Thursday, August 17, 2006

சுதந்திர தின சிந்தனைகள்

நாடு என்பது என்ன? எல்லைக் கோடுகள் நம்மைப் யாரிடம் இருந்து பிரிக்கிறது? 47க்கு முன் நம் சோதரர் இன்று அவர்களால் தான் நமக்கு மிகப் பெரிய அபாயம். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்?

"தனி ஒரு மனிதனுக்கு உண்வில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று மனித நேயத்தை வழியுறுத்தி முழங்கினானே ஒரு கவிஞன் அவன் கனவு மெய்படும் திசைக்கு எதிர் திசையில் அல்லவா சென்று கொண்டிருக்கிறோம்.

தன் குலத்தையே நொடிகளுக்குள் அழிக்கும் திறனை வளர்த்துக் கொண்டவன் மனிதன். இன்று அழிவு என்று வந்தால் அழியப் போவது மனிதர்களுல் ஒரு பகுதியினர் மட்டும் அல்லர், முழு மனித இனமே அழிந்து விடும் சூழ்நிலைதான் நிழவுகிறது.

லெபனானில் நடந்த தாக்குதல்கள் Nuclear Holocast ஆக மாறி விட எத்தனை நேரம் பிடித்து விடும்.

உலகம் எங்கிலும் இந்த நிலை என்றால் நமக்கு தலையிலும் பிரச்சனை வாலிலும் பிரச்சனை.

பாகிஸ்தான் இந்தியா பிரச்சனையினால் இறப்பது தம் தூரத்து ரத்தச் பந்தங்கள் தான் என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்? காஷ்மீர் என்ற சொர்கத்தை இன்னும் நரகமாகவே வைத்திருக்கிறோமே என்று அதனை தீர்க்கப் போகிறோம்? அந்த ஊர் குழந்தைகள் வெடி குண்டுப் சத்தத்திற்கு நடுவில் தூங்காமல் தாலாட்டிற்கு நடுவில் தூங்கும் காலம் வரும்?

இலங்கை என்று இயற்கை எழில் கொஞ்சும் பூமிக்கு விடியல் வரப் போகிறது?

எது மாறினால் இது போன்ற கொடுமைகளில் இருந்து விடிவு கிடைக்கும்?

அரசாங்கமோ மாறுவதாலா? இல்லை நாட்டின் பாலிஸி மாறுவதாலா?

மாற வேண்டியவை அவை அல்ல மனிதனின் மனோபாவம் தான். இனம் மதம் என்று தன்னைத்தானே பிரித்துக் கொண்டிருப்பது மனிதன் தான் ஆகையால் மாறுதல் என்பது அவனிடத்தில் தான் வர வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனை தீர வேண்டுமெனில் மாற வேண்டியது மனிதனை பிடித்திருக்கும் மதம் தான். இலங்கைப் பிரச்சனைகள் தீர இன குறித்த மனிதனின் மனோபாவம் தான் மாற வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள், சிங்களத்தவர்கள் என்ற எண்ணம் போய் அனைவரும் மனிதரே என்ற எண்ணம் தழைத்தோங்கினால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்து விடும்.

ஹிந்து முஸ்லீம் என்ற பாகுபாடுகள் இல்லையெனில் பாகிஸ்தான் உருவாகியே இருக்காது காஷ்மீரும் பிரச்சனைக்குள்ளாகி இருக்காது.

இந்த பாகுபாடுகள் அனைத்தும் தீர்ந்து போக வேண்டுமெனில் அன்பு வழியில் சென்றால்தான் அது முடியும்.

பிரச்சனைக்கு அடிப்படை, அந்த அடிப்படைக்கு அடிப்படை என்று போய்க் கொண்டே இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணியாக மனிதனின் ஈகோ தான் இருக்கும் என் மதம் என் இனம் என் ஜாதி என் மொழி பேசுபவர்கள் என்று நமக்கே நம்மவர் என்னுடையது என்ற ஈகோதான் இது அனைத்திற்குமே காரணம்.

சுஜாதாவின் ஒரு கதை எதுவென்று தெரியவில்லை வருங்காலத்தில் நடக்கும் கதை நிகழ்காலத்தில் இருந்து வருங்காலத்துக்கு கூட்டிச் செல்லப்பட்ட மனிதனின் எண்ணங்களால் எப்படி வருங்காலத்தில் இருக்கும் அனைத்துமே அழிந்து போய் விடக் கூடும் என்பது போன்ற கதை அது.

இன்று நிகழ்காலத்தில் அதுதான் நிகழ்ந்து வருகிறது மனிதனின் ஈகோ அவனுடைய அழிவுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது.

மாற்றம் என்பது சிறிய அளவில் தான் ஆரம்பிக்கும்.

Pay It Forward என்ற படம் ஒன்று அதில் வரும் சிறுவன் ஆரம்பிக்கும் என்ற படம் ஒன்று அதில் வரும் சிறுவன் ஆரம்பிக்கும் Pay It Forward என்ற ஸ்கீம் ஆரம்பிப்பான். அதாவது அந்தச் சிறுவன் இரண்டு பேருக்கு உதவி செய்வான் அதற்கு பலனாக வேறு இருவருக்கு உதவி செய்யச் சொல்லுவான் அது போல அனைவரும் அனைவருக்கும் உதவிக் கொள்ள அந்த நகரமே ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து விடுவதாக காட்டியிருப்பார்கள்.

அது போன்ற டிராமேட்டிக் மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவென்றாலும் நாம் இன்று நம்முடைய துவேஷங்களை அது எவ்வளவு நியாயமான துவேஷமாக இருந்தாலும் ஒழித்து விட்டு அன்பு வழியில் செல்லத் துவங்கினால் மட்டுமே மனித குலம் அடுத்த கால் நூற்றாண்டைத் தாண்டும்.

நம் நாடு என்ற பெருமிதத்துடன் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம் இந்தியாவின் இறையாண்மைக் கொள்கையான அன்பு வழியில் சென்று நம்முடைய துவேஷங்கள், வெறுப்புகள் அனைத்தையும் மறந்து ஒரு சிறந்த பாரதத்தையும், இந்த பூமியை ஒரு சிறந்த இடமாக்க முயற்சிகள் செய்வோம்.

ஜெய் ஹிந்த்.

4 comments:

')) said...

It is really very nice pathivu.Your blog is really good.I will see "Pay it forward" movie soon

')) said...

வருகைக்கு நன்றிங்க சதுக்க பூதம். உங்க பதிவைப் போய் பார்த்தேன் எப்போ முழு மூச்சா பதிவிட ஆரம்பிக்கப் போறீங்க?

')) said...

குமரன்..!

கொஞ்ச நாளாய் சீரியஸ் ஆக எதுவும் படிப்பதில்லை... அதனால் பின்னூட்டம் போட முடிவதில்லை. கிழுமத்தூர் எக்ஸ்ப்ரஸ்சில் கடந்த 10 நாட்கள் பயணம் செய்ததால் உங்கள் பதிவும் விடுபட்டு போய்விட்டது.

உங்கள் பதிவை படித்தாலும் சீரியஸ் கமென்ட் எதுவும் நான் போடமாட்டேன், சீரியஸ் கமென்ட் என்னிடம் நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்பதும் உங்களுக்கும் தெரியும்.
:))))

பதிவுக்கு கருத்து : கட்டுரை மிக அளவாகவும், பொறுமையாகவும், கருத்து செரிவாகவும் எழுதப்பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள்

')) said...

கோவி.கண்ணன்[gk] இல்லாம எனக்கு பதிவு போட்டனா இல்லையாங்கற அளவுக்கு சந்தேகம்.

///
உங்கள் பதிவை படித்தாலும் சீரியஸ் கமென்ட் எதுவும் நான் போடமாட்டேன்

கட்டுரை மிக அளவாகவும், பொறுமையாகவும், கருத்து செரிவாகவும் எழுதப்பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள்
///

என்னங்க சீரியஸா சொல்ல மாட்டேன்னு சொல்லீட்டு இப்படி சொல்லீட்டீங்க. என்னை வைச்சு காமெடி கீது பண்ணலயே.

:-))))சும்மா விளையாட்டுக்கு.

உங்க பதிவு ஒண்ணுல கருத்து சொல்லலாமுன்னு வந்துட்டு வேணாமுன்னு போயிட்டேன்.

வருகைக்கு ரொம்ப நன்றி கோவி.