Wednesday, March 29, 2006

பிரம்மன் தன்னிடத்திலுள்ள அழகையெல்லாம் உன்னிடத்தில் கொடுத்துவிட்டு

தன்னுடைய படைப்புகளுக்கு உன்னிடம் கையேந்தி நிற்கிறானாமே?

பிரம்மன்
தென்றலை இதத்தை தோற்றுவிக்க உன் மூச்சுக் காற்றை பயன்படுத்தினானேமே?

உன் புருவ இமையின் வடிவே வானவில்லுக்கு வைத்தானாமே?

இசையை உலகில் எல்லா பொருளிலும் வைக்க உன் சிரிப்பொலிதான் காரணமாமே?

சந்திரனின் பள்ளத்தாக்குகள் உன் கன்னக் குழியைக் கண்டதானாலான முயற்சியாமே?

மயக்கும் மல்லிகையின் மணமும், இனிய கனகாம்பரத்தின் சுகந்தமும் உன்னுடையதாமே?

குழந்தைகளின் சிரிப்பை சிரமமே இல்லாமல் உன்னிடம் வாங்கி கொண்டானாமே?

4 comments:

')) said...

என்ன ..சின்னப்புள்ளதனமால்ல இருக்குது.. :)




அன்புடன்

ரசிகவ் ஞானியார்

')) said...

ஆகா...காதலியிடம் கடவுளையே கையேந்த வைக்கிறதா காதல்?மிகவும் சிறப்பான சிந்தனை.

')) said...

Coming from Thiru. Kumaran, I thought it is also another stanza from the Sakala kalaa valli maalai!

Just imagine it that way, as a song in praise of Goddess Saraswathi!

')) said...

எஸ்.கே. சார். சகலகலாவல்லி மாலைக்குப் பொருள் எழுதிய குமரன் இந்தப் பதிவை இடவில்லை. :-)

ஆனாலும் நீங்கள் சொல்வது போல் இது பிரம்மனுக்கும் அவர் மனையாளுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறது.

செந்தில் குமரன், தொடர்ந்து உங்கள் கவிதைகளை, கற்பனைகளைப் பதித்து வாருங்கள்.