Wednesday, January 10, 2007

atheism-myth understood??!!

"பகுத்தறிவு என்பது மர்மங்களை அறிந்து கொண்டது. "

எங்கேயோ எப்போதோ படித்த வாசகம் இது. பல சமயங்களில் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன்.

சினிமா நடிகைகளின் இடுப்பு, அவர்கள் கட்டியிருக்கும் சேலை ஆகியவற்றுக்கு அடுத்து மனித குலத்தைக் ஆர்வத்தை சுண்டி இழுப்பதில் மர்மங்களுக்கு பெரிய பங்கு உண்டு.

பிரேமானந்தா போன்ற போலிச் சாமியார்களின் வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, கையில் விபூதி கொட்டச் செய்வது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு மனிதர்கள் ஏமாறுவது மனிதர்களுக்கு மர்மங்களில் உள்ள ஆர்வத்தாலும், ஈர்ப்பினாலும்தான்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை தவிர்த்தும் பல மர்மங்கள் இந்த உலகில் உண்டு.

ஆவிகள் என்பது இன்னும் மனிதர்கள் அறிந்து கொள்ள முடியாத மர்மம் தான். பெர்முடா முக்கோணம் என்பதும் இன்று மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவே இருக்கிறது. சில மனிதர்களுக்கு இருக்கும் சக்திகள் இல்லை சிலரால் செய்ய முடிகின்ற சில செயல்கள்(உதா யூரி கெல்லரின் ஸ்பூனை கண் பார்வையாலேயே வளைக்கும் திறன்) போன்றவை மர்மமாகவே இருக்கிறது. Ripley's beleive it or not போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படும் சில விஷயங்கள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இது போன்ற மர்மங்கள் அனைத்தையும் பகுத்தறிவு அறிந்து கொண்டேன் என்கிறது இந்த சொல்லாடல்.முதன் முதலில் இந்த வாசகத்தைப் படித்த சமயம், இவ்வளவு மர்மங்களையும் அறிந்தேன் என்று சொல்கிறதே என்ன ஒரு ஆணவமான சொல்லாடல் என்று தோன்றியது.

பின் யோசித்துப் பார்க்கும் சமயம் இன்றைய உலகில் மர்மங்கள் என்பது குறைந்து கொண்டே வருகிறதோ என்று தோன்றுகிறது.

Big bang என்பது தெரியும் முன்னால் எப்படி இந்த உலகம் உருவானது என்பதே ஒரு மிகப் பெரிய மர்மம்தான். இன்றும் அது மர்மம் இல்லை அதனை அறிந்து கொண்டேன் என்று சொல்ல இயலாது என்றாலும் அந்த மர்மத்தின் பல முடிச்சுகள் அவிழ்ந்து விட்டது என்பதை அறிவுள்ளோர் அனைவரும் ஒப்புக் கொள்வர்.

இதே போன்று பல மர்மங்களின் முடிச்சு அவிழ்ந்து கொண்டே தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஆவிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில ஒரு விதமான பிரமிப்பாக ஏற்படுகிறது. ஒரு ஆராய்ச்சியில் psychon என்ற பொருள் ஒன்று இருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் இந்த் பொருள்கள் உடலுக்குள் எல்லா இடங்களில் பரவி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பொருள் ம் உடலுக்குள் நம்முடைய உணர்வுகளை நரம்புகள் மூலம் எடுத்துச் செல்ல உதவுகின்றதாக கூறுகிறார்கள். மேலும் இந்த்ப் பொருள்கள் நாம் இறக்கும் சமயம் நம் உடலை விட்டு வெளியே வெளியேறி ஆவி போன்ற தோற்றம் அளிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சி மூலமாக நிறைவேறாத ஏக்கம், ஆசை உள்ளவர்கள் ஆவியாகுகிறார்கள் என்று இருக்கும் நம்பிக்கைகள் கூட விளக்க முடியும் என்கிறார்கள்.

உதாரணத்திற்கு கேபிள் இல்லாமல் ஆண்டனா மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் வீடுகளில் பக்கத்தில் கேபிள் ஒயர் சென்றால் சன் டீவி புள்ளி புள்ளியாக தெரிகிறது இல்லையா அது போலத்தான் இதுவும் என்கிறார்கள். நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கும் எண்ணங்கள் வெளியே கசிவதால் உண்டாகும் பிம்பங்களை பிரதிபலிப்பே ஆவி என்பது போல ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு ஏற்படும் உணர்வு அல்லது அவர்கள் யோசிப்பது சில சமயம் வாய் விட்டு சொல்லாமலே நமக்குப் புரிகிறது இல்லையா? அதுவும் இந்த வகையையே சார்ந்ததே.

இது ஒரு வகை ஆராய்ச்சியே வேறு விதமாகவும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களுக்கு இருக்கும் விஷேசமான சக்திகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

கண் தெரியாத ஒருவருக்கு ஏன் கேட்கும் திறன் அதிகமாக இருக்கிறது? அந்த சக்தியை அவர்கள் அதிகமாக நம்பி இருப்பதால் அந்த சக்தியை நமது மூளை அதிகமாக வளர்த்து விடுகிறது. இதே போல மோப்ப சக்தி மனிதர்களுக்கு ஏன் இல்லை ஏனெனில் மோப்ப சக்தியை நம்பி மனிதர்கள் வாழவில்லை. அவனுக்கு ஏதேனும் ஒரு காரணத்திற்காக அது அதிகமாக தேவைப்பட்டிருந்தால் அந்த சக்தி அவனுக்கு இருந்திருக்கும். இதே போல தான் விஷேசமான சக்திகளும் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டு வருகிறது.

ஒரு ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு ஏன் telepathy சக்தி இல்லை மனிதர்களுக்கு இது ஒரு அத்தியாவசியமான ஒரு தேவை இல்லை. அதனால் அந்த சக்தியை மூளை வளர்த்துக் கொள்வதில்லை என்று சொல்கிறார்கள். மேலும் அந்த ஆராய்ச்சியில் ஆபத்துக் காலங்களில் இல்லை நம்மையே அறியாமல் பல சமயம் நாம் டெலிபதி போன்ற சக்திகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். யாராவது நெருங்கிய உறவினருக்கு ஆபத்து ஏற்படும் சமயம் அவருக்கு நெருக்கமானவர்கள் அதனை உணர்வது போன்ற சம்பவங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதெல்லாம் நாம் நம்மை அறியாமலே telepathy உபயோகித்து செய்வதாக சொல்கிறார்கள்.

இந்த சக்திகளை மனிதர்களால் வளர்த்துக் கொள்ள முடியுமா என்றும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு பக்கத்து அறையில் மாட்டி இருக்கும் ஓவியம் என்ன என்பதை அறியும் ஆராய்ச்சிகள். இதன் மூலம் டெலிபதி உணர்வு மூளையின் எந்தப் பகுதியில் இருந்து செயல்படுகிறது என்பது போன்றவற்றை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

யூரி கெல்லர் spoonஐ வளைத்துக் காட்டியது போல இன்னும் பல விஷயங்கள் மனிதர்களால் செய்ய முடியும் ஆனால் spoonஐ வளைப்பதை விட வேறு முக்கியமான பல விஷயங்கள் இருப்பதால் அவர்கள் செய்வதில்லை என்றும் சொல்கிறது ஆராய்ச்சி.

இதே போலத்தான் பெர்மூடா முக்கோணம் குறித்த ஆராய்ச்சிகளும் காந்த சக்தி, மின் சக்தி போன்றவை இந்தப் பகுதிகளில் சீராக இல்லாத காரணங்களால் கப்பல்கள், விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் இல்லை வேறு விதமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஆகவே உலகில் உள்ள மர்மங்களை எல்லாம் அறிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவமானதாக ஆரம்பத்தில் தோன்றினாலும் அதனைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் சமயம் வேறு விதமாக தோன்றுகிறது.

அந்த சொல்லாடல் மர்மங்களை அறிந்து கொண்டேன் என்று சொல்வது மர்மங்களை முழுவதுமாக புரிந்து கொண்டேன் என்பது போல அர்தத்தில் இல்லை. ஆனால் அதன் அர்த்தம் எந்த விதமான மர்மமாக இருந்தாலும் அதனை புரிந்து கொள்ள தேவையான அறிவைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்வது போலத்தான் அமைந்திருக்கிறது.

நிற வெறி என்பது melanin பற்றிய மர்மத்தை அறிந்து கொள்ளாததால் உருவானது. ஜாதிகள் எல்லா மனிதர்களும் குரங்கில் இருந்து மனிதர்களாக வளர்ச்சி அடைந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாததால் உருவானது தான். இன்று ஏற்படும் மத சண்டைகள் பிரபஞ்சத் தோற்றத்தில் தொடங்கி எல்லா விஷயங்களிலும் பிற மதம் மட்டும் தப்பு தப்பாக போதிக்கவில்லை தன் மதமும் தப்பு தப்பாகத் தான் போதிக்கிறது என்பதை உணராததால் வருவது தான்.

மர்மங்களை புரிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவம் இல்லை அறியாமையில் இருந்து வெளியே வரும் ஒரு வாயில்.

மதனின் மனிதனும் மர்மங்களும் படித்த போது தோன்றிய சில சிந்தனைகள்.

23 comments:

')) said...

என்னுடைய சில கேள்விகளுக்கு விடையும், என்னுடைய பல கருத்துக்களின் பிரதிபலிப்பும், இன்னும் சில கேள்விகள் என் மண்டையில் உருவாகவும் உங்களின் இந்த பதிவு காரணம்..!!!

said...

\\ஜாதிகள் எல்லா மனிதர்களும் குரங்கில் இருந்து மனிதர்களாக வளர்ச்சி அடைந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாததால் உருவானது தான். \\

அப்படி அறிந்த பின் எங்கள் மூதாதையர் சிம்பன்ஸியிலிருந்து வந்தவர்கள் அதனால் நான் உயர்ந்தவன், உன்னுடைய மூததாதயர் சாதரண குரங்கிலிருந்து வந்தவர்கள் அதனால் நீ தாழ்ந்தவன் என்று மனிதன் கூறாதிருப்பானாக.

said...

are you live in scientific world and society.

can Your socalled telepathy to find the end of universe ...

from aasath

')) said...

Dear friend,

a few years back in Malayala Manorama year book i wrote a compilation of different mysteries. The best mystery compilation was done by Arthur C Clarke. He divided mysteries into mysteries of first, second and third kind. Lyall Watson, Colin Wilson and Charles Fort gave good frameworks (even though i find it impossible to accept some of their 'facts') for studying mysteries. Then there are fake mysteries like Bermuda triangle and genuine mysteries like origin questions. Personally i think people like Mathan are a curse -because they sensationalize without understanding the real nature of the clash of worldviews. Better check out these websites:
http://www.skepdic.com/
http://www.csicop.org/

')) said...

Interesting!!!

//இன்றைய உலகில் மர்மங்கள் என்பது குறைந்து கொண்டே வருகிறதோ என்று தோன்றுகிறது.//
இல்லை. இருக்கும் மர்மங்கள் தெளிவாக்கப்பட்டாலும், புதிது புதுதாக மர்மங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும், அண்டத்தின் எல்லை போல...

//Big bang என்பது தெரியும் முன்னால் எப்படி இந்த உலகம் உருவானது என்பதே ஒரு மிகப் பெரிய மர்மம்தான். //
ஆனால், பெரு வெடிப்பு என்பது அனுமானம் தானே?

//மேலும் இந்த்ப் பொருள்கள் நாம் இறக்கும் சமயம் நம் உடலை விட்டு வெளியே வெளியேறி ஆவி போன்ற தோற்றம் அளிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சி மூலமாக நிறைவேறாத ஏக்கம், ஆசை உள்ளவர்கள் ஆவியாகுகிறார்கள் என்று இருக்கும் நம்பிக்கைகள் கூட விளக்க முடியும் என்கிறார்கள்.//
அப்படிப் போடு! இதைத்தான் சித்தர்கள் காற்று என்று சொல்கிறார்களோ? உடலில் உயிர் பிரிவது என்பது கற்றின் ஊடே நடக்கிறது என்று சொல்கிறார்கள்.

விஞ்ஞானமும், நன் எண்ணங்களுக்கு சக்தி உண்டு என்று சொல்கிறார்கள். அப்படி என்றால், எண்ணங்களால் செய்கைகள் செய்ய முடியும். அப்டியானால், மாய மந்திரம் எல்லாம் சாத்தியம் தானே? "பார்! அந்த இரும்பை கண்ணாலேயே வளைத்து காட்டுகிறேன்" என்பது போல.

')) said...

கேள்விகள்..கேள்விகள்.. தொடர்தேடல் - இவைகளே வாழ்க்கையை சவாலாக எடுத்துக்கொள்ள வைக்கின்றன. அதுவே சரி.

')) said...

கேள்விகள் ..கேள்விகள் ..கேள்விகள் .. இவைகளின் தொகுப்பே மனிதனின், மனத்தின் தொடர் தேடல்கள். இவைகல்ளே வாழ்க்கையைச் சாரமுள்ளதாகவும், சவாலாகவும் ஆக்குகின்றன். அதுவே சரி.
யாருக்கு வேண்டும் முற்றுப் புள்ளிகள்; நமக்குத் தேவை கேள்விக்குறிகளே.

')) said...

/"பார்! அந்த இரும்பை கண்ணாலேயே வளைத்து காட்டுகிறேன்" என்பது போல./
கண் என்பது வெளியிலிருந்து ஆற்றலை உள்வாங்கும் கருவியேயன்றி வெளி உமிழும் கருவி அல்ல. ஆனால் உலகெங்கும் கண்ணிலிருந்து ஆற்றல் வெளியாகும் புனைவுகள் இருக்கின்றன. நெற்றிக்கண் உட்பட. சிறிது சிந்தித்தால் கண் பௌதீக ஆற்றலை வெளி உமிழாது மாறாக உணர்வு நிலைகளை வெளிக்காட்டும். ஆக, எரிக்கும் பார்வை என்பது தீ உமிழும் பார்வை என்பதைக் காட்டிலும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் பார்வை என்பது பொருந்தும். மன ஆற்றல் (psychic energy) என்பது ப்ராயிடோ உங்கோ பயன்படுத்துகையில் உணர்ச்சி ஆற்றலைக் குறிக்கிறது. இதனை பௌதீக ஆற்றலுடன் (தெளிவான வரையறை கொண்ட energy) தொடர்புபடுத்துவது தவறானது. வார்த்தை மயக்கங்களின் விளைவு இது. பிறகு நடப்பது ஜல்லியடிப்பு.

')) said...

// "பகுத்தறிவு என்பது மர்மங்களை அறிந்து கொண்டது. "//

இதன் விளக்கம் முழுமையாக உங்கள் பதிவிலிருந்து கிடைக்கவில்லை என்றாலும் ரொம்பவும் பயனுள்ள ஒரு பதிவு. ஆழ்ந்த சில சிந்தனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆவிகள் தொடர்பான ஒரு அறிவியல் புனைகதை எழுதியிருக்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன்.

என்னைப் பொருத்தவரை Big bang ஒரு கோட்பாடுதான் (hypothesis) ஒரு கற்பனைப் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் தோன்றியதை விளக்க உருவக்கப்பட்ட கோட்பாடுதான். Big bang க்கு முன்னான மர்மத்தின் முடிச்சுகளில் சில அவிழ்ந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

* * * * *

// ஜாதிகள் எல்லா மனிதர்களும் குரங்கில் இருந்து மனிதர்களாக வளர்ச்சி அடைந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாததால் உருவானது தான். //

அறிவியலை நீட்டித்து அதை மதங்களுடன் தொடர்புபடுத்தும்போது நான் உங்களிடமிருந்து மாறுபடுகிறேன். ஜாதிகள் தொழில் குறித்து உருவானவை. அவற்றுக்கும் குரங்குகளுக்கும் தொடர்பில்லை.

')) said...

//சினிமா நடிகைகளின் இடுப்பு, அவர்கள் கட்டியிருக்கும் சேலை ஆகியவற்றுக்கு அடுத்து மனித குலத்தைக் ஆர்வத்தை சுண்டி இழுப்பதில் மர்மங்களுக்கு பெரிய பங்கு உண்டு.

பிரேமானந்தா போன்ற போலிச் சாமியார்களின் வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, கையில் விபூதி கொட்டச் செய்வது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு மனிதர்கள் ஏமாறுவது மனிதர்களுக்கு மர்மங்களில் உள்ள ஆர்வத்தாலும், ஈர்ப்பினாலும்தான்.
//

நன்றாக சுவையாகவே எழுதி இருக்கிறீர்கள். ப்ரேமானந்தபோலவே மேலிடத்து சாமியார்களும் வாந்தியெடுக்கிறார்கள் அந்த மர்மங்களும் அதிகம் வெளியில் தெரிந்தும்தெரியாமலே இருக்கு.

கடைசியில் மதநல்லிணக்கத்துக்கு சொன்ன வரிகள் நன்று !

')) said...

/////
"பார்! அந்த இரும்பை கண்ணாலேயே வளைத்து காட்டுகிறேன்" என்பது போல./
கண் என்பது வெளியிலிருந்து ஆற்றலை உள்வாங்கும் கருவியேயன்றி வெளி உமிழும் கருவி அல்ல.
/////
நான் சொல்ல வந்தது, தன் எண்ணங்களால் செய்வதை, மாயாஜாலம் செய்வதைப் போல 'கண்ணாலேயே செய்கிறேன் பார்' என்று சொல்வதை...

')) said...

ரவி வருகைக்கு நன்றி கேள்வி உருவாவது ரொம்ப நல்லது தான்.

வருகைக்கு நன்றி ஸயீத். :-))).

ஆசாத் நான் அறிவியல்பூர்வமான ஒரு சமூகத்தில் தான் வாழ்கிறேன் என்று நம்புகிறேன். டெலிபதி மூலமாக பிரபஞ்சத்தின் எல்லைகளை கண்டுபிடிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறீர்கள் தெரியவில்லை. நான் டெலிபதி சக்தி வளர்த்துக் கொண்டால் தான் பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன் :-))).

')) said...

நீலகண்டன் உங்களுக்கு பதிவின் நோக்கம் புரியவில்லை என்று நினைக்கிறேன். இது மர்மங்கள் இருக்கிறதா இல்லையா என்பது குறித்த பதிவு அல்ல. இந்தப் பதிவு ஆவி போன்ற மர்மங்கள் இருக்கின்றன என்று முடிவு செய்து எழுதப்பட்டது. உங்களுக்கு ஆவி போன்றவற்றின் மேல் நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன். நான் படித்து அறிந்த வைத்திருக்கும் விஷயங்களால் நான் இவை இருக்கின்றன என்று நம்புகின்றேன்.

paranormal பற்றி பேசும் போது 95% கட்டுக் கதை என்றாலும் 5% பற்றி விளக்கம் இன்னும் இல்லை. யூரி கெல்லர் பற்றி சற்று படித்துப் பாருங்கள். இல்லாவிட்டால் Ripleys beleive it or not நிகழ்ச்சி பாருங்கள். 1,00,000 வாட்ஸ் மின்சாரத்தை தன் உடலில் பாய்த்து கொண்டு உயிரோடு இருக்கும் நபர்களை பார்ப்பீர்கள்.

இது போன்ற பல விஷயங்கள் உலகில் மர்மங்களாக இருக்கின்றன. அதனை இது வரையில் விளக்க நாம் நமது கற்பனைகளை பயன்படுத்தி வந்தோம். இன்று ஆராய்ச்சிகள் விளக்குகின்றன என்பதையே நான் விளக்க முயற்சித்திருக்கிறேன்.

')) said...

சீனு வருகைக்கு நன்றி. மர்மங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன என்பது உண்மை. அதே சமயம் மர்மங்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கங்களும் அதிகமாகி வருகிறது என்பதையே விளக்க முயற்சித்திருக்கிறேன் :-))). சீனு நீங்களே பெருவெடிப்பை இன்னும் அனுமானம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி. உலகம் அதனை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருப்பதை தான் அதற்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசு சொல்கிறதே. நோபல் போன்ற பரிசுகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட சித்தாந்தங்களுக்கு அல்லது கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்.

தருமி வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்னது உண்மை கேள்விகள் தான் சரியான வழியில் செல்வதற்கு எடுத்து வைக்கப்படும் முதல் அடி.

ஓகை ஐயா வருகைக்கு நன்றி. பகுத்தறிவு மர்மங்களை அறிந்து கொள்ளவில்லை அறிந்து கொள்ள முயற்சியில் இறங்கி உள்ளது. அப்படி இறங்கி உள்ளதேயே அப்படி குறிப்பிட்டிருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறேனே? பிரம்மன் தலையிலிருந்து இடுப்பிலிருந்து என்றெல்லாம் சொன்னதைத் தான் சொல்லி இருக்கிறேன். அதை வைத்துத் தானே ஒருவனை வேறு தொழில் செய்ய விடாமல் செய்தார்கள். அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் ஓகை ஐயா hypothesis என்பதில் இருந்து பெருவெடிப்பு இன்று accepted theroy ஆக மாறிக் கொண்டே வருகிறதும் உண்மை.

வருகைக்கு நன்றி கோவி. வாழ்த்துக்கும் நன்றி.

said...

Hi,
This is my favourite subject, u have handled it with merit. Hope you will write more.

')) said...

வருகைக்கு நன்றி r.selvakumar இது பற்றி இன்னும் எழுதும் அளவுக்கு விஷய ஞானம் இல்லை. தெரிந்ததை எழிதி இருக்கிறேன். மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் பகிர்கிறேன்.

')) said...

நண்பரே,

எனது புரிதலின் எல்லையை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி, முடிந்தால் சில வருடங்களுக்கு முன்னர் தீராநதியில் 'அதீத-உளவியல்' (para-psychology) குறித்து நான் எழுதிய கட்டுரையை வாசித்துப்பார்க்கவும். யூரி கெல்லரின் SRI-நேச்சர் சர்ச்சை முதலே இந்த விசயங்கள் குறித்த செய்திகளை சேகரித்து வருகிறேன் (1970களின் சயின்ஸ் டுடே முதல்). இந்த தேதி வரை இதற்கான தெள்ளத்தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றே சொல்லவேணும். யூரி கெல்லர் 'அதீத மனசக்தியால்' செய்கிற எந்த விசயத்தையும் ராண்டி போன்றவர்கள் கை-விளையாட்டில்/மாஜிக்கில் செய்திட முடிகிறது. மட்டுமல்ல சர்க்கார், ஹூடினி போன்றவர்கள் எந்த 'அற்புத சக்தியும்' இல்லாமல் அற்புத சக்தியால் செய்வதாக கூறப்படுகிற பல விசயங்களை செய்துள்ளனர். எனவேதான் மதன் போன்ற ஆசாமிகளின் இந்த மர்மக் கதைவிடுதல்களை தமிழனை முட்டாளாக்கும் முயற்சி என கருதுகிறேன். மர்மங்கள் இல்லையா என்றால் இருக்கின்றன. டைனோசார்களின் முடிவு, பறவைகளின் டைனோசார் மூலம், பூமியின் செயல்பாடு குறித்த Gaia கருதுகோள் உண்மையா?, நமது இருப்பும் பிரக்ஞையும், பெர்சிங்கர்-ராமச்சந்திரன்-நியூபெர்க் ஆகியோரின் பரிசோதனைகளில் வெளிப்படும் அகத்தின் ஆழங்கள், நம் நாட்டு அகழ்வாராய்ச்சி மர்மங்கள் (ஒரு நல்ல நூலை இது குறித்து NBT இறக்கியுள்ளது.) போன்றவை. பேய்-பிசாசு-ஆவி-குட்டிசாத்தான்-பறக்கும் தட்டு-ஜின் போன்றவை வெறும் ஜல்லியடியானவை.ஒரு வேளை மானுடமெங்கும் ஏன் இக்கற்பனைகள் உருவாக்கப்பட்டன என்பது சுவாரசியமான மர்மமாக இருக்கலாம்.
நன்றி.

அரவிந்தன் நீலகண்டன்

')) said...

//சீனு நீங்களே பெருவெடிப்பை இன்னும் அனுமானம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி.//
சிங்குலாரிடியில் எல்லாமே தவறாகிவிடும் பட்சத்தில், பெரு வெடிப்பை எப்படி 100% நம்புவது?
அதனால் சொன்னேன்.

')) said...

மீண்டும் வருகைக்கு நன்றி நீலகண்டன். யூரி கெல்லரை பொய்யரா என்பது குறித்து 20 ஆண்டுகளாக சர்ச்சைகள் நடந்து கொண்டு தான் வருகிறது. அதனைப் பற்றி நாம் சர்ச்சையில் ஈடுபடுவது ஒரு எல்லையில்லாத ஒரு விவாதத்தில் கொண்டு போய் விடும்.

நீங்கள் இன்றைய அறிவியல் வளர்ச்சி எதனை ஆராய முடியுமோ அதனை மட்டுமே ஒப்புக் கொள்வேன் என்று சொல்கிறீர்கள்.

But I am open to all possiblities.

இன்றைய அறிவியலில் ஆராய முடியாமல் ஆனால் அதனை ஆராய தேவையான விஷயங்களை சேகரித்து வரும் அறிவியலில் ஒரு பகுதியை நான் நம்புகிறேன்.(பி.கு. நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் traditional விஷயங்களை நான் நம்பவில்லை. ஆனால் அந்த traditional விஷயங்களுக்கு பின்னால் அறிவியல் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்களே அதனை நம்புகிறேன்.)

நான் இதனை நம்புவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பிரபஞ்ச விரிவடைதலைக் குறித்து ஐன்ஸ்டீன் ஒப்புக் கொள்ளவில்லை. Hawkings Radiation என்று பெயரிடப்பட்ட Black hole radiation குறித்து முதன் முதலில் ஹாக்கிங்ஸிடம் சொல்லப்பட்ட பொழுது அதனை அவர் மறுத்தார். பின் அதனை சரியான முறையில் கண்டுபிடித்து அவர் பெயரே வைக்கப்பட்டது.

ஆகவே எதனையும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அதனை மறுக்க முடிவதில்லை மறுக்கவும் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. மறுபடியும் சொல்கிறேன் traditionalஆக சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் notions என்பதை நம்பவில்லை ஆனால் இதனைப் பற்றி நடக்கும் ஆராய்ச்சிகளை நான் ஒப்புக் கொள்கிறேன்.

I am open to all possiblities which can be explained and which can be understood.

')) said...

சீனு சிங்குலாரிட்டியை விளக்க முடியாது என்பதால் big bang என்பது அனுமானம் ஆகி விடாதே. அப்பொழுது இருந்த பிரபஞ்ச நிலையை விளக்கும் இயற்பியல் விதிகள் இன்று நம்மிடையே இல்லை. இன்று இல்லை ஆனால் நாளையே கண்டுபிடிக்கப் படலாம் இல்லையா?

')) said...

//ஆனால் நாளையே கண்டுபிடிக்கப் படலாம் இல்லையா?//
அனுமானத்தை அறிவியல் ஒத்துக்கொள்கிறதா என்ன?

')) said...

நான் சொல்ல நினைத்தது வேறு மாதிரியாக வெளிப்பட்டு விட்டது.

சிங்குலாரிட்டியை விளக்க முடியாததால் பெரு வெடிப்பு நிகழவில்லை என்று சொல்வது தவறு.

சிங்குலாரிட்டி என்பதை எப்படி விளக்குகிறார்கள் என்றால்

A Point in space time where the curvature of space time is infinite. At a singularity, all the laws of physics would have broken down. This means that the state of the universe, after the Big Bang, will not depend on anything that may have happened before, because the deterministic laws that govern the universe will break down in the Big Bang. The universe will evolve from the Big Bang, completely independently of what it was like before. Even the amount of matter in the universe, can be different to what it was before the Big Bang, as the Law of Conservation of Matter, will break down at the Big Bang.

சிங்குலாரிட்டி என்ற சம்பவம் நிகழ்ந்த சமயம் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதை நம்மால் விளக்க முடியாதால் இந்த சித்தாந்தமே தவறு என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

இதற்கு பல விளக்கங்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன.

சிங்குலாரிட்டியை விளக்க இயலாததால் பெரு வெடிப்பு அனுமானம் என்பது சரியல்ல என்றே சொல்கிறேன்.

இதனை மேலும் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

said...

இதோ இன்னொரு மர்மம் உங்களின் பிறந்த தினம் 8 ,17,26 என்ற நாட்களில் இருக்கும். அல்லது மாதம் ,அல்லது வருடம் கூட்டுத்தொகை 8 ஆக இருக்கும்.