட்டிகளின் குரைத்தல்களை!

Posted by Doondu | 12:51 AM

said...

ஓகை ஐயா அவர்கள் சொல்வதே சரி,
கொலைகளைச் செய்கிற சில கத்திகளைப் பார்த்துவிட்டு இந்த கத்திகளை ஒழித்துக்கட்டத் துடிக்கிறீர்கள். கத்திகள் இல்லாவிட்டாலும் கொலைகள் நடக்கத்தான் செய்யும். அதுபோல, பலப்பலக் கத்திகள் மவுனமாக சமையலறைகளில் பணி புரிந்துக்கொண்டிருக்கத்தான் செய்கின்றன.

மற்ற மதங்கள் இல்லாத நிலையில் சமணமும், வைணவமும் ஒன்றையொன்று அழித்திடத் துடித்ததை 'பொன்னியின் செல்வனில்' கூட பார்க்கலாம்.
ஆக, மதங்களல்ல, 'தான் மிகைக்க வேண்டும்'என்ற மனித உணர்வே பிரச்னைகளுக்குக் காரணம். சுண்ணாம்புக்கால்வாய்கள் இதை வரலாற்றின் நெடுகிலும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. சைவம் வைணவம் மட்டுமே இருந்தாலும், சியா, சன்னி மட்டுமே இருந்தாலும் உலகில் பிரச்னைகள் பிழைத்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதால், 'தான்' என்கிற உணர்வு தவிர்க்கப்பட இயலாத ஒன்று. இதைப்புரிந்துக்கொண்டால் எல்லாம் விளங்கும்.

இஸ்லாம் மதத்தைப் பொறுத்தவரை, எனக்குத் தெரிந்து, எரிவது அடங்கினால் கொதிப்பது நின்று விடும் கதைத் தான். இன்றைக்கு இணையத்திலும், வெளியிலும் இஸ்லாம் பற்றிய பற்பல கதையாடல்கள் அதன் புனிதங்கள் மீது 'தன்னுடையதே மிகைக்க வேண்டும்' என்ற உணர்வுள்ள மற்றவர்களால் ஊடக வலிமையுடன் (நம் தமிழ் வலைப்பூக்களும் உதாரணம்)திணிக்கப்படுகின்றன. (இதை இப்பதிவின் சில வரிகளும் உறுதிப்படுத்துகின்றன.)
இதன் எதிர்வினையே சில முஸ்லிம்கள் வரம்பு மீறி, தீவிரவாதமாகிறது. இப்போது யாரோ ஒரு இறையடியான் என்ற பெயரில் முஸ்லிம் ஒருவர் இந்து தெய்வங்களை கேள்வி எழுப்பியது போல் மற்ற முஸ்லிம்கள் பிற மதங்களைச் சாடி நான் கண்டதில்லை. (விதிவிலக்குகள் இருக்கலாம்). அபூ முகை, இப்னு போன்ற அவர்கள், தம் மதம் பற்றிய விளக்கங்களை மட்டும் (பிற மதங்களைச் சிறிதும் தாக்காமல்) தந்து வரும் பாங்கு கண்டிப்பாக போற்றப்பட வேண்டிய ஒன்று.
கிறிஸ்தவ ஜோசப், ஜோக்களும் அங்ஙனமே!

ஆனால், நாம்? பிற மதங்களை கேரக்டர் அசாசினேஷன் செய்வதே நம் மதம் வளர்வதற்கு வழி என்று நினைத்து 'ஜெய் ராம்' என்கிறோம். ஈஸ்வர அல்லா தேரா நாம்.


ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்: 'கற்பில் சிறந்தவள் ........(இந்து தெய்வங்கள் பெயர்)' போட்டு (மதமல்லாத)தி.கவினர் 'பட்டிமன்றம்' போட்டால், நம்மவன் பதிலுக்கு என்ன செய்வான் தெரியுமா? 'கற்பில் சிறந்தவள்..... (முஸ்லிம்/கிறிஸ்தவ புனிதங்கள் பெயர்) போட்டு தீவிரவாத வெடிகுண்டுக்கு திரி பொருத்துவான். சிறுபான்மையினருக்கு சலுகை காட்டப்படுவதைப் பொய்ப்பிப்பதற்காகவோ, அல்லது ஃபீரீடம் ஆஃப் எக்ஸ்பிறசன்' என்கிற அம்சத்துக்காகவோ, அதை அரசும் கண்டுக்கொள்ளாமல் விடும். பின்னர், கண்கெட்ட ஞானோதயம்.
--க.சுந்தர்--

')) said...

நீங்க இப்படி சொல்லிக்கொண்டிருந்தாலும் இன்று காலை வந்த செய்திஇங்கே