GOD is too big to fit into any religion....
சக்தி வடிவமான இறை அருளை எந்த ஒரு மதத்தினுள்ளும் அடக்கி விட இயலாது...
தருமி அவர்களின் நான் ஏன் மதம் மாறினேன் இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது, அறிவுப் பூர்வமாக அணுகியிருந்தார். மதம் ஏன் பின்பற்றக்கூடாது என்று கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் உள்ள குறைகளை எடுத்துக் காட்டியிருந்தார். மிகவும் நன்றாக இருந்தது. அவரளவுக்கு அறிவுப் பூர்வமாக என்னால் அணுக இயலாவிட்டாலும் என் கருத்துக்களை இங்கு கூறுகிறேன்.
இந்து மதத்தில் தொடங்கி, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் வரை எந்த மதமும் 100 சதவீதம் குறையில்லாத மதங்கள் என்று யாராலும் சொல்ல இயலாது.மதம் மனிதனை பாகுபடுத்துகிறது, பெண்களை அடிமைபடுத்துகிறது, கல்வரங்களுக்கு வித்திடுகிறது. ஒவ்வொரு மதங்களுக்குள்ளும் ஆயிரம் ஆயிரம் குறைகளை நம்மால் காண முடிகிறது.இப்படி குறைகள் உள்ள மதங்களா இறை நிலையை உணர நமக்கு வழிகாட்டப் போகின்றன?
மதங்கள் மனிதனை தன் மதத்தை வழிபடச் செய்ய என்னென்ன வழிமுறைகளை கையாளுகின்றன. கொள்ளிவாய் பிசாசுகள் உண்டாம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விபூதி, குங்குமம் அணிந்து கொண்டால் நம்மை அவைகள் ஒன்றும் செய்யாதாம். ரத்தக் காட்டேரிகள் உண்டாம் சிலுவை காட்டினால் அவைகள் மிரண்டு போகுமாம்.
இந்து மதத்தை பின் பற்றினால் நாம் சொர்க்கம் செல்லலாம், அது போலவேதான் கிற்ஸ்துவ இஸ்லாமிய மதங்களும்.
மனிதனுக்கு இருட்டைக் கண்டால் இருக்கும் பயத்தையும், மரணம் குறித்து இருக்கும் பயத்தையும் துணையாகக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும் மதம் எப்படி இறை நிலையை உணர நமக்கு துணை செய்யும்.
When something is so flawed how can someone blindly following it be any different?
இன்று நாம் நம் கண்ணை திறந்து பார்த்தால் தெரியும் இன்று ஒரு மதமும் குறையில்லாததில்லை என்று. நாம் கண் திறந்து பார்த்தால் தெரியும் இன்று உலகில் மதத்தின் பெயரால் மனிதன் தன்னைத் தானே எப்படி எல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறான் என்று, மதத்தின் பெயரால் இன்று நாம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அந்த அழிவை நாம் சந்திக்கும் சமயம் நம் மதங்கள் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லப் போவதில்லை என்று.
இன்று ஜாதி பாகுபாடுகள் ஒழிய ஜாதிகள் ஒழிந்தால் மட்டும் போதாது ஜாதி பாகுபாடுகளை உண்டாக்கிய மதமும் ஒழிய வேண்டும். புனிதப் போர் என்ற பெயரில் நடக்கும் தீவிரவாதமும் மதங்கள் ஒழிந்தாலே ஒழியும். அறிவியல் வளர்ச்சியை எதிர்க்கும் மதம் நமக்கு தேவையே இல்லை என்று மக்கள் உணர வேண்டும்.
Sunday, June 25, 2006
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
இந்து மத்த்தில் ஜீவனின் லட்சியம் சொர்க்கம் இல்லை.
இந்து மத்த்தை சேர்ந்தால் சொர்க்கம் அடையலாம் என்று தாங்கள் சொல்லுவது பிழை.
இந்து மதம் ஜீவனின் முக்தியை பேசுகிறது. எங்கும் இரண்டற கலந்திருக்கும் இறைவனின் பூரணமாக இன்ப நிலையில் நாம் கலந்துவிடுவதே முக்தி எனப்படும். இதுவே இந்து ஜீவன்களின் முயற்சி.
தாங்கள் கூறும் எல்லா குறைப்பாடுகளும் இந்து மதம் புரிந்து கொள்கிறது. அதனால்தான், இந்த உயர்ந்த மதம், ஒரு நிலைப்பாட்டில் இம்மாதிரி சடங்குகளும், சம்பிரதாயங்களும் யாருக்கும் தேவையில்லை என்கிறது.
தாங்கள் சொல்லும் மதம் தேவையில்லை என்பதும் இந்துமத்த்தின் உயரிய கொள்கையில் ஒன்று. ஆனால், கீழ்மட்ட ஜனங்களுக்கு மதம் ஒரு ஊன்றுகோலாக (பிளவு செய்யும் கருவியாக இல்ல...) சடங்குகளும், கொள்கைகளும் தேவைப்படுகின்றன.
கல்லிலே இறைவன் இருக்கின்றான் என்று சொல்லும் மூடர்காள்... என்று திருமூலர் சொல்வதும் இந்து மதம் தான். அன்பே சிவம் என்று அறியாத மடைமை என்று அவர் இகழ்வதும் இந்து மதம் தான்.
நீ என் மதத்தை பின்பற்றினால், சொர்க்கம் செல்ல்லாம். அங்கே அளவிடமுடியாத மதுவும், அளவான நிறைய கன்னிப்பெண்களும், விடலைப்பையன்களும் உன்னுடன் கூட இறைவன் வழங்குவான் என்று பேசுவது பிற மதங்கள்.
நன்றி
ஜயராமன் கருத்துக்களுக்கு நன்றி. இந்து மதத்தின் மேலுள்ள பற்றினால் கிறிஸ்துவ மதத்தை பற்றி கடுமையாக பேசி இருக்கிறீர்கள். இந்து மதம் உங்களை இப்படி பேசச் சொல்கிறது என்னுடைய பதிவின் நோக்கமே இது போன்ற துவேஷங்கள் மறைய வேண்டும் என்பதுதான். உங்கள் துவேஷங்களை ஒழிக்க முயற்சி செய்யுங்கள்.
இது என்னடா வம்பா போச்சு!
என்ன குமரன் சார்,
நான் எங்கே கிருத்துவ மத்த்தை பற்றி இழிவாக சொன்னேன்? நீங்கள் இந்த என் பின்னோட்டத்தை பற்றி சொன்னீர்களா? ஏன் என்றால்,இந்த என் பின்னோட்டத்தில் கிருத்துவ மத்தை பற்றி நேரிடையாகவோ, மறைமுகமாகவோ எதுவுமே இல்லையே?
இல்லை என் பிற பதிவுகளை பற்றி என் பிளாக்கில் நான் பதிந்ததை பற்றி சொல்கிறீர்களா? என்றால், எங்கும் நான் கிருத்துவ மத நம்பிக்கைகளை பற்றி இழிவாக சொல்லவே இல்லை என்று உறுதியாக சொல்லுவேன்.
தாங்கள் விளக்குங்கள்.
மதங்களை வைத்து சண்டைகள் வருவதால் மத்த்தையே தூக்கி எறிந்து விடலாமா? அப்படி செய்தால் சண்டைகள் நின்று விடுமா? எல்லா உலகமும் ஒரே மாதிரி சடங்குகள் நடப்பது சாத்தியம் தானா?
மதங்களுடன் பிற வேறு சமுதாய கொள்கைகளையும் (ஒருதார மணம், புலால் உண்ணாமை போன்ற) தூக்கி எறிந்து விடலாமா?
வாழு வாழவிடு என்ற முறையிலான ஒரு அமைப்பே இதற்கு தீர்வு. தங்கள் 'மத்த்தை ஒழி' என்ற கொள்கை (வார்த்தைக்கு மன்னிக்கவும்) எனக்கு சிறுபிள்ளைத்தனமாக தோன்றுகிறது.
என் மதம் தான் உசத்தி, மற்ற மதங்களை அழித்து என் மத பிரசாரத்தை செய்வோம் என்ற கொள்கையுடன் இருக்கும் சில மதங்கள் தாம் இவ்வாறு மத துவேஷங்களுக்கு வித்திடுகின்றன. முதலில் எல்லா மதங்களும் மத நல்லிணக்கத்தை பின்பற்ற வேண்டும். இதுவே நிரந்தர தீர்வு. என்று நான் நினைக்கிறேன்.
என் பின்னோட்டங்களால் நான் சொல்லாத விஷயத்தை என் பெயரில் ஈட்டுவது என்க்கு மேலும் பின்னோட்டமிட பயமாக இருக்கிறது.
நன்றி
///
நீ என் மதத்தை பின்பற்றினால், சொர்க்கம் செல்ல்லாம். அங்கே அளவிடமுடியாத மதுவும், அளவான நிறைய கன்னிப்பெண்களும், விடலைப்பையன்களும் உன்னுடன் கூட இறைவன் வழங்குவான் என்று பேசுவது பிற மதங்கள்.
///
இதில் நீங்கள் கிறிஸ்துவ மதத்தை குறிப்பிடுவது போல இருந்தது. தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
நீங்கள் கிறிஸ்துவ மதத்தை குறிப்பிடவில்லை என்றால் நல்லதே.( உங்களுடைய பிற பதிவுகளாலும் எனக்கு இந்த எண்ணம் வந்ததென்பது உண்மை)
ஒரு தார மணம், புலால் உண்ணாமை மதத்துடன் சம்பந்தப் படுத்தப்பட்டதல்ல என்பது என் கருத்து.
இது சிறுபிள்ளத்தனமாக தோன்றலாம் மதம் ஒழிந்தால்தான் மனிதனுக்கு ஞானம் கிட்டும் என்பது என் கருத்து. இதே கருத்தை வலியுறுத்திய புத்தர் பெயரால் மதம் உருவானது கொடுமை.
புத்தர் மதங்கள் ஒழியவேண்டும் என்று சொன்னாரா? இது என்ன புதிதாய் இருக்கிறதே.
ஒரு இறையாண்மையை எய்தியவன் சென்ற வழியை பின்பற்றுபவர்கள் எல்லோரும் அந்த மதக்கார்ர்கள் தானே.
சரி, மத்த்தை ஒழித்துவிட்டால் ஞானம் வரும் என்று சொன்னால், அவ்வாறு பெற்ற ஞானிகளை வழி நடக்கிறேன் பேர்வழி என்று ஒரு கூட்டம் கிளம்பும். அவர்களும் ஞானம் பெற. அப்படியே அது ஒரு வழியாகி விடுகிறது. புத்தருக்கு நடந்ததும் இதுதான். இதனாலேயே மதங்கள் (அதாவது வழிகள்) இல்லாமல் ஞானம் பெற முடியாது, இது நடமுறைக்கு ஒவ்வாது, இது வெறும் கனவு, என்பது மெய்யாகிறது. இதைதான் நான் சிறுபிள்ளைத்தனம் என்று சொன்னேன். தவறாய் கருதவேண்டாம்
தன் மதமே உயர்ந்தது மற்றவை இழிவானவை என்று எந்த மதம் சொல்கிறதோ அந்த மதம் நல்லிணக்கத்துக்கு தடை. அந்த மதம் தடை செய்யப்பட வேண்டும். மேலும், இறைவன் ஒருவனே. அவனே அடைய பல வழிகள் இருக்கின்றன என்ற உண்மையை வேதமாக கொண்ட இந்து மதத்தை உண்மையில் புரிந்துகொண்டவன் இவ்வாறு மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாக மாட்டான்
நன்றி
///
தன் மதமே உயர்ந்தது மற்றவை இழிவானவை என்று எந்த மதம் சொல்கிறதோ அந்த மதம் நல்லிணக்கத்துக்கு தடை. அந்த மதம் தடை செய்யப்பட வேண்டும். மேலும், இறைவன் ஒருவனே.
///
வழி மொழிகிறேன்.
என்னைப் பொறுத்தவரை இறையை அடைய மதம் தேவை இல்லை. மதங்களால் மனிதனுக்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம். அவ்வளவே.
தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி
தங்கள் விளக்கங்களும் கொள்கைகளும் என்னை கவர்கின்றன.
சரி, மதம் இல்லாமல் இறையை அடைவேன் என்று சொல்லும் தாங்கள் அது எவ்வாறு இயலும் என்று சொல்ல வேண்டும்.
ப்ளீஸ்.
நன்றி
May I come in?
//கல்லிலே இறைவன் இருக்கின்றான் என்று சொல்லும் மூடர்காள்//
இல்லை. கல்லிலும் இறைவன் இருக்கின்றான் என்பதே சரியென நினைக்கிறேன். இதைத் தான் இந்து மதமும் சொல்கிறது.
//( உங்களுடைய பிற பதிவுகளாலும் எனக்கு இந்த எண்ணம் வந்ததென்பது உண்மை)//
எனக்கும் தான் ஜெயராமன் சார். நம் மதத்தை உயர்த்திப் பிடிக்கலாம். அதற்காக, மற்ற மதத்தை தாழ்த்த வேண்டியதில்லை. (தவறு செய்தால் சுட்டிக் காட்டலாம்).
//மதங்களால் மனிதனுக்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம். அவ்வளவே. //
இல்லை குமரன். மதங்கள் மனிதனை நாகரீகமாக்கியது. இந்து மதத்தில் மூட அதிகம் நம்பிக்கை இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றால் சில் நன்மைகள் இருந்ததையும் பார்க்கவேண்டும். தீமைகள் என்பது நாம் ஒரு கருத்தை எப்படி interpret செய்கிறோம் என்பதும், அது எப்படி மற்றவைகளை புன்படுத்துவது என்பதையும் பொருத்தது. அமெரிக்கர்கள் தங்கள் தேசிய கொடியை உள்ளாடைகளில் design செய்துக்கொள்வார்கள். ஆனால் அதுவே அவர்கள் நம் தேசியக் கொடியை செய்தால் நமக்கு கோபம் வருவதில்லையா? அதுபோல தான்.
சிவராமன் இதுதான் உள்குத்தா? இப்போதான் சிறு பிள்ளைத்தனமுன்னு சொன்னீங்க அது உடனே ஒரு வஞ்சப் புகழ்ச்சி அணி வேறா? இருந்தாலும் விளக்கம் தருகிறேன்.
மதங்களை பின்பற்றாமல் என்றால் என் அடையாளம் இந்து, கிறிஸ்துவம் அல்லது இஸ்லாம் கிடையாது. மதம் மேல் உள்ள பற்றால்தான் உலகில் பிரச்சனைகள் எல்லாமே. எனக்கு இதனால் அடையாளம் இல்லை என்பதால் எனக்கு ஒரு இறைவனுக்கு மதமும் கிடையாது பெயரும் கிடையாது. இதனால் என்ன நன்மை என்றால் நான் ராமர் கோயில் கட்ட பாபர் மசூதி இடிப்பதில்லை. அப்படி இடித்ததால் தீவிரவாதம் ஊக்குவிப்பதில்லை. மசூதி இடிந்து விட்டதே என்று தீவிரவாதியாவதில்லை. மேலும் இந்த செயல்களுக்கு தார்மீகரீதியாக கூட துணை போவதில்லை.
மேலும் இந்த செயல்களுக்கு தார்மீகரீதியாக கூட துணை போவதில்லை. அதாவது நான் மதத்தை அடையாளங்களை இழந்ததால் நான் இதனைக் கண்டிக்கவும் உரிமை உண்டு என் நலனை பாதுகாக்கவே இதனை செய்தேன் என்று என் பின்னால் அவர்களால் ஒளிந்து கொள்ளவும் முடியாது.
மேலும் நான் காசி செல்வதால் புண்ணியம் கிடைக்கும், ஹஜ் யாத்திரை செல்வதால் சொர்க்கம் செல்லலாம் என்பதை எல்லாம் நம்பாதவன். நான் மத அடையாளங்களைத் துறந்ததால் எனக்கு எல்லா இடங்களும் கோயில்களே, எல்லா இடங்களும் தேவாலயங்களே, எல்லா இடங்களும் மசூதிகளே.
வாங்க சீனு நீங்கள் சொல்வதற்கும் நான் சொவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. தேசியக் கொடியை அணிவதை ஜாதி கொடுமைகளோடோ, GOD is white என்ற கொடுமைகளோடோ எப்படி ஒப்பிட முடியும். இது யார் பார்வையில் இருந்து பார்த்தாலும் தவறுதானே?
Post a Comment