Friday, October 07, 2005

அது ஒரு நிலா காலம் ( பள்ளி பருவம் )

நிலா காலங்களுக்கு இனிமை சேர்ப்பது எது?
நிலவு மட்டுமா?
இல்லை
நிலா காலங்களில்,
தென்றல் தவழ்ந்து மெய்யில் கலக்கும்,
அமைதி கீதம் பாடி தாலாட்டும்,
நட்சத்திரங்கள் கேலி செய்து கண்களை சிமிட்டும்,

ஆயினும் நிலவு பற்றிய நினைவுகள் மட்டுமே சுமக்கும் இந்த நிலா காலம்

இந்த தொகுப்பு என் நிலா காலம் பற்றி அல்ல
அந்த காலத்தின் நிலவு பற்றியது

என் நிலா காலம் பற்றி சொல்லும் நிலவை வருணிக்கிறேன்,

நக்கீரருக்கு மூன்றாம் கண் இருந்தால் என்னை சுட்டெரித்து இருப்பார்
பொருளிலே பிழை செய்கிறேனே.

என் நிலவை வருணிக்க ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனாலேயே முடியாதே
என்னால் முடியுமா?

வருணிக்க முடியாவிடிலும் என் நிலவை நீங்களும் காண முடியும்.

கண் மூடி பிரம்மன்

குழந்தையின் சிரிப்பில் வைத்த அழகை,
பூவின் சுகந்ததிலும், மென்மையிலும் வைத்த அழகை,
இப்படியே ஒவ்வொரு பொருளிலும் தனிதனியாக வைத்த அழகை எல்லாம் சேர்த்து பாருங்கள்

நிலவு உங்களுக்கும் தெரியும்.

நிலவு எதிரே வரும் நேரம், நிலவை கடந்து செல்லும் நேரம், நிலவை ரசிக்கும் நேரம் எதிர் பாராமல் நிலவு காணும் நேரம்
நிலவின் உதட்டில் ஒரு புன்னகை வருமே அதற்காகவே ஏங்கி காத்திருக்கும் காலம் நிலா காலம்

நிலவு அப்படி புன்னகைக்கும் நேரத்தின் நினைவுகள் மனதில் உறைந்த காலம் நிலா காலம்.

சில சமயம் கவலை வரும் சமயம் நிலவு சொல்லுமே "கவலைப்படாதே" என்று அதற்காகவே
நிலவின் முன் கவலை கொண்ட காலம் நிலா காலம்

நிலவின் வார்த்தைகளை நினைத்து இன்றும் புத்துணர்ச்சி அளிக்கும் காலம் நிலா காலம்

சில சமயம் வெட்கி தலை குனியும் சமயம் நிலவின் பார்வையில் தெரியுமே ஒரு கனிவு அதற்காகவே
வெட்கம் பற்றி கவலை துறந்த காலம் நிலா காலம்.

நிலவின் பார்வை நினைத்து இன்றும் சிலிர்ப்பு கொள்ளச் செய்யும் காலம் நிலா காலம்.

சில சமயம் கோபம் கொண்ட பிறகு நிலவின் பார்வை பாராமல் வெட்கி தலை குனிய அதற்காகவே
நிலவு முன் கோபம் அடக்கிய காலம் நிலா காலம்

இன்றும் தலை குனிந்ததை எண்ணி புன்னகைக்கும் காலம் நிலா காலம்.

நிலவை கண்ட பிறகே சுரியன் உதிக்கும் உணர்வை கொண்டு திரிந்த காலம் நிலா காலம்

நிலவுடம் பேசுவதற்க்காக வார்த்தைகளை கற்று நிலவை கண்டவுடன் அதையும் மறந்து திரிந்த காலம் நிலா காலம்

நிலவு பேசிய சில வார்த்தைகளை அடுத்த முறை நிலவு பேசும் வரை நினைத்து புன்னைகைத்து திரிந்த காலம் நிலா காலம்

நிலவுக்காக மட்டுமே யோசித்து, நடந்து, உண்டு, உறங்கிய காலம் நிலாக் காலம்,
நிலா கால நினைவுகள் இனிமை என்றாலும் நிலா காலம் எப்பொழுதும் நினைவில் நிற்பதற்கு காரணம்
நிலவு என்பது என்னைப் போன்ற சராசரி மனிதன் காண மட்டுமே முடியும் என்பதை நினைவுட்டுவதற்கே
யோசித்து பார்க்கிறேன்
காதல் என்னவென்று
மனதுக்குள் ஒரு குழப்பம்

சட்டென

வானில் நிலவு தோன்ற
மேகமூட்டம் விழகுவது போல

மனதில் அவள் முகம் தோன்ற
பனித்திரை போல குழப்பம் கறைகிறது

விடை கிடைக்கிறது

மனது சஞ்சலத்தில் தவிக்கும் சமயம்
அவள் முகம் தோன்றி கிடைக்குமே
அமைதி அதுதான் காதல்

மனம் அமைதியில் ஆழும் சமயம்
அவள் நினைவு தோன்றி கிடைக்குமே
மகிழ்ச்சி அதுதான் காதல்

மனம் குழப்பத்தில் தடுமாறும் சமயம்
அவள் குரல் மனதில் ஒலிக்க கிடைக்குமே
நம்பிக்கை அதுதான் காதல்

மனம் நம்பிக்கை இழக்கும் சமயம்
அவள் பெயரை உதடு தன்னிச்சையாக உச்சரிக்க கிடைக்குமே
உற்சாகம் அதுதான் காதல்

மனம் உற்சாகம் அடையும் நேரம்
அவள் வார்த்தை மனதில் தோன்ற கிடைக்குமே
உதட்டோரசிரிப்பு அதுதான் காதல்

மரணம் வரும் வரை உணர்வுகள் உண்டெனில்
உணர்வு உள்ள வரை இருக்கும் காதல்.
Autograph padam parthutu kirukiyathu

என் ஆட்டோகிராப்பில் காதலிகள் இல்லை காதலி மட்டுமே

முதல் முத்தத்தின் ஈரம் படிந்தது இல்லை
கண்ணீரின் ஈரம் மட்டுமே...

பிரியமானவளின் தொடுகையால் சிலிர்த்தது இல்லை
கண் பார்வையால் மட்டுமே...

காதலில் வானவில் கண்டு களித்தது இல்லை
காதலியின் முகத்தை மட்டுமே...

காதலிக்கு பரிசுகள் கொடுத்தது இல்லை
இதயத்தை மட்டுமே

காதலியின் தந்தை நிந்தித்தது இல்லை
புறக்கணிப்பு மட்டுமே...

காதலியின் பட்டுக் குஞ்சம் என்னிடம் இல்லை
நினைவுகள் மட்டுமே...

காதலியின் நினைவுகள் என்னுள் இறக்கவில்லை
நினைவுகளோடு மட்டுமே இறக்க போவது உண்டு.